E-Akaram
E-AKARAM
TOP NEWS
Fetching updates...

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்கள அரச வேலைவாய்ப்பு - 2026

🐘 தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் வெற்றிடங்கள்

நிலவுகின்ற வெற்றிடங்களுக்குத் தகைமையுடைய வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

⏰ இறுதித் திகதி : 2026.10.31
மொத்த பதவிகள்19 வகை
வயது18 – 45
தெரிவு முறைநேர்முகப் பரீட்சை
நிரந்தர / ஓய்வூதியம்உண்டு

01. பாதுகாப்பு காவலர் (ஆண்) / பூங்கா உதவியாளர் / களஞ்சியலாளர் / சாரதி உதவியாளர் / கள உதவியாளர் III தரம் (PL-01)

  • கல்வித் தகைமை : க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத முறைகளுக்குள் குறைந்தது இரண்டு (02) சிறப்புச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
  • தொழிற் தகைமை : கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையில் துறை சார்ந்த அனுபவம் மேலதிக தகைமையாகக் கருதப்படும்.
  • வயது : 18 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல்.
  • சம்பளம் : ரூ. 40,000 – 10×450 – 10×490 – 10×540 – 12×590 – ரூ. 61,880/-
  • இணைத்துக் கொள்ளும் முறை : கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை.

02. ஆய்வக உதவியாளர் / டிராக்டர் செயற்பாட்டாளர் / இயந்திர செயற்பாட்டாளர் (பெக்கோ) / விலங்குப் பொறுப்பாளர் / விலங்குணவு சேகரிப்பாளர் / மீனின பொறுப்பாளர் / தொழிலாளர்கள் / தச்சுத் தொழிலாளர்கள் / கட்டடத் தொழிலாளர்கள் / வர்ணம் பூசுபவர்கள் / சங்கிலி வாள் செயற்பாட்டாளர்கள் / குழாய் பொருத்துனர்கள் / தச்சர்கள் III தரம் (PL-02)

  • கல்வித் தகைமை : க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத முறைகளுக்குள் குறைந்தது இரண்டு (02) சிறப்புச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
  • தொழிற் தகைமை : உரிய பதவிக்கு ஏற்ப மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ள தேசிய தொழிற்கல்வித் தகைமை (NVQ) குறைந்த பட்சம் இரண்டாம் மட்டத் திறமையைப் பெற்றிருத்தல்.
  • வயது : 18 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல்.
  • சம்பளம் : ரூ. 41,800 – 10×490 – 10×540 – 10×590 – 12×630 – ரூ. 65,560/-
  • இணைத்துக் கொள்ளும் முறை : கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை.

03. யானைப் பொறுப்பாளர்கள் II தரம் (PL-02)

  • கல்வித் தகைமை : 8-ஆம் வகுப்பு சித்தி.
  • தொழிற் தகைமை : நடைமுறைத் தேர்வொன்றின் மூலம் தெரிவு செய்யப்படுதல்.
  • சம்பளம் : ரூ. 41,800 – 10×490 – 10×540 – 10×590 – 12×630 – ரூ. 65,560/-
  • இப்பதவி நிரந்தரமானது; ஓய்வூதியத்தைக் கொண்டது. விதவை/தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய முறைமைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
  • நியமனம் ஏற்றுக்கொண்ட திகதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் வினைத்திறன் தடை காண் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
  • 2020.10.16 திகதிய அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 18/2020 இன் பிரகாரம் ஏனைய அரச மொழியில் நிபுணத்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

📋 வெற்றிடங்களின் விபரம்

இல.பதவிசேவை வகுதிமொத்தம்தெஹிவளை மிருகக்காட்சிசாலைபின்னவல யானைகள் சரணாலயம்பின்னவல மிருகக்காட்சிசாலைரிதியகம சபாரி பூங்கா
1ஆய்வக உதவியாளர்PL-211---
2யானைப் பொறுப்பாளர்PL-21563-6
3டிராக்டர் செயற்பாட்டாளர்PL-2311-1
4இயந்திர செயற்பாட்டாளர் (பெக்கோ)PL-21---1
5விலங்குணவு சேகரிப்பாளர்PL-211---
6மீனின பொறுப்பாளர்PL-244---
7தச்சுத் தொழிலாளர்கள்PL-233---
8தொழிலாளர்கள்PL-2321--
9தச்சுத் தொழிலாளர்கள்PL-21--1-
10கட்டடத் தொழிலாளர்கள்PL-211---
11வர்ணம் பூசுபவர்கள்PL-222---
12குழாய் பொருத்துனர்கள்PL-221-1-
13தச்சர்கள்PL-232-1-
14சங்கிலி வாள் செயற்பாட்டாளர்கள்PL-2321--
PL-1 பதவிகள்
15பாதுகாப்பு காவலர் (ஆண்)PL-11513--2
16பூங்கா உதவியாளர்PL-1732-2
17களஞ்சியலாளர்PL-111---
18சாரதி உதவியாளர்PL-111---
19கள உதவியாளர்PL-163--3

📎 இணைக்க வேண்டிய ஆவணங்கள்

  • பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • தேசிய அடையாள அட்டை / செல்லுபடியான கடவுச்சீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • கல்விச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் (க.பொ.த சா/த, உ/த)
  • கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ் (DS 04 படிவம்)
  • டிராக்டர் செயற்பாட்டாளர் / இயந்திர செயற்பாட்டாளர் (பெக்கோ) / சாரதி உதவியாளர் பதவிகளுக்கு: சாரதி அனுமதிப்பத்திரத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

⚠️ முக்கிய அறிவுறுத்தல்கள்

  • தகைமைகளை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்; அதில் சித்தியடைவோர் தொழில் பரிசோதனைக்கு அழைக்கப்படுவர்.
  • ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
  • தவறான தகவல்களை வழங்கினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்; நியமனம் வழங்கப்பட்டிருந்தாலும் இரத்து செய்யப்படும்.
  • இறுதித் திகதிக்குப் பின் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • சிங்களம், தமிழ், ஆங்கில உரைகளுக்கிடையே வேறுபாடு ஏற்பட்டால் சிங்கள மொழி உரை அமுல்படுத்தப்படும்.
✉️ விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
பணிப்பாளர் நாயகம், தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம்,
அநகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை.
உறையின் இடது பக்க மேல் மூலையில் "உதா - விலங்குப் பொறுப்பாளர் III தரத்திற்கான விண்ணப்பம்" என்றவாறு பதவியைக் குறிப்பிட்டு, 2026.10.31 அல்லது அதற்கு முன் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்பவும்.
🌐 இணையத்தளம் : www.nationalzoo.gov.lk
« புதிய பதிவு பழைய பதிவு »
E- AKARAM | S DILEKSHAN

Posted by

S. DILEKSHAN [ NDT ]

Comments

E-AKARAM ×