N E W S

சுங்கப் பரிசோதகர் பதவி II ஆம் தரம் — திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகள் 2026

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

இலங்கைச் சுங்கத் திணைக்களம்

சுங்கப் பரிசோதகர் பதவி II ஆம் தரம் — போட்டிப் பரீட்சைகள் 2026

சுங்கப் பரிசோதகர் (Customs Examiner) பதவியில் II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக இலங்கைச் சுங்கத் திணைக்களம் இரண்டு போட்டிப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது — பொது மக்களுக்கான திறந்த போட்டிப் பரீட்சை, மற்றும் சேவையிலுள்ள சுங்க காவலர் தரம் II அலுவலர்களுக்கான தரமுயர்த்தல் (மட்டுப்படுத்தப்பட்ட) போட்டிப் பரீட்சை. விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் (Online) மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

01. திறந்த போட்டிப் பரீட்சை 2026 (பொது விண்ணப்பதாரர்களுக்கு)

📆 
விண்ணப்பிக்கும் காலம்: 2026.09.14 (மு.ப. 09.00) – 2026.10.12 (பி.ப. 09.00)
நிகழ்நிலை (Online) விண்ணப்பங்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும். பரீட்சை 2026 டிசெம்பர் மாதம் நாடு பூராகவும் பிரதான நகரங்களில் நடத்தப்படும்.

தகைமைகள்

பிரசாவுரிமை

இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.

வயது

விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18 – 24 வயதுக்கு இடைப்பட்டவராதல் வேண்டும் (2002.10.12 – 2008.10.12 இடையே பிறந்தவர்).

உடல் தகைமை

ஆண்கள்: 5 அடி 5 அங்குலத்திற்குக் குறையாத உயரம், 33 அங்குல சுற்றளவு. பெண்கள்: 5 அடி 3 அங்குலத்திற்குக் குறையாத உயரம்.

கல்வித் தகைமை

க.பொ.த (சா/த) ஒரே தடவையில் அல்லது இரு தடவைகளுக்குள் 06 பாடங்களில் சித்தி, அதில் 05 பாடங்களில் திறமைச் சித்தியும், ஆங்கிலத்தில் குறைந்தது சாதாரண சித்தியும் இருத்தல் வேண்டும்.

சேவை நிபந்தனைகள் & சம்பள அளவுத் திட்டம்

  • சம்பளக் குறியீடு RS – 1  |  ரூபா 49,550 – 7 x 540 – 27 x 670 – 71,420
  • பதவி நிரந்தரமானது, ஓய்வூதியத்திற்குரியது (எதிர்கால அரசாங்க தீர்மானங்களுக்கு உட்பட்டது)
  • தெரிவாகும் பரீட்சார்த்திகள் நியமனத் திகதியிலிருந்து 03 ஆண்டுகள் தகுதிகாண் காலப்பகுதிக்கு உட்படுத்தப்படுவர்
  • நாட்டின் எப்பாகத்திலும் சேவையாற்றக்கூடிய உடல் தகுதி வேண்டும் (அரசாங்க மருத்துவ அதிகாரி பரிசோதனை)
  • இரவிலும் பகலிலும், நாட்டின் எப் பாகத்திலும் கடமையாற்றுவதற்கும் தயாராக இருத்தல் வேண்டும்
பரீட்சைக் கட்டமைப்பு (03 வினாப் பத்திரங்கள்)
பாடம்கால அளவுபுள்ளிகள்
பொது உளச்சார்பு01 மணித்தியாலம்100
கணிதம்01 மணித்தியாலம்100
ஆங்கில மொழி1½ மணித்தியாலம்100
மொத்தம்300
குறிப்பு: பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நடாத்தப்படும். விண்ணப்பதாரர் தாம் விண்ணப்பித்த மொழியிலேயே பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் — பின்னர் மொழியை மாற்ற அனுமதியில்லை.
Rs. 600 பரீட்சைக் கட்டணம் — வங்கிக் கடன்/பற்று அட்டை, Bank of Ceylon Online/Flex செயலி, அல்லது BOC கிளை மூலம் நிகழ்நிலையில் செலுத்தலாம்.
📍 பரீட்சை நடைபெறும் 25 நகரங்களின் பட்டியல்
மாகாணம்நகரங்கள்
மேல்கொழும்பு, கம்பஹா, களுத்துறை
மத்தியகண்டி, மாத்தளை, நுவரெலியா
தென்காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை
வடக்குயாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி
கிழக்குமட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை
வடமேல்குருநாகல், புத்தளம்
வடமத்திஅனுராதபுரம், பொலன்னறுவை
ஊவாபதுளை, மொனராகலை
சப்ரகமுவஇரத்தினபுரி, கேகாலை

02. தரமுயர்த்தல் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2026 (சேவையிலுள்ள சுங்க காவலர் தரம் II அலுவலர்களுக்கு)

📝 
சுங்கப் பரிசோதகர் தரம் II பதவியில் தற்போதுள்ள வெற்றிடங்களில் 50% இனை நிரப்புவதற்காக நடாத்தப்படும் தரமுயர்த்தல் பரீட்சை.

தகைமைகள்

  • தற்போது சுங்க காவலர் தரம் II பதவியிலுள்ள அலுவலராக இருத்தல்
  • உடன் முன்னரான 05 வருட திருப்திகரமான சேவைக் காலத்தினைக் கொண்டிருத்தல், அக்காலப்பகுதியில் அனைத்து சம்பள ஏற்றங்களையும் உழைத்திருத்தல்
  • பதவியுயர்வுத் திகதிக்கு முன்னரான 05 வருடங்களுள் திருப்திகரமான மட்டத்தில் செயலாற்றுகையை வெளிப்படுத்தியிருத்தல் (செயலாற்றுகை மதிப்பீட்டுத் திட்டம்)
  • சுங்க காவலர் தரம் II பதவியோடு சம்பந்தப்பட்ட வினைத்திறன் காண் தடைப் பரீட்சைகளில் சித்தியடைந்திருத்தல்
  • 2026.12.31 ஆம் திகதி வரையில் குறைந்தது 03 வருட சேவைக் காலத்தினைப் பூர்த்திசெய்திருத்தல்
  • உரிய அரச கரும மொழித் தேர்ச்சியினைப் பெற்றிருத்தல்
பரீட்சைக் கட்டமைப்பு (02 பிரிவுகள்)
பிரிவுகால அளவுபுள்ளிகள்
1 – எழுத்துப் பரீட்சை (விடய ஆய்வு)02 மணித்தியாலம்100 (கடவுப் புள்ளி: 50)
2 – பொது நேர்முகப் பரீட்சைபுள்ளிகள் வழங்கப்படமாட்டாது
இந்தப் பரீட்சையும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடாத்தப்படும். விண்ணப்பதாரர்கள் குறித்த பரீட்சைக்கு ஒரு மொழியில் மாத்திரம் தோற்றுதல் வேண்டும்; பின்னர் மொழி மாற்றத்திற்கு அனுமதி இல்லை.
Rs. 600 பரீட்சைக் கட்டணம் — வங்கிக் கடன்/பற்று அட்டை, Bank of Ceylon Online/Flex செயலி, அல்லது எந்த BOC கிளையிலும் நிகழ்நிலையில் செலுத்தலாம்.
பொதுக் குறிப்பு: இரு பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களும் ஆங்கில மொழியில் மாத்திரம் நிகழ்நிலையில் பூர்த்திசெய்யப்படல் வேண்டும். பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தேசிய அடையாள அட்டை / செல்லுபடியான கடவுச்சீட்டு / செல்லுபடியான வாகன சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றுள் ஒன்றை ஆள் அடையாளச் சான்றாகக் கொண்டு வருதல் அவசியம். அனுமதி அட்டை இன்றி பரீட்சை மண்டபத்தினுள் அனுமதி இல்லை.
மேலதிக தகவல்களுக்கு:
சுங்கப் பணிப்பாளர் நாயகம்,
இலங்கை சுங்கத் திணைக்களம், "சுங்க இல்லம்",
இல. 40, பிரதான வீதி, கொழும்பு 11.

பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்

WhatsApp Channel ➤

Post a Comment

Previous Post Next Post