N E W S

இஸ்லாம் தீனியாத் (தர்மாச்சார்ய) சான்றிதழ்ப் பரீட்சை - 2026

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்

இஸ்லாம் தீனியாத் (தர்மாச்சார்ய) சான்றிதழ்ப் பரீட்சை – 2025 (2026)

விண்ணப்பப் படிவங்களைப் பூர்ணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான இஸ்லாம் தீனியாத் (தர்மாச்சார்ய) சான்றிதழ்ப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள அதேவேளை, பரீட்சை 2026 நவம்பர் மாதம் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

● அறிவித்தல் இலக்கம்: 5/4/1/04/2025 (20)
● வெளியிடப்பட்ட திகதி: 2026 ஆகஸ்ட் 21
● வெளியிட்டவர்: பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவனம்சார் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை

1 முக்கிய திகதிகள்

விண்ணப்பங்கள் ஏற்கத் தொடக்கம்
2026.08.21
விண்ணப்பங்கள் ஏற்கும் இறுதி திகதி
2026.09.21
பரீட்சை நடைபெறும் மாதம்
2026 நவம்பர்
விண்ணப்பக் கட்டணம்
ரூபா. 200/–

2 மொழி மூலம்

இப்பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடாத்தப்படும். ஒரு விண்ணப்பதாரர் தான் விரும்பிய ஒரு மொழியில் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படுவார். விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்படும் மொழி மூலத்தை பின்னர் மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

3 தகுதிகள் (பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்று)

1. அஹ்தியிய்யா தஹம் பாடசாலைச் சான்றிதழ்
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் அஹ்தியிய்யா தஹம் பாடசாலை இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
2. மௌலவி சான்றிதழ்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகளினால் வழங்கப்படும் மௌலவி சான்றிதழைப் பெற்றிருத்தல்.
3. க.பொ.த. (உயர் தரம்)
இஸ்லாம் அல்லது இஸ்லாமிய நாகரீகம் உள்ளிட்ட மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல் (இரு பாடங்களில் ஒன்று இஸ்லாம் / இஸ்லாமிய நாகரீகமாக இருத்தல் வேண்டும்).
4. க.பொ.த. (சாதாரண தரம்) + கற்பித்தல் அனுபவம்
இஸ்லாம் பாடத்தில் திறமைச் சித்தியுடன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அஹ்தியிய்யா தஹம் பாடசாலையில் அல்லது அரபுக் கல்லூரியில் ஒரு வருடத்திற்குக் குறையாத கற்பித்தல் அனுபவம் பெற்ற ஆசிரியராக இருத்தல்.

4 விண்ணப்பித்தல் முறை

  • விண்ணப்பப் படிவங்கள் பதிவு செய்யப்பட்ட அஹ்தியிய்யா தஹம் பாடசாலை / அரபுக் கல்லூரி அதிபர் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க இடமளிக்கப்படமாட்டாது.
  • வெளிவாரிப் பரீட்சார்த்திகள் தமது வதிவிடத்திற்கு அருகாமையிலுள்ள அஹ்தியிய்யா தஹம் பாடசாலை / அரபுக் கல்லூரி மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவங்கள் இணையத்தளத்தினூடாகவும் (www.doenets.lk) பதிவிறக்கம் செய்யலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் இரு பிரதிகளாக, மூலப் பிரதி பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கும், இரண்டாம் பிரதி பாடசாலை / கல்லூரியின் கோப்பிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

5 பரீட்சைக் கட்டணம்

விபரம்தொகை
பரீட்சைக் கட்டணம் (முதல் தடவை)இலவசம்
பரீட்சைக் கட்டணம் (இரண்டாம் தடவை முதல்)ரூபா. 200/–
நூன சித்தி பெற்ற ஒரு பாடத்திற்கான கட்டணம்ரூபா. 50/–

கட்டணம் தபால் நிலையம் மூலம் செலுத்தப்பட்டு, பற்றுச்சீட்டு விண்ணப்பப் படிவத்தின் மறுபக்கத்தில் ஒட்டப்பட வேண்டும். முத்திரை அல்லது காசுக்கட்டை மூலம் செலுத்தப்படும் கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

6 பரீட்சை பற்றிய விபரம்

இப்பரீட்சை ஐந்து (05) வினாப்பத்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு வினாப்பத்திரத்திற்கும் உரிய காலம் மூன்று (03) மணித்தியாலங்கள் ஆகும்.

01. அல் அகீதா வல் மஸாதிருஷ் ஷரீஆ
(இஸ்லாமிய கோட்பாடும் சட்ட மூலாதாரங்களும்) – இஸ்லாமிய அகீதா, மஸாதிருஷ் ஷரீஆ (வஹி, அல்குர்ஆன், இஜாஸுல் குர்ஆன், தப்ஸீர் கலை, அஸ்ஸுன்னா, ஹதீஸ் தொடர்பான அறிவு, துணை மூலாதாரங்கள்) தொடர்பான பாடப்பகுதிகளை உள்ளடக்கியது.
02. அல் பிக்ஹுல் இஸ்லாம்
(இஸ்லாமிய சட்டநெறி) – இபாதத், அடிப்படை இபாதத்துகள் (தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ், உபரி வழக்கங்கள்), முஆமலாத் (பொருளாதாரம், வியாபாரம், தடைசெய்யப்பட்ட தொழில்கள்), முனாகஹாத் (நிகாஹ், குடும்பம், விவாகரத்து), ஜினாயாத் (குற்றங்கள் மற்றும் தண்டனைகள்) ஆகியவற்றை உள்ளடக்கியது.
03. அஸ்ஸீரா வத்தாரிகுல் இஸ்லாம்
(ஸீராவும் இஸ்லாமிய வரலாறும்) – நபி (ஸல்) காலம், கிலாஃபத் ரஷிதீன்கள் காலம், பிற்பட்ட கலீஃபாக்களின் காலம் (உமையா, அப்பாஸிய), இஸ்லாமிய கலைகள், மஸ்ஜிதுகளின் பங்களிப்பு, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, முஸ்லிம் வரலாற்று நாயகர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
04. அல் அஹ்லாக் வஸ்ஸுலூக்
(சமூகவியலும் ஒழுக்கவியலும்) – தனி மனிதன், குடும்பம், சமூகம், இறைவனுடனான உறவு, மனித உறவு தொடர்பான சமூக ஒழுக்கங்கள், உயிரினங்கள்/சுற்றுச்சூழல் தொடர்பான ஒழுக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
05. அல் லுகதுல் அரபிய்யா வல் அதபுல் இஸ்லாம்
(இஸ்லாமிய இலக்கியமும் அரபு மொழியும்) – இஸ்லாமிய இலக்கியம், அறபுத் தமிழ், அறபு மொழித் திறன் வளர்ச்சி, மொழிபெயர்த்தல், இலக்கணம் (அஸ்ஸர்ப், அந்நஹ்வு) ஆகியவற்றை உள்ளடக்கியது.

7 வினாத்தாள் கட்டமைப்பு

பகுதிவினாக்கள்புள்ளிகள்
பகுதி I – சுருக்கமான வினாக்கள்10 வினாக்களுக்கும் விடையளித்தல்04 × 10 = 40
பகுதி II – கட்டமைப்பு வினாக்கள்5 இல் விரும்பிய 4 க்கு விடையளித்தல்12 × 04 = 48
பகுதி III – கட்டுரை வினாக்கள்2 இல் விரும்பிய 1 க்கு விடையளித்தல்12 × 01 = 12

8 தரப்படுத்தல் அளவுகோல்

புள்ளி அளவுதரம்குறியீடு
0–34சித்தியடையாமைF
35–54சித்திS
55–69திறமைச் சித்திC
70–100விசேட சித்திD

பரீட்சார்த்தி ஒருவர் ஐந்து பாடங்களிலும் சித்தியடையும் போது முழுமையான சித்தியைப் பெறுவார். ஒரே தடவையில் நான்கு பாடங்களில் சித்தியடைந்து ஒரு பாடத்தில் மட்டும் சித்தியடையாதிருந்தால் அது நூன சித்தியாகக் கருதப்படும். நூன சித்தி பெற்றோர் அடுத்த இரண்டு (02) பரீட்சை ஆண்டுகளுக்குள் அப்பாடத்திற்கு மீண்டும் தோற்று சித்தி பூர்த்தி செய்யலாம்.

9 முக்கிய நிபந்தனைகள்

  • தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாது.
  • பரீட்சை மண்டபத்தில் முகமும் இரு காதுகளும் மறையாதவாறு அடையாளத்தை உறுதிப்படுத்தல் வேண்டும்.
  • விண்ணப்பப் படிவங்களில் பெயர்கள் பிறப்புச் சான்றிதழ் / தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறே ஆங்கில கெப்பிற்றல் எழுத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
  • தபாலில் தொலைந்து போதல் அல்லது தாமதமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான மேன்முறையீடுகள் கவனத்திற்கு எடுக்கப்படமாட்டாது.

10 தொடர்புகளுக்கு

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
பரீட்சை ஆணையாளர் நாயகம்,
நிறுவனம்சார் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை,
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை.

மாதிரி வினாப்பத்திரங்களுக்கு:
பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
180, பி.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி: 011-2667909 / 011-2669994

குறிப்பு: முழுமையான அறிவித்தலையும் விண்ணப்பப் படிவத்தையும் கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

Post a Comment

Previous Post Next Post