📌 கல்வி அமைச்சு சுற்றறிக்கை
தேசிய பாடசாலைகள், தேசியக் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி நிலையங்களில் பணிபுரியும் கல்விசாரா பணிக்குழுவினரின் அலுவலக நேரம்
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பாடசாலைகள், தேசியக் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி நிலையங்களில் பணிபுரியும் கல்விசாரா (Non-Academic) பணிக்குழுவினரின் அலுவலக நேரம் தொடர்பாக, முன்னர் வெளியிடப்பட்ட 44/2025 ஆம் இலக்க, 2026.05.20 ஆம் திகதிய சுற்றறிக்கைக்கு மேலதிகமாக இந்த திருத்தச் சுற்றறிக்கை (44/2025 - I) வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய திருத்தம்: மேற்படி சுற்றறிக்கையின் 2ஆம் அத்தியாயத்தில், பிரிவு (vii) இற்கு அடுத்ததாக,
மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்ப சேவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள், கட்டிட ஆய்வாளர் மற்றும்
ஒலி-ஒளி உதவியாளர் ஆகிய பதவிகளில் உள்ள அதிகாரிகளின் பணி நேரம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
📋 புதிதாக சேர்க்கப்பட்ட பணி நேர விபரம்
| பதவி மற்றும் பணிபுரியும் இடம் | சாதாரண பணி நேரம் | சாதாரண தினசரி பணி நேரம் (அரை மணி நேர மதிய உணவு இடைவேளை உட்பட) |
|---|---|---|
|
மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்ப சேவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள்,
கட்டிட ஆய்வாளர் மற்றும் ஒலி-ஒளி உதவியாளர் பதவிகளைச் சேர்ந்த அதிகாரிகள் (தேசிய கல்வி நிறுவனங்கள்) |
காலை 8.30 மணி – மாலை 4.15 மணி | 7 மணி 45 நிமிடங்கள் |
மேலும், மேற்படி சுற்றறிக்கை 44/2025-ல் செய்யப்பட்ட மற்ற ஏற்பாடுகள் அனைத்தும் மாற்றமின்றி தொடரும் என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
ஒப்பம்: நாலக்க கலுவெவ — செயலாளர்
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
📄 முழு சுற்றறிக்கையை பதிவிறக்கம் செய்ய
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
📚 கல்வி தொடர்பான புதிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய WhatsApp குழுவில் இணையுங்கள்!
✅ WhatsApp குழுவில் இணைய
