N E W S

இலங்கை புகையிரத திணைக்களம் — புகையிரத பாதுகாப்பு (ஆண்/பெண்) பதவி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2026

இலங்கை புகையிரத திணைக்களம் — புகையிரத பாதுகாப்பு (ஆண்/பெண்) பதவி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2026

வெற்றிடங்கள்: 256 (ஆண் - 239, பெண் - 17)

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.09.28

📌 அறிவிப்பு சுருக்கம்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத பாதுகாப்பு சேவையில் புகையிரத பாதுகாப்பு (ஆண்/பெண்) - III தரம் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மொத்தம் 256 வெற்றிடங்கள் (ஆண் 239, பெண் 17) நிரப்பப்பட உள்ளன.

🎯 தகைமைகள்

உடல்சார் தகைமைகள்

  • இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் சேவை புரிவதற்கும் பதவியில் கடமை புரிவதற்கும் தேவையான உடல் மற்றும் உள ரீதியான பொருத்தப்பாட்டைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • உயரம் (காலணிகள் இன்றி): ஆண் விண்ணப்பதாரிகள் — 5' 6"; பெண் விண்ணப்பதாரிகள் — 5' 2"
  • கண் பார்வை: மூக்குக் கண்ணாடியின்றி "ஏ" 2 பார்வைக்கோணம் காணப்பட வேண்டும்
  • ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மார்பு 32 அங்குலம் இருத்தல் வேண்டும்

கல்விசார் தகைமைகள்

க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் சிங்களம்/தமிழ்/ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளடங்கலாக ஆறு (06) பாடங்களில் இரு (02) திறமை சித்திகள் கொண்டு சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

வயது

2026.09.28 ஆம் திகதிக்கு குறைந்தபட்ச வயதெல்லை 18 குறையாதிருக்க வேண்டும், அதிகூடிய வயதெல்லை 28 இனை விஞ்சாது இருத்தல் வேண்டும். (2008.09.28 அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1997.09.29 அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவர்கள் தகைமையுடையவர்கள்)

பிற தகைமைகள்

  • இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
  • விவாகமற்றவர்களாக இருத்தல் வேண்டும்
  • சிறந்த நன்னடத்தையைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்
  • எந்தவொரு மத துறவறத்தை பூண்டவர்களுக்கும் இப்போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க அனுமதி இல்லை

💰 விண்ணப்பக் கட்டணம் மற்றும் சம்பளம்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1200.00 (People's Bank — நகர மத்திய கிளை, கணக்கு இல. 176-100129027-313)

ஆரம்ப சம்பளம் (MN 1-2025): ரூபா 49,550.00 (சம்பள அளவுத்திட்டம் ரூ. 49,550 - 7×540 - 27×670 - ரூபா 71,420)

📝 தேர்வு முறை

1. எழுத்து மூலப் பரீட்சை (இரு பாடங்கள்)

பாடம்புள்ளிகளின் எண்ணிக்கைசித்தியடைவதற்கான குறைந்தபட்ச புள்ளிகள்
நுண்ணறிவு பரீட்சை10050
மொழித்திறன்10050

2. உடற்தகுதி / திறந்தப் போட்டிப் பரீட்சை

செயற்பாடுவிவரம்புள்ளிகள்
1000m ஓட்டம்3 நிமிடங்களுக்கு குறைவு30
Chinup05 தடவைகள் / 01 நிமிடம்தடவைக்கு 3 (உச்சம் 15)
Pushup15 தடவைகள் / 01 நிமிடம்தடவைக்கு 1 (உச்சம் 15)
Situp15 தடவைகள் / 01 நிமிடம்தடவைக்கு 1 (உச்சம் 15)
Squat Thrust15 தடவைகள் / 01 நிமிடம்தடவைக்கு 1 (உச்சம் 15)
Kim's Gameநினைவாற்றல் பரீட்சைஉச்சம் 10

3. கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை (100 புள்ளிகள்)

விடயம்அதிகூடிய புள்ளிகள்
மேலதிக கல்வி தகைமைகள்20
தலைமைத்துவம் மற்றும் வேறு சமூக சேவைகள்20
விளையாட்டு தகைமைகள்30
மொழி அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம்25
நேர்முகப் பரீட்சையில் வெளிக்காட்டிய திறமை05
மொத்தம்100
⚠️ விண்ணப்பங்கள் 2026.09.28 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இறுதித் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்பட மாட்டாது.

📮 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

புகையிரத பொதுமுகாமையாளர்,
இலங்கை புகையிரத திணைக்களம்,
த.பெ. 355, ஓல்கொட் மாவத்தை,
கொழும்பு 10.

உறையின் இடது பக்க மூலையில் "இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத பாதுகாப்பு சேவையில் புகையிரத பாதுகாப்பு (ஆண்/பெண்) - பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்தப் போட்டிப் பரீட்சை – 2026" என குறிப்பிட வேண்டும்.

📄 மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய

Post a Comment

Previous Post Next Post