N E W S

இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் III - நேர்காணலுக்கான பெயர் பட்டியல்

அரசாங்க அறிவிப்பு

இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆந் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை – 2025 (2026)

நேர்காணலுக்கு கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் மற்றும் மாவட்டம் வாரியான நேர்காணல் விபரங்கள்

1 கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்
I. தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
II. 2025.11.24 ஆம் திகதிக்கு உடன்முன்னரான ஆறு (06) வருட காலப்பகுதிக்குள் விண்ணப்பித்த பிரதேச செயலகப் பிரிவில் குறைந்தபட்சம் மூன்று வருட காலமாவது (03) தொடர்ச்சியாக நிரந்தரமாக வசித்திருத்தல் வேண்டும் என்பதுடன், அதனை உறுதிப்படுத்த:
  • a. வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி, அல்லது
  • b. கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட வதிவிடச் சான்றிதழை (DS4) எடுத்து வரவேண்டும்.
III. பிறப்புச் சான்றிதழ்
IV. இலக்கம் 2460 மற்றும் 2025.10.24 ஆம் திகதிய வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆந் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான அறிவித்தல் மற்றும் தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சையில் விரிவான புள்ளித் திட்டத்திற்கு அடிப்படை கல்வி மற்றும் ஏனைய தகைமைகளை உறுதிப்படுத்துவதற்காக தேவையான ஆவணங்களின் மூலப்பிரதிகளை கொண்டு வர வேண்டும். (கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆளுமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முன்வைக்கப்படும் சான்றிதழ்களின் பிரதிகள் தங்களால் உண்மை பிரதிகள் என உறுதிப்படுத்தி நேர்முகப் பரீட்சைக் குழுவிற்கு முன்வைக்க வேண்டும்.)
⚠ கவனிக்க: பெயரில் ஏதேனும் மாற்றம் காணப்படின், அதனை சத்தியக்கடதாசி மூலம் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
2 நேர்காணலின் தேதிகள் மற்றும் நேரம் – மாவட்டம் வாரியாக

உங்களுடைய மாவட்டத்திற்குரிய நேர்காணல் தேதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான முழு விபரங்களையும் பார்வையிட, கீழுள்ள மாவட்டத்தை தெரிவு செய்க. ➤

Post a Comment

Previous Post Next Post