★
இலங்கைப் பாராளுமன்றம்
பதவி வெற்றிடங்கள் - 2026
பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியில் வெற்றிடமாக உள்ள "பாதுகாப்பு உத்தியோகத்தர்" பதவிக்கு நல்ல தேகாரோக்கியமும் சிறந்த நல்லொழுக்கமும் கொண்ட இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பிக்க இறுதித் திகதி: 2026.08.17
பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பப்பட வேண்டும்
பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவி
வெற்றிடங்களின் எண்ணிக்கை - 031 சம்பள அளவுத்திட்டம்
ரூ. 47,240 - 9x540/10x590/3x680 - 60,040 /-
சகல மேலதிக கொடுப்பனவுகளும் அடங்கலாக குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளம் அண்ணளவாக ரூ. 87,000.00
2 கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவம்
- கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சையில் தமிழ் அல்லது சிங்கள மொழியில் திறமைச் சித்தியும், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சாதாரணச் சித்தியும் அடங்கலாக இரு தவணைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்
- 10 வருடங்களுக்குக் குறையாத, கௌரவத்திற்குப் பாத்திரமானதுமான சேவையுடன் இராணுவ சார்ஜன் அல்லது அதற்குக் குறையாத தரத்திலான பதவியை வகிக்கும் இலங்கை ஆயுதம் தாங்கிய படை (நிரந்தர) உறுப்பினர் ஒருவராக இருத்தல்
- அல்லது 10 வருடங்களுக்குக் குறையாத அதே தகுதியுடன் சார்ஜன் அல்லது அதற்குக் குறையாத தரத்திலான பதவியை வகிக்கும் இலங்கை பொலிஸ் சேவையின் உறுப்பினர் ஒருவராக இருத்தல்
- அல்லது பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியில் 'ஏ' அல்லது 'பீ' சம்பள வகுதிகளின் கீழ் வரும் பதவியொன்றில் 10 வருட திருப்திகரமான சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்
3 வயதெல்லை
குறைந்தபட்சம்
30 வயது
அதிகபட்சம்
50 வயது
பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதி அலுவலர்களுக்கு உச்ச வயதெல்லை ஏற்புடையதாகாது.
4 ஆட்சேர்ப்பு முறை
எழுத்துமூலப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஆகியவற்றின் மூலம் ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.
- (அ) எழுத்துமூலப் பரீட்சை - மொழி அறிவும் பொது அறிவும் பரீட்சிக்கப்படும். அதிகபட்சப் புள்ளிகள் 100
- (ஆ) நேர்முகப் பரீட்சை - எழுத்துமூலப் பரீட்சையில் சித்தியடையும் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். அதிகபட்சப் புள்ளிகள் 100
| # | விடயப் பரப்பு |
|---|---|
| 1 | மேலதிக கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் |
| 2 | விடய அறிவு |
| 3 | அனுபவம் |
| 4 | ஆளுமை மற்றும் நேர்முகப் பரீட்சையில் வெளிப்படுத்தும் திறமைகள் |
5 சேவைக்கான நியதிகளும் நிபந்தனைகளும்
- இப்பதவி நிரந்தரமானதும் ஓய்வூதியத்தைக் கொண்டதுமாகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலில் மூன்று (03) வருட தகுதிகாண் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும்
- ஏற்கனவே அரசாங்க / மாகாண அரசாங்க சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரு (01) வருட காலப் பதில் கடமை அடிப்படையில் நியமிக்கப்படுவார்
- நியமிக்கப்படும் எண்ணிக்கை மற்றும் நியமனங்கள் நடைமுறைக்கு வரும் திகதி பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தால் தீர்மானிக்கப்படும்
- தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நிதிப் பிரமாணக் குறிப்புகளுக்கும் திணைக்கள ஒழுங்குவிதிகளுக்கும் இணங்கியொழுக வேண்டும்
- தேர்ந்தெடுக்கப்படும் பரீட்சார்த்திகள் விதவைகள், அநாதைகள் / தபுதாரர்கள் ஓய்வூதிய நிதியத்திற்குப் பங்களிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்
- தேர்ந்தெடுக்கப்படும் பரீட்சார்த்திகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்
- நியமிக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு விடுவிப்பு அறிக்கைகள் பெறப்படும்
6 சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் (பிரதிகள்)
- பிறப்புச் சான்றிதழ்
- கல்வித் தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்
- தொழில்சார் தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்
- அனுபவத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்
தேவைப்படுத்தப்படும்போது மட்டும் சான்றிதழ்களின் மூலப் பிரதிகளைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
7 முக்கிய நிபந்தனைகள்
- ஆயுதம் தாங்கிய படைகள் / பொலிஸ் சேவையில் பணிபுரிபவர்கள் விண்ணப்பப்படிவங்களை உரிய படைத் தளபதி / பொலிசுப் பரிசோதகர் தலைமையதிபதி ஊடாக அனுப்ப வேண்டும்
- பதவியைப் பெற ஏதாவது ஒரு விதத்தில் செல்வாக்கைப் பிரயோகிப்பது தகுதியீனத்திற்கு வழிவகுக்கும்
- விண்ணப்பத்தில் வெளிப்படுத்தப்பட்ட தவறான தகவல் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் கண்டறியப்பட்டால் தகைமையற்றவர் எனக் குறிப்பிடப்படுவார்; நியமனத்தின் பின்னர் கண்டறியப்பட்டால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்
- கடிதவுறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிடல் வேண்டும்
- இறுதித் திகதிக்குப் பின்னர் கிடைக்கின்ற அல்லது தேவையான சான்றிதழ்களின் பிரதிகள் இன்றி அனுப்பப்படுகின்ற அல்லது மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு இணங்க தயாரிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
தமிழ், சிங்களம் அல்லது ஆங்கில மொழி மூலம் பிரசுரிக்கப்படுகின்ற இந்த அறிவித்தலின் உரைகளுக்கிடையில் ஏதேனும் பொருத்தப்பாடின்மை காணப்படும் பட்சத்தில், சிங்கள மொழிமூல அறிவித்தலுக்கு அமைய செயலாற்றப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி (பதிவுத் தபால் மாத்திரம்)
பாராளுமன்றச் செயலாளர் நாயகம்
இலங்கைப் பாராளுமன்றம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே
ஹன்சு அபேரத்ன
பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்குப் பதிலாக
Tags
Vacancy
