N E W S

வரையறுக்கப்பட்ட தேசிய விவசாய சந்தை சேவைகள் நிறுவன வேலைவாய்ப்பு - 2026

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு

வரையறுக்கப்பட்ட தேசிய விவசாய சந்தை சேவைகள் நிறுவனம்

National Agri Market Services Limited – வெற்றிடங்கள்
இந்நிறுவனம் முழுமையாக அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாகும். நாடு முழுவதிலுமுள்ள விசேட பொருளாதார நிலையங்களை (DECs) நிர்வகிக்கிறது.
2026 ஒக்டோபர் 16விண்ணப்ப முடிவுத் திகதி
45 வயதுஉச்ச வயதெல்லை
52மொத்த வெற்றிடங்கள்

வெற்றிடங்களின் சுருக்கம்

பதவிதரம்வெற்றிடம்
முகாமையாளர் – மனித வளங்கள் மற்றும் நிர்வாகம்MM 1-101
முகாமையாளர் – நிதிMM 1-101
முகாமையாளர் – செயற்பாடுகள்MM 1-101
உள்ளகக் கணக்காய்வாளர்MM 1-101
சட்ட அதிகாரிMM 1-101
நிலைய முகாமையாளர்JM 1-118
உதவி முகாமையாளர்JM 1-101
தொழில்நுட்ப அதிகாரிMA 2-301
முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் அல்லாதது) – ஒப்பந்தம்–22
சாரதி – ஒப்பந்தம்–03
அலுவலக உதவியாளர் – ஒப்பந்தம்–02

முகாமைத்துவ தரம் MM 1-1

சம்பள அளவுரூ. 91,690 – 10 x 2,480 – 15 x 3,450 – 168,240
(01/2025 முகாமைத்துவ சேவை சுற்றறிக்கையின் படி)
ஏனைய கொடுப்பனவுகள்வாழ்க்கைச் செலவுப்படி ரூ. 17,800 | தொழில்சார் கொடுப்பனவு ரூ. 25,000 | தொலைபேசிக் கொடுப்பனவு (PED சுற்றறிக்கை 02/2022)
வயதெல்லை22 – 45 வயது (விண்ணப்ப முடிவுத் திகதியில்)
தெரிவு முறைஎழுத்துமூலப் போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு

முகாமையாளர் – மனித வளங்கள் மற்றும் நிர்வாகம் 01

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மனித வள முகாமைத்துவம், வியாபார முகாமைத்துவம், வர்த்தகம், பொது நிர்வாகம் அல்லது தொடர்புடைய வேறு ஏதேனும் பட்டம்.

முகாமையாளர் – நிதி 01

UGC அங்கீகரிக்கப்பட்ட நிதி, கணக்கியல், வியாபார நிர்வாகம், வர்த்தகம் அல்லது தொடர்புடைய பட்டம்; மேலதிகமாக பதவிக்குரிய பாடப்பரப்புடன் தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் நிறுவனத்தின் இடைநிலைப் பரீட்சையில் சித்தி மற்றும் பதவிக்குரிய துறையில் குறைந்தபட்சம் ஒரு (01) வருட தகுதிக்குப் பின்னரான அனுபவம்.

முகாமையாளர் – செயற்பாடுகள் 01

UGC அங்கீகரிக்கப்பட்ட வியாபார நிர்வாகம், தொடர் வழங்கல் முகாமைத்துவம், வர்த்தகம், பொது நிர்வாகம், செயற்பாட்டு முகாமைத்துவம் அல்லது தொடர்புடைய வேறு ஏதேனும் பட்டம்.

உள்ளகக் கணக்காய்வாளர் 01

UGC அங்கீகரிக்கப்பட்ட நிதி, கணக்கியல், வியாபார நிர்வாகம், வர்த்தகம் அல்லது தொடர்புடைய பட்டம். ஆரம்பப் பட்டத்தைப் பெற்றபின் பதவிக்குரிய துறையில் குறைந்தபட்சம் ஒரு (01) வருட தகுதிக்குப் பிந்திய அனுபவம்; தொடர்புடைய தொழில்சார் நிறுவனத்தின் இடைநிலைப் பரீட்சையில் சித்தி மற்றும் குறைந்தபட்சம் ஒரு (01) வருட தகுதிக்குப் பிந்திய அனுபவம்.

சட்ட அதிகாரி 01

சட்டத்தரணி; மற்றும் கூட்டுத்தாபனம், சபை அல்லது கீர்த்தி வாய்ந்த வர்த்தக நிறுவனமொன்றில் குறைந்தபட்சம் மூன்று (03) வருட தகுதிக்குப் பின்னரான அனுபவம்.

கனிஷ்ட முகாமைத்துவ தரம் JM 1-1

சம்பள அளவுரூ. 72,650 – 10 x 1,360 – 18 x 2,040 – 122,970
(01/2025 முகாமைத்துவ சேவை சுற்றறிக்கையின் படி)
ஏனைய கொடுப்பனவுகள்வாழ்க்கைச் செலவுப்படி ரூ. 17,800 | தொழில்சார் கொடுப்பனவு ரூ. 17,800 | தொலைபேசிக் கொடுப்பனவு (PED சுற்றறிக்கை 02/2022)
வயதெல்லை22 – 45 வயது
தெரிவு முறைஎழுத்துமூலப் போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு

நிலைய முகாமையாளர் 18

UGC அங்கீகரிக்கப்பட்ட மனித வள முகாமைத்துவம், பொது நிர்வாகம், வியாபார நிர்வாகம், வர்த்தகம், முகாமைத்துவம் அல்லது தொடர்புடைய வேறு ஏதேனும் பட்டம்.

உதவி முகாமையாளர் 01

UGC அங்கீகரிக்கப்பட்ட வியாபார நிர்வாகம், தொடர் வழங்கல் முகாமைத்துவம், வர்த்தகம், பொது நிர்வாகம், செயற்பாட்டு முகாமைத்துவம் அல்லது தொடர்புடைய வேறு ஏதேனும் பட்டம்.

முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பம் MA 2-3

பதவிதொழில்நுட்ப அதிகாரி – 01 வெற்றிடம்
கல்வித் தகைமைதொடர்புடைய துறையில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்பம் / வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படும் தேசிய வாழ்தொழில் திறன் (NVQ) 5ஆம் நிலைக்குக் குறையாத தேர்ச்சிச் சான்றிதழ்
சம்பள அளவுரூ. 52,700 – 10 x 800 – 11 x 1,190 – 10 x 1,320 – 10 x 1,350 – 100,490
ஏனைய கொடுப்பனவுவாழ்க்கைச் செலவுப்படி ரூ. 17,800
வயதெல்லை18 – 45 வயது
அனுபவம்தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஒரு (01) வருட தகுதிக்குப் பின்னரான அனுபவம்
தெரிவு முறைஎழுத்துமூலப் போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு

முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பம் அல்லாதது 22 · ஒப்பந்தம்

கல்வித் தகைமை
  • க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம்/தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் சித்தி.
  • க.பொ.த (உ/த) பரீட்சையில் மூன்று பாடங்களில் (பொதுப் பத்திரம் தவிர்ந்த) சித்தி.
  • மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கணனி சொல் செயலாக்கம் (Word Processing) / தட்டச்சு அல்லது அதற்கு இணையான திறன்கள் தொடர்பான குறைந்தபட்சம் ஆறு (06) மாத கால கற்கை நெறி.
சம்பளம்ரூ. 43,312
ஏனைய கொடுப்பனவுவாழ்க்கைச் செலவுப்படி ரூ. 17,800
வயதெல்லை18 – 45 வயது
அனுபவம்தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஒரு (01) வருட தகுதிக்குப் பின்னரான அனுபவம்
தெரிவு முறைஎழுத்துமூலப் போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு

சாரதி 03 · ஆரம்பநிலை / திறனற்ற ஒப்பந்தம்

கல்வித் தகைமைக.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தபட்சம் இரண்டு (02) பாடங்களில் சித்தி; மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படும் கனரக வாகனம் செலுத்தும் சாரதி உரிமத்தைப் பெற்றிருத்தல்; உரிமத்தைப் பெற்றபின் குறைந்தபட்சம் மூன்று (03) வருடகாலம் வாகனம் செலுத்திய அனுபவம்.
சம்பளம்ரூ. 38,448 + வாழ்க்கைச் செலவுப்படி ரூ. 17,800
வயதெல்லை18 – 45 வயது
தெரிவு முறைஎழுத்துமூலப் போட்டிப் பரீட்சை மற்றும் செயல்முறைப் பரீட்சை

அலுவலக உதவியாளர் 02 · ஒப்பந்தம்

கல்வித் தகைமைக.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தபட்சம் இரண்டு (02) பாடங்களில் சித்தி
கொடுப்பனவுரூ. 40,834 + வாழ்க்கைச் செலவுப்படி ரூ. 17,800
வயதெல்லை18 – 45 வயது

விண்ணப்பிக்கும் முறை

  • கல்வி, தொழில்முறைத் தகுதிகள் மற்றும் அனுபவத்துக்கான அனைத்துச் சான்றிதழ்களின் பிரதிகள், உறவினரல்லாத இரண்டு நடுவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்களுடன் கூடிய முழுமையான சுயவிவரக் குறிப்பைக் கொண்ட விண்ணப்பம் பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும்.
  • கடித உறையின் மேல் இடது மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பம் 2026 ஒக்டோபர் 16ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பின்வரும் முகவரியைச் சென்றடைய வேண்டும்.
  • அரசாங்க / அரைவாசி அரசாங்க / கூட்டுத்தாபன நிறுவனங்களில் பணிபுரிவோர், தமது விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர் ஊடாக அனுப்ப வேண்டும்.
  • முடிவுத் திகதிக்குப் பின் கிடைக்கும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் அறிவித்தல் எதுவுமின்றி நிராகரிக்கப்படும்.
தலைவர்,
வரையறுக்கப்பட்ட தேசிய விவசாய சந்தை சேவைகள் நிறுவனம்,
விசேட பொருளாதார நிலையக் கட்டிடத்தொகுதி,
இல. 44, கிரிமண்டல மாவத்தை,
நாரஹேன்பிட்டி, கொழும்பு – 05.

📞 தொலைபேசி: 011 2506 939 (தலைவர்)
✉️ மின்னஞ்சல்: namslpb@gmail.com
மேலதிக வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு e-akaram.edu.lk ஐ பார்வையிடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post