சிறுவர்களுக்கான சித்திரப்போட்டி • 2026
அருணலு சித்திரம் 2026
வர்ணங்களால் உலகை பிரகாசமாக்கும் தூரிகைச் சிற்பிகள்
💰 ரூ.48 இலட்சம் பெறுமதியான பரிசுகள்
● 4-16 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கைச் சிறுவர்களும் தங்கள் ஓவியங்களை அனுப்பலாம்.
🎨 போட்டிப் பிரிவுகள் & கருப்பொருள்
| பிரிவு | வயது எல்லை | பிறந்த வருடம் | கருப்பொருள் | கடதாசியின் அளவு |
|---|---|---|---|---|
| முன் ஆரம்ப பள்ளி | 04 - 05 | 2021 / 2022 | விரும்பியது | A3 |
| ஆரம்ப பள்ளி | 06 - 07 | 2019 / 2020 | விரும்பியது | A3 |
| பின் ஆரம்ப பள்ளி | 08 - 10 | 2016 / 2017 / 2018 | அழகிய வீட்டுத் தோட்டம் | A3 |
| கனிஷ்ட | 11 - 13 | 2013 / 2014 / 2015 | சிறுவர் பாதுகாப்பு | 14×18 அங்குலம் |
| சிரேஷ்ட | 14 - 16 | 2010 / 2011 / 2012 | இடப்பெயர்வு | 14×18 அங்குலம் |
📧 ஓவியங்களை அனுப்ப வேண்டிய முறை
1
2026 செப்டம்பர் 15ஆம் திகதிக்கு முதல் www.arunalusiththiram.lk இணையதளத்திற்கு உங்கள் ஓவியங்களை ஸ்கேன் செய்து (jpeg வடிவில், 5MB க்கு குறைவாக) பதிவேற்றம் செய்யுங்கள்.
2
விண்ணப்பப்படிவத்தில் பின்வரும் விவரங்களைக் குறிப்பிடவும்: போட்டியாளரின் முழுப் பெயர், பிறந்த திகதி, முகவரி, பாடசாலை & அதன் முகவரி, தாய்/தந்தை/பாதுகாவலரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இல. (கைபேசி).
💵 பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்
உள்நாட்டுப் பிரிவு — தேசிய மட்டம்
- முன்பள்ளிப் பிரிவு: முதல் 3 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.75,000
- ஏனைய பிரிவுகள்: முதல் 3 வெற்றியாளர்களுக்கு முறையே தலா ரூ.100,000, ரூ.75,000, ரூ.50,000
உள்நாட்டுப் பிரிவு — மாகாண மட்டம்
- முன்பள்ளிப் பிரிவு: முதல் 3 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.15,000
- ஏனைய பிரிவுகள்: முதல் 3 வெற்றியாளர்களுக்கு முறையே தலா ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000
மேற்குறிப்பிட்ட வெற்றியாளர்களுக்கு நினைவுச் சின்னம் (plaque) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 4ஆம் இடம் முதல் 10ஆம் இடம் வரை பெறும் வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
✅
அதிக ஓவியங்கள் அனுப்பும் பாடசாலை
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதிகமான ஓவியங்கள் அனுப்பும் பாடசாலைக்கு ரூ.50,000 பணப்பரிசு (குறைந்தது 100 ஓவியங்கள் அனுப்பப்பட வேண்டும்)
✅
வெளிநாட்டுப் பிரிவு
ஒரு வயதுப் பிரிவில் ஒரு வீதம் 5 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்
☎ அழைக்கவும்: 1316

