சுற்றுநிரூப இலக்கம் – 31/2026
பாடசாலைத் தவணை
அட்டவணை – 2027
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு — இலங்கை
My Ref: ED/09/12/06/05/01-2027 | திகதி: 2026.08.202027 ஆம் ஆண்டில் அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்கள் பின்பற்ற வேண்டிய பாடசாலைத் தவணை அட்டவணை மற்றும் அதனுடன் தொடர்புடைய விபரங்கள் கல்வி அமைச்சின் சுற்றுநிரூப இலக்கம் 31/2026 மூலம் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
I. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு
முதலாம் தவணை
2027.01.04 திங்கள் முதல்
2027.04.09 வெள்ளி வரை
இரண்டாம் தவணை
2027.04.26 திங்கள் முதல்
2027.07.30 வெள்ளி வரை
மூன்றாம் தவணை
2027.08.30 திங்கள் முதல்
2027.12.03 வெள்ளி வரை
II. முஸ்லிம் பாடசாலைகளுக்கு
ஒவ்வொரு தவணையும் பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
| காலப்பகுதி | தவணை / கட்டம் |
|---|---|
| முதலாம் தவணை — முதலாம் கட்டம் | 2027.01.04 (திங்) – 2027.02.05 (வெள்) • விடுமுறை: 2027.02.06 – 2027.03.14 |
| முதலாம் தவணை — இரண்டாம் கட்டம் | 2027.03.15 (திங்) – 2027.04.09 (வெள்) • விடுமுறை: 2027.04.10 – 2027.04.14 |
| முதலாம் தவணை — மூன்றாம் கட்டம் | 2027.04.15 (வியா) – 2027.04.30 (வெள்) • விடுமுறை: 2027.05.01 – 2027.05.02 |
| இரண்டாம் தவணை — முதலாம் கட்டம் | 2027.05.03 (திங்) – 2027.05.14 (வெள்) • விடுமுறை: 2027.05.15 – 2027.05.20 |
| இரண்டாம் தவணை — இரண்டாம் கட்டம் | 2027.05.21 (வெள்) – 2027.08.27 (வெள்) • விடுமுறை: 2027.08.28 – 2027.08.29 |
| மூன்றாம் தவணை | 2027.08.30 (திங்) – 2027.12.03 (வெள்) |
தரம் 12 & 13 மாணவர்களுக்கான தவணை அட்டவணை
க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றும் ஆண்டைப் பொறுத்து, தரம் 12 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு தனியான தவணை ஏற்பாடு பின்பற்றப்படும்.
| பிரிவு | சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் | முஸ்லிம் பாடசாலைகள் |
|---|---|---|
| 2027 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவோர் |
|
|
| 2028 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவோர் |
|
|
| 2029 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவோர் |
தரம் 12 முதலாம் தவணை: 2027.06.15 (செவ்வாய்) – 2027.12.03 | தரம் 12 முதலாம் தவணை: 2027.06.15 (செவ்வாய்) – 2027.12.03 |
இணைப்பு – I: அரசாங்க விடுமுறை தினங்கள் 2027
பாடசாலைச் செயற்பாடுகள் அடங்கிய முழுமையான கால அட்டவணை அமைச்சின் இணையத் தளத்தில் (www.moe.gov.lk) பிரசுரிக்கப்படும்.
| தினம் | கிழமை | விடுமுறை |
|---|---|---|
| ஜனவரி 15 | வெள்ளி | தைப் பொங்கல் தினம் |
| ஜனவரி 22 | வெள்ளி | துருது முழு நோன்மதி போயா தினம் |
| பெப்ரவரி 04 | வியாழன் | சுதந்திர தினம் |
| பெப்ரவரி 20 | சனி | நவம் முழு நோன்மதி போயா தினம் |
| மார்ச் 06 | சனி | மகா சிவராத்திரி தினம் |
| மார்ச் 10 | புதன் | ஈதுள் பித்ர் (ரமழான் தினம்) |
| மார்ச் 22 | திங்கள் | மெதின் முழு நோன்மதி போயா தினம் |
| மார்ச் 26 | வெள்ளி | பெரிய வெள்ளி தினம் |
| ஏப்ரல் 13 | செவ்வாய் | சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய தினம் |
| ஏப்ரல் 14 | புதன் | சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம் |
| ஏப்ரல் 20 | செவ்வாய் | பக் முழு நோன்மதி போயா தினம் |
| மே 01 | சனி | உலக தொழிலாளர் தினம் |
| மே 17 | திங்கள் | ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள் தினம்) |
| மே 19 | புதன் | வெசாக் முழு நோன்மதி போயா தினம் |
| மே 20 | வியாழன் | வெசாக் முழு நோன்மதி போயா தினத்திற்கு அடுத்த தினம் |
| ஜூன் 18 | வெள்ளி | பொசொன் முழு நோன்மதி போயா தினம் |
| ஜூலை 18 | ஞாயிறு | எசல முழு நோன்மதி போயா தினம் |
| ஓகஸ்ட் 15 | ஞாயிறு | (மீலாதுன் நபி) நபிகளாரின் பிறந்த தினம் |
| ஓகஸ்ட் 16 | திங்கள் | நிகினி முழு நோன்மதி போயா தினம் |
| செப்டெம்பர் 15 | புதன் | பிணர முழு நோன்மதி போயா தினம் |
| ஒக்டோபர் 15 | வெள்ளி | வப் முழு நோன்மதி போயா தினம் |
| ஒக்டோபர் 28 | வியாழன் | தீபாவளி பண்டிகை தினம் |
| நவம்பர் 13 | சனி | இல் முழு நோன்மதி போயா தினம் |
| டிசம்பர் 13 | திங்கள் | உந்துவப் முழு நோன்மதி போயா தினம் |
| டிசம்பர் 25 | சனி | நத்தார் பண்டிகை தினம் |

