🍃 இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் — வெற்றிடங்கள் 2026
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு
தலவாக்கலை, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பின்வரும் பதவிகளுக்காக இலங்கை பிரசைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. உள்ளக கணக்காய்வாளர் (Internal Auditor)
பணி விபரம்:
உள்ளக கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்காக போதுமான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை நிறுவி கண்காணித்தல், மேலும் வழக்கமான மற்றும் தொடர்ச்சியான/ எடுகோலான விசாரணைகள், ஆவணங்கள், பணம் மற்றும் களஞ்சியப் பொருட்களை சரிபார்த்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பாவார்.
வெளிவரி:
இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ICASL) இடைநிலை மட்ட தகைமை அல்லது முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனத்தின் (CIMA) இடைநிலை மட்ட தகைமை அல்லது சான்றளிக்கப்பட்ட மற்றும் நிறுவனக் கணக்காளர்கள் சங்கத்தின் இடைநிலை மட்ட தகைமை (ACCA) அல்லது முகாமைத்துவம் அல்லது வர்த்தகத்தில் நான்கு (04) ஆண்டு கௌரவ பட்டம்.
மற்றும்: மேலுள்ள தகைமையை பெற்ற பின் அரச திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ சபை அல்லது புகழ்பெற்ற வர்த்தக அமைப்பு ஒன்றில் கணக்கியல் மற்றும் நிதித் துறையில் குறைந்தது மூன்று (03) ஆண்டுகள் தகைமைக்கு பின்னரான அனுபவத்தை பெற்றிருத்தல் வேண்டும்.
📌 குறிப்பு: கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் சூழலில் பணிபுரிந்த அனுபவம் ஒரு தனிச்சிறப்பான தகைமையாக கருதப்படும்.
உள்ளக:
முகாமைத்துவம் மற்றும் வர்த்தகத்தில் இளமாணி பட்டம் அல்லது கணக்கியலில் உயர் தேசிய டிப்ளோமா மற்றும் தொடர்புடைய துறையில் கனிஷ்ட முகாமைத்துவ பிரிவில் தரம் 1 இல் தொடர்புடைய பதவி ஒன்றில் குறைந்தது ஐந்து (05) ஆண்டுகள் அனுபவம்.
சம்பள அளவு:
MM 1-2 (2025) ரூபா 94,170/- 10 x 2,480 - 15 x 3,450 - Rs. 170,720/- p.m.
(அடிப்படைச் சம்பளம் ரூபா 94,170/- 2027.01.01 இல் இருந்து வழங்கப்படும். 2026.01.01 இல் செலுத்தப்பட்ட சம்பளம் 83,803/- மற்றும் செலுத்தப்படாத தொகை ரூபா 10,367/-)
வயது:
22 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். உள்ளக அபேட்சர்களுக்கு உயர் வயதெல்லை பொருந்தாது.
தேர்வு முறை:
கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை மூலம்
2. பொறியியல் உதவியாளர் (சிவில்)
பணி விபரம்:
பொறியியல் பிரிவின் வதிவிட பொறியியலாளருக்கு உதவியாக, அனைத்து சிவில் நிர்மாண பணிகளின் பராமரிப்பு, நிர்மாண மதிப்பீடு, திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் பொறியியல் பிரிவின் மொத்த நிர்வாக மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவ பணிகளுக்கு உதவுதல். மேலும், வதிவிட பொறியியலாளரின் வழிகாட்டுதலின் கீழ் அளவுப் பட்டியல், பொருள் தேவை, செலவுக் கணிப்புகள், கேள்விமனு ஆவணங்கள் ஆகியவற்றை தயாரித்தல் மற்றும் நிர்வாகத்தால் அவ்வப்போது ஒப்படைக்கப்படும் ஏனைய கடமைகளையும் மேற்கொள்வதற்கு பொறுப்பாவார்.
வெளிவரி:
தொழில்நுட்பத்தில் (சிவில்) தேசிய டிப்ளோமா அல்லது பொறியியல் விஞ்ஞானத்தில் (NDES) தேசிய டிப்ளோமா
மற்றும்: அரச திணைக்களங்கள்/ கூட்டுத்தாபனம்/ சபை அல்லது புகழ்பெற்ற வர்த்தக அமைப்பு ஒன்றில் சிவில் பொறியியலில் குறைந்தது ஆறு (06) ஆண்டுகள் தகைமைக்கு பின்னரான அனுபவம்.
📌 குறிப்பு: மிணி (ஆற்றல்) மற்றும் சிவில் பொறியியலில் கையாளும் பராமரிப்பு செயற்பாடுகளில் அறிவு மேலதிக தகைமையாகும்.
உள்ளக:
க.பொ.த. (உ/த) பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று (03) பாடங்களில் சித்தியுடன் தொழில்நுட்ப அதிகாரி (சிவில்) தரம் 1 இல் ஐந்து (05) ஆண்டுகள் திருப்திகரமான சேவை.
சம்பள அளவு:
JM 1-2 (2025) ரூபா 74,010/- 10 x 1,360 - 18 x 2,040 - Rs. 124,330/- p.m.
(அடிப்படைச் சம்பளம் ரூபா 74,010/- 2027.01.01 இல் இருந்து வழங்கப்படும். 2026.01.01 இல் செலுத்தப்பட்ட சம்பளம் 66,781/- மற்றும் செலுத்தப்படாத தொகை ரூபா 7,229/-)
வயது:
22 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். உள்ளக அபேட்சர்களுக்கு உயர் வயதெல்லை பொருந்தாது.
தேர்வு முறை:
எழுத்துப் போட்டி பரீட்சை மற்றும்/ அல்லது கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை மூலம்
3. தொழில்நுட்ப அதிகாரி (வடிகட்டி நிலையம்)
பணி விபரம்:
நிறுவனத்தின் நிர்வாகப் பணிகள் மற்றும் தொழில்நுட்பப் பணிகளை எளிதாக்குதல், ஆதரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக வடிகட்டி நிலையத்தின் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பொறுப்பாவார்.
வெளிவரி:
முன்றாம் நிலைக்கல்வி தொழில்நுட்பக் கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப/ தொழில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட, தேசிய தொழில் தகைமை (NVQ) தரம் 05 இற்கு குறையாத தொடர்புடைய துறையில் தேர்ச்சி சான்றிதழ் ஒன்றை பெற்றிருத்தல்.
உள்ளக:
மேலுள்ள வெளிவரி அபேட்சர்களுக்கு தேவையான தகைமைகளை பெற்றிருத்தல்.
சம்பள அளவு:
MA 2-2 (2025) ரூபா 50,540/- 10 x 540 - 7 x 630 - 4 x 1,080 - 20 x 1,280 - Rs. 90,270/-
(அடிப்படைச் சம்பளம் ரூபா 50,540/- 2027.01.01 இல் இருந்து வழங்கப்படும். 2026.01.01 இல் செலுத்தப்பட்ட சம்பளம் 46,960/- மற்றும் செலுத்தப்படாத தொகை ரூபா 3,581/-)
வயது:
18 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். உள்ளக அபேட்சர்களுக்கு உயர் வயதெல்லை பொருந்தாது.
தேர்வு முறை:
எழுத்துப் போட்டி பரீட்சை மற்றும்/ அல்லது கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை மூலம்
மற்ற நன்மைகள்
- சேமலாப நிதியம்: தேர்வு செய்யப்பட்ட அபேட்சர் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு சம்பளத்தின் 10% பங்களிப்பை செலுத்தல் வேண்டிய அதேநேரம், நிறுவனமானது 15% பங்களிப்பையும், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு 3% பங்களிப்பையும் செலுத்தும்.
- இந்த பதவிகள் நிரந்தரமானவை.
விண்ணப்பிக்கும் முறை
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்தி, முகவரி மற்றும் இரு உறுதிநபர்களின் தொடர்பு விபரங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். அனைத்து சான்றிதழ்களின் உறுதி செய்யப்பட்ட பிரதிகளுடன் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தை இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
விண்ணப்பத்தை கொண்ட கடிதத்தின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், பணிப்பாளர், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், சென் கூம்ஸ், தலவாக்கலை என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
அரச திணைக்களம் மற்றும் சட்டரீதியான சபைகளை சேர்ந்த ஊழியர்களின் விண்ணப்பங்கள் அவரவர் பணியாற்றும் நிறுவனத்தின் தலைவரின் ஊடாக அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர் தெரிவு செய்யப்பட்டால், அவரின் நியமனத்தை ஏற்று விடுவிக்க முடியும் என்பதை நிறுவன தலைவர் சான்றளித்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் ஒருவர், ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்காக விண்ணப்பிப்பதாயின், ஒவ்வொரு பதவிக்கான சான்றிதழ்களின் பிரதிகளுடன் சேர்த்து தனித்தனி கடித உறைகளில் விண்ணப்பங்களை நிரப்பி அனுப்ப வேண்டும்.
⏰ கடைசி திகதி: 2026 ஓகஸ்ட் 10
