E-Akaram
E-AKARAM
TOP NEWS
Fetching updates...

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்கள் வழங்குதல் – ரூ. 10,000 வவுச்சர்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் – நலன்புரி பிரிவு

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்

ரூ. 10,000.00பெறுமதியான வவுச்சர் – பாடசாலை உபகரணங்கள், பாடசாலைப் பை மற்றும் காலணிகளுக்குப் பதிலாக
விண்ணப்பங்கள் ஆரம்பம்2026.10.26
விண்ணப்பங்கள் முடிவு2026.12.11

திட்டம் பற்றி

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தற்போது வெளிநாட்டில் வசித்து வருபவர்களும், வெளிநாட்டில் தொழில் புரிந்து மீண்டும் இலங்கைக்கு வருகை தந்தவர்களுமான குறைந்த வருமானம் பெறும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், பணியகத்தின் நலன்புரி பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வித் தேவைகளுக்காகப் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படும் செலவினை ஓரளவு குறைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

பணியகத்தின் பணிப்பாளர் சபைத் தீர்மானத்திற்கமைய, இத்திட்டத்தின் கீழ் இதுவரை பொருட்களாக வழங்கப்பட்ட பாடசாலை உபகரணங்கள், பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளுக்குப் பதிலாக, ரூ. 10,000.00 பெறுமதியான வவுச்சர்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகைமை அளவுகோல்கள்

  1. இத்திட்டத்திற்குத் தகைமை பெறுவது புலம்பெயர் தொழிலாளரின் பிள்ளைகள் மாத்திரமேயாகும்.
  2. சம்பந்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர், பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டிற்குச் சென்றவராக இருத்தல் வேண்டும்.
  3. பணியகத்தின் தரவுத் தொகுதியின் பிரகாரம், சம்பந்தப்பட்ட தொழிலாளரின் மாதாந்த சம்பளம் 400 அமெரிக்க டொலர்களுக்குச் சமமாகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருத்தல் வேண்டும்.
  4. தற்போது வெளிநாட்டில் தொழில் புரிந்துகொண்டிருப்பவராயின், பணியகத்தில் பதிவு செய்த திகதியிலிருந்து ஒரு வருடகாலம் நிறைவடைந்த பின்னரே விண்ணப்பிக்கத் தகைமை பெறுவர்.
  5. வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு மீண்டும் வருகை தந்த தொழிலாளராயின், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் வெளிநாட்டில் பணியாற்றியிருத்தல் வேண்டும் என்பதுடன், இலங்கைக்கு மீண்டும் வருகை தந்து 03 வருடங்களுக்கு மேற்பட்டிருக்கக் கூடாது.
  6. புலம்பெயர் தொழிலாளரின் பிள்ளை இதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து பாடசாலை உபகரண உதவியைப் பெற்றிருக்கக் கூடாது.
  7. அரசாங்க அல்லது தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 01 முதல் தரம் 12 வரையிலான பிள்ளைகள் இத்திட்டத்திற்குத் தகைமை பெறுவர்.
  8. பாடசாலைக்குச் செல்லாத விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளும், உரிய மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில், கல்வி உபகரணங்களின் பட்டியல், விவரக் குறிப்புகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களுக்குட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.
  9. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவங்களை அபிவிருத்தி உத்தியோகத்தர் (வெளிநாட்டு வேலைவாய்ப்பு) அவர்களிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் மேலதிக அறிவித்தல் எதுவுமின்றி நிராகரிக்கப்படும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • விண்ணப்பப் படிவம்
  • பாடசாலை அதிபரின் பரிந்துரை
  • பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று
  • புலம்பெயர் தொழிலாளரின் கடவுச்சீட்டின் உயிரியல் தரவுகள் அடங்கிய பக்கத்தின் பிரதியொன்று
  • வெளிநாட்டிற்குச் சென்றமை மற்றும் மீண்டும் நாட்டிற்கு வந்தமை தொடர்பான கடவுச்சீட்டின் குடிவரவு / குடியகல்வு முத்திரைகள் பதிக்கப்பட்ட பக்கங்களின் பிரதிகள்(இலங்கைக்கு மீண்டும் வருகை தந்தவர்களுக்கு மாத்திரம்)
  • வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ்

விண்ணப்பப் படிவத்தில் நிரப்ப வேண்டியவை

  • வெளிநாட்டிற்குச் சென்றுள்ள / நாடு திரும்பிய நபரின் முழுப் பெயர்
  • முகவரி
  • வெளிநாடு சென்ற திகதி
  • மீண்டும் இலங்கைக்கு வந்த திகதி (நாடு திரும்பியவர்களுக்கு மட்டும்)
  • அடையாள அட்டை இலக்கம்
  • கடவுச்சீட்டு இலக்கம்
  • கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • பிரதேச செயலகம்
  • மாவட்டம் மற்றும் மாகாணம்
  • வெளிநாட்டில் தொழில் புரியும் நபரின் மாதாந்த சம்பளம் (அமெரிக்க டொலரில்)
  • உபகரணங்களைக் கோரும் பிள்ளையின் முழுப் பெயர்
  • 2027 ஆம் ஆண்டில் கல்வி கற்கவுள்ள தரம்
  • தாய் / தந்தை / பாதுகாவலரின் பிரகடனம், பெயர், தொலைபேசி இலக்கம், கையொப்பம் மற்றும் திகதி

விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் படிகள்

  1. பாடசாலை அதிபரின் பரிந்துரைஅதிகபட்சம் ரூ. 10,000.00 க்கு உட்பட்டு; அதிபரின் கையொப்பம், திகதி மற்றும் உத்தியோகபூர்வ முத்திரை
  2. அபிவிருத்தி உத்தியோகத்தரின் (வெளிநாட்டு வேலைவாய்ப்பு) பரிந்துரைபிரிவு 16 – பரிந்துரைக்கிறேன் / பரிந்துரைக்கவில்லை
  3. பிரதேச செயலாளரின் அங்கீகாரம்பாடசாலை உபகரணத் தொகுப்பை வழங்குவதற்கான அங்கீகாரம்; கையொப்பம், திகதி மற்றும் முத்திரை
  4. சிரேஷ்ட முகாமையாளரின் பரிந்துரைபணியகத்தில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி சம்பளம் 400 அமெரிக்க டொலர்களுக்குக் குறைவாக இருப்பதால் வழங்குவது பொருத்தமானது எனப் பரிந்துரைத்தல்
கவனத்திற்கு: ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பின், ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியான விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் பிரதி அபிவிருத்தி உத்தியோகத்தரால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவம் இலக்கம்: WE/F(T)/45  |  வெளியிடப்பட்ட திகதி: 23.10.2026
« புதிய பதிவு பழைய பதிவு »
E- AKARAM | S DILEKSHAN

Posted by

S. DILEKSHAN [ NDT ]

Comments

E-AKARAM ×