தென்னை பயிர்செய்கை சபை
பதவி வெற்றிடங்கள்
இலங்கை பிரசைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
1. முகாமையாளர் (கடன் மற்றும் அபிவிருத்தி)
சேவை இடம்: தலைமை அலுவலகம்
தகைமை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட விவசாய விசேட பட்டம் / முகாமைத்துவ பட்டம் ஒன்றை பெற்று, பட்டம் பெற்ற பின்னர் குறித்த துறையில் மூன்று (03) ஆண்டு அனுபவம்.
| 2026.01.01 | 2027.01.01 |
|---|---|
| ரூபா 81,710/- | ரூபா 91,690/- |
2. பிராந்திய முகாமையாளர்
சேவை இடம்: சேவை தேவைக்கு அமைய நாடு முழுவதும்
தகைமை
BSc விவசாய விசேட பட்டம் / விவசாய பட்டம் பெற்று, மூன்று (03) ஆண்டு அனுபவம்.
| 2026.01.01 | 2027.01.01 |
|---|---|
| ரூபா 81,710/- | ரூபா 91,690/- |
3. பண்ணை திட்டமிடல் அதிகாரி
சேவை இடம்: சேவை தேவைக்கு அமைய நாடு முழுவதும்
தகைமை
BSc விவசாய விசேட பட்டம் / விவசாய தொழில்முறை மற்றும் பயிர் விஞ்ஞான துறை சார்ந்த பட்டம். அரச/சபை/கூட்டுத்தாபனம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் கடன்/திட்டம் மற்றும் அபிவிருத்தி விவகாரம் தொடர்பில் ஓர் ஆண்டு அனுபவம் மற்றும் கணினி சான்றிதழ் கற்கை.
| 2026.01.01 | 2027.01.01 |
|---|---|
| ரூபா 66,781/- | ரூபா 74,010/- |
4. கணக்கு அதிகாரி
சேவை இடம்: சேவை தேவைக்கு அமைய நாடு முழுவதும்
தகைமை
கணக்கியல் பாடத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் / அங்கீகரிக்கப்பட்ட பட்டய தொழில்முறை கணக்கியல் நிறுவனத்தில் இடைநிலை பரீட்சை சித்தி அல்லது உயர் தொழில்நுட்ப டிப்ளோமா. கூடுதலாக ஓர் ஆண்டு கணக்கு அனுபவம்.
| 2026.01.01 | 2027.01.01 |
|---|---|
| ரூபா 66,781/- | ரூபா 74,010/- |
5. உள்ளக கணக்காய்வு அதிகாரி
சேவை இடம்: தலைமை அலுவலகம்
தகைமை
நிதி நிர்வாகம் / வர்த்தக முகாமைத்துவம் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்லது பட்டய கணக்காளர் நிறுவனத்தில் இடைநிலை பரீட்சை சித்தி / உயர் தொழில்நுட்ப டிப்ளோமா. கணக்கு மற்றும் கணக்காய்வு தொடர்பில் ஓர் ஆண்டு அனுபவம்.
| 2026.01.01 | 2027.01.01 |
|---|---|
| ரூபா 66,781/- | ரூபா 74,010/- |
6. தெங்கு அபிவிருத்தி அதிகாரி
சேவை இடம்: சேவை தேவைக்கு அமைய நாடு முழுவதும்
தகைமை
விவசாய துறை தொடர்பான தேசிய தொழில் தகைமை (N.V.Q.) 5ஆம் மட்டம் அல்லது அதற்கு மேல் தேர்ச்சி சான்றிதழ். (நேர்முகப் பரீட்சையில் தேர்ச்சி மட்டம் / தொழில்முறை தகைமைக்கு அமைய புள்ளிகள் வழங்கப்படும்.)
| 2026.01.01 | 2027.01.01 |
|---|---|
| ரூபா 48,784/- | ரூபா 52,700/- |
7. வதிவிட நாற்று மேடை பொறுப்பதிகாரி தரம் III
சேவை இடம்: சேவை தேவைக்கு அமைய நாடு முழுவதும்
தகைமை
விவசாய துறை தொடர்பான தேசிய தொழில் தகைமை (N.V.Q.) 5ஆம் மட்டம் அல்லது அதற்கு மேல் தேர்ச்சி சான்றிதழ்.
| 2026.01.01 | 2027.01.01 |
|---|---|
| ரூபா 48,784/- | ரூபா 52,700/- |
6 & 7 ஆம் பதவிகளுக்கு மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு ரூபா 17,800/- உட்பட அரசின் ஏனைய கொடுப்பனவுகளும் உரித்தாகும்.
விண்ணப்பதாரர் தகுதிகள்
- இலங்கை பிரசையாக இருத்தல் வேண்டும்.
- பதவிக்குரிய பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளவும், நாட்டின் எப்பகுதியிலும் பணியாற்றவும் தேவையான உடல் & உளத் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
- சிறந்த பண்புடையவராக இருத்தல் வேண்டும்.
ஆட்சேர்ப்பு முறை
எழுத்து போட்டிப் பரீட்சை மற்றும்/அல்லது நியமன அதிகாரியினால் நியமிக்கப்படும் சபை மூலம் நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும்.
விண்ணப்பிக்கும் முறை
2026.09.07 ஆம் திகதிக்கு முன் தகுதிகளை பூர்த்தி செய்திருக்கும் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மாதிரி படிவத்திற்கு அமைய அல்லது தாமாகவே தயாரித்த பொருத்தமான படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். ஒரு பதவிக்கு ஒரு விண்ணப்பம் மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கடிதத்தின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட வேண்டும்.
