அகரம் Logo
N E W S

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் (UWU) - விஞ்ஞான இளங்கலை (வெளிக் கல்வி) பட்டப்படிப்பு 2026

UGC அங்கீகாரம் பெற்றது

விஞ்ஞான இளங்கலை (வெளிவாரி) பட்டப்படிப்பு 2026

உயர்தரம் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் – ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் (UWU)

● படிப்பு காலம்
03 வருடங்கள் (வார இறுதி நாட்கள்)
● கற்பித்தல் மொழி
ஆங்கிலம்
● கற்றல் முறை
Online மற்றும் Onsite
● படிப்புக் கட்டணம்
Rs. 150,000/= (வருடத்திற்கு)
விண்ணப்பிக்க கடைசி திகதி
2026 ஆகஸ்ட் 31

பாட பிரிவுகள்

இந்த பட்டப்படிப்பு பின்வரும் இரு முக்கிய பாட பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது:

உயிரியல் பிரிவு (Biology Stream)
  • உயிரியல் (Biology)
  • இரசாயனவியல் (Chemistry)
  • பௌதிகவியல் (Physics)
  • தெரிவு பாடங்கள்
கணிதவியல் பிரிவு (Maths Stream)
  • கணிதவியல் (Mathematics)
  • இரசாயனவியல் (Chemistry)
  • பௌதிகவியல் (Physics)
  • தெரிவு பாடங்கள்

தகைமை நிபந்தனைகள்

  • உயர்தர பரீட்சையில் (G.C.E. A/L) அல்லது Edexcel (UK) / Cambridge (UK) பரீட்சையில் ஒரே தடவையில், அங்கீகரிக்கப்பட்ட பாடங்களான Chemistry, Physics, Biology, Combined Mathematics, Botany, Zoology, Pure Mathematics, Applied Mathematics அல்லது Higher Mathematics ஆகியவற்றில் குறைந்தது 'S' தரம் பெற்றிருக்க வேண்டும்.
  • க.பொ.த சாதாரண தர (O/L) ஆங்கிலப் பாடத்தில் குறைந்தது 'S' தரம் பெற்றிருக்க வேண்டும்.

கற்பித்தல் முறை

தகுதி வாய்ந்த மற்றும் அனுபவமிக்க கல்வியாளர்கள் குழுவினரால் விரிவுரைகளும் நடைமுறை வகுப்புகளும் நடத்தப்படும்.

  • விரிவுரைகள்: வார இறுதி நாட்களில் 100% Online ஆக நடத்தப்படும்; வளாகச் செயற்பாடுகள் விரிவுரையாளரின் விருப்பத்திற்கேற்ப ஒழுங்கமைக்கப்படும்.
  • நடைமுறை வகுப்புகள்: செமஸ்டரின் முன்கூட்டியே அறிவிக்கப்படும் ஒன்று அல்லது இரு வார காலப்பகுதிகளில் வளாகத்தில் நடத்தப்படும்.

● தொடர்பு விபரங்கள்

ஒருங்கிணைப்பாளர்: 076 054 1104  |  dilan@uwu.ac.lk

உப ஒருங்கிணைப்பாளர்: 077 713 7666

Post a Comment

Previous Post Next Post