N E W S

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை புலமைப்பரிசில் 2026

ACYMMAC SCHOLARSHIP 2026

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை புலமைப்பரிசில் 2026

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான 18 மாத நிதி உதவித் திட்டம்

தேதி: 01 செப்டம்பர், 2026

➤ அறிமுகம்

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை (ACYMMAC) 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி நிறுவப்பட்டு, கடந்த 76 வருடங்களாக இளைஞர் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு தேசிய அளவிலான அரச அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனமாகும். இலங்கை முழுவதும் 150க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது.

இந்த ஆண்டு பேரவையின் முக்கிய திட்டமாக, 2025 (2026) ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய 300 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட உள்ளது. இது 18 மாத கால நிதி உதவித் திட்டமாகும்.

300புலமைப்பரிசில்கள்
18மாத நிதி உதவி
6மாவட்டங்களில் நேர்முகம்
திட்டம் ஆரம்பமாகும் மாதம்
ஜனவரி 2027

➤ தெரிவு செய்யப்படும் முறை

2025 (2026) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மிகவும் சிறப்பாக செயலாற்றிய, தேவையுடைய மாணவர்கள் பின்வரும் மாவட்டங்களில் நடத்தப்படும் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்:

  • கொழும்பு
  • களுத்துறை
  • கண்டி
  • அனுராதபுரம்
  • மட்டக்களப்பு
  • அம்பாறை

➤ விண்ணப்பிக்கும் முறை

மாணவர்கள் எமது Online தளம் (Google Forms) மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தின் PDF பிரதி, வழிகாட்டல் தாள் மற்றும் Google Form இணைப்பு 01 செப்டம்பர் 2026 முதல் பின்வரும் வழிகளில் பதிவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும்:

➤ 1. தகுதி

  • 17 பெப்ரவரி 2026 அன்று நடைபெற்ற 2025 (2026) க.பொ.த சாதாரண தர பரீட்சையை எழுதிய ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

➤ 2. தெரிவுக்கான தேவையான தகுதிகள்

உயிரியல் மற்றும் பௌதீக விஞ்ஞானப் பிரிவுகளுக்கு: குறைந்தது 6 A சித்திகள் அவசியம்.
ஏனைய பிரிவுகளுக்கு: குறைந்தது 4 A சித்திகள் கட்டாயமாகும்.
உயர்தரப் பரீட்சையை பாடசாலை மாணவராக (School Candidate) எழுதவுள்ளவர்கள் மட்டுமே இப்புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படுவார்கள். தனியார் மாணவராக (Private Candidate) உயர்தரம் எழுத எண்ணுபவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.

➤ 3. கூடுதல் தகவல்கள்

  • விண்ணப்பப் படிவம் ஆங்கில மொழியில் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி: 30 செப்டம்பர் 2026.
  • விண்ணப்பதாரரின் தற்போதைய பாடசாலை அதிபரின் சான்றுரை கட்டாயம்.
  • YMMA அங்கத்தவர் ஒருவரின் சான்றுரை கட்டாயம்.
  • உங்கள் பிரதேசத்தில் YMMA அங்கத்தவர் இல்லையெனில், பிரதேச மஸ்ஜித்தின் சான்றுரை கட்டாயம்.
  • Row No. 32, 33, 34, 35 மற்றும் 36 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் புகைப்படப் பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்.
  • மேலே குறிப்பிட்ட சான்றுரைகளுடன் கூடிய விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது; இரட்டை விண்ணப்பங்கள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது.
● சீரான மற்றும் எளிதான விண்ணப்ப செயன்முறைக்காக, விண்ணப்பங்களை Online மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்து விண்ணப்பதாரர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு: 0777 575 418
தொலைபேசி: +94 11 269 40 75
மின்னஞ்சல்: acymmac@gmail.com
முகவரி: இல. 63, ஸ்ரீ வஜிரஞானா மாவத்தை, கொழும்பு 09

M.R.M. Ziyadh — National President  |  Rizvi Farouk — Chairman, Scholarship Committee

தகவல் மூலம்: All Ceylon Young Men's Muslim Association Conference (ACYMMAC)

● பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்!

WhatsApp Channel இணைய

Post a Comment

Previous Post Next Post