அஸ்வெசும முதலாம் கட்ட மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் புதிய புள்ளிவிவரங்கள்
மறுசான்றளிப்பு மற்றும் முதலாம்கட்ட மீளாய்வு முடிவுகள்
மறுசான்றளிப்பு – முக்கிய புள்ளிவிவரங்கள்
அஸ்வெசும மறுசான்றளிப்பு மற்றும் 2022ஆம் ஆண்டு அஸ்வெசும பட்டியலுடன் ஒப்பிடப்பட்ட தகவல்களின்படி, பயனாளிகளின் வகைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 3,31,693 குடும்பங்கள் அஸ்வெசும திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை – 14 லட்சம் பேருக்கு உதவி கிடைக்காது
புதிய நலன்புரித் திட்டத்தின் கீழ், சுமார் 14 லட்சம் பேர் அஸ்வெசும நலன்புரி உதவிகளைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்களாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறையின் கீழ், பயனாளிகள் மிகவும் வறியவர்கள் மற்றும் வறியவர்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, நலன்புரி உதவிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
| பிரிவு | தகுதி பெற்றோர் | மாதாந்தக் கொடுப்பனவு |
|---|---|---|
| மிகவும் வறியவர்கள் | 3,63,142 | ரூ. 17,500 |
| வறியவர்கள் | 6,28,658 | ரூ. 10,000 |
| முதலாம் பெயர்ப் பட்டியல் (மொத்தம்) | 9,91,800 | — |
2023ஆம் ஆண்டு நலன்புரி நன்மைகள் சபையினால் அஸ்வெசும நலன்புரித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, நான்கு பயனாளர் பிரிவுகளின் கீழ் 18,068,407 குடும்பங்கள் தகுதி பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம்கட்ட மீளாய்வு முடிவுகள் வெளியீடு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மீளாய்வு விண்ணப்பங்களில் தெரிவுசெய்யப்பட்டோர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணைப்பின் ஊடாகத் தங்களது முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
முடிவுகளைப் பார்வையிடபட்டியலைப் பார்வையிடும் படிமுறைகள்
- மேலே உள்ள இணைப்பை அழுத்தவும்.
- உங்களது மாவட்டம் (District), பிரதேச செயலகம் (Divisional Secretariat), கிராம உத்தியோகத்தர் பிரிவு (GN Division) ஆகியவற்றை முறைப்படி தெரிவு செய்யவும்.
- அல்லது, உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை (NIC Number) உள்ளிட்டும் முடிவைச் சரிபார்க்கலாம்.
தகவல் மூலம்: நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board)


Comments
Post a Comment