UGC அறிவிப்பு
பல்கலைக்கழக அனுமதி 2025/2026 – இரண்டாம் கட்ட தெரிவுப் பட்டியல் (Waiting List 2)
2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாம் கட்ட தெரிவுப் பட்டியல் (Filling of Vacancies – Step 2 / Waiting List 2) தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) வெளியிடப்பட்டுள்ளது. இச்சுற்றில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தங்களுக்குரிய தெரிவுக் கடிதத்தை (Letter of Selection) தரவிறக்கம் செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமது பதிவுகளை முழுமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய தகவல்கள்
நிறுவனம்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)
கல்வியாண்டு2025/2026
கட்டம்Waiting List 2 / Step 2
பதிவு முடிவு திகதி17.09.2026
● பதிவு செய்வதற்கான கடைசித் திகதி: 17.09.2026
தெரிவுக் கடிதத்தைப் (Letter of Selection) பெறுவதற்கான வழிமுறைகள்
பல்கலைக்கழக பதிவை மேற்கொள்வதற்கு தெரிவுக் கடிதம் மிகவும் அவசியமான ஆவணமாகும். இதில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறி தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
- UGC-யின் உத்தியோகபூர்வ மாணவர் பதிவு போர்ட்டலுக்குச் செல்லவும்.
- உங்களது விண்ணப்ப இலக்கம் (Application Number) அல்லது க.பொ.த உயர்தர சுட்டெண் (A/L Index Number) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும் (Sign in).
- "Letter of Selection" என்ற தெரிவை கிளிக் செய்து, அதனை PDF வடிவத்தில் தரவிறக்கம் செய்து அச்சிட்டுப் (Print) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
- அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களைச் சரிபார்த்த பின்னர் இணையவழிப் பதிவை (Online Registration) தொடரவும்.
மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள உத்தியோகபூர்வ இணையத்தளங்களை பார்வையிடவும்.
