அகரம் Logo
N E W S

வர்த்தகமானி (பொது) வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் – 2023/2024 [ SEUSL]

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையம் (CEDPL)

வர்த்தகமானி (பொது) வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் – 2023/2024

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் வர்த்தகமானி (Bachelor of Commerce) பட்டப்படிப்புக்கு வெளிவாரி மாணவர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

📑 ஆகக் குறைந்த தகைமைகள்

  1. க.பொ.த. (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் (2023 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்திய பரீட்சையில்) ஆகக்குறைந்த சித்திகளுடன் பொதுச் சாதாரணப் பரீட்சையில் (General Common Test) குறைந்தபட்சம் 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் க.பொ.த. (சா/த) பரீட்சையில் கணிதம், தமிழ் / சிங்களம் உள்பட ஆறு பாடங்களில் இரண்டு அமர்வுக்கு மேற்படாத வகையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  2. அல்லது
  3. அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா தரம் (II) அல்லது முகாமைத்துவ உயர் தேசிய டிப்ளோமா தரம் (II)
  4. அல்லது
  5. இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியினால் வழங்கப்படும் தேசிய வணிகச் சான்றிதழ் பாடநெறி (இரண்டு வருட பாடநெறி)
  6. அல்லது
  7. இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியினால் வழங்கப்படும் அல்லது கல்வி அமைச்சின் மேலதிக கற்கை நிறுவனத்தினால் வழங்கப்படும் வணிகத்தில் கணக்குப் பதிவாளர்களுக்கான உயர் சான்றிதழ்
  8. அல்லது
  9. கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்துடன் CIMA Stage – II, அல்லது Chartered (CASL) Stage – II அல்லது AAT இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
  10. அல்லது
  11. இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் அங்கீகரிக்கப்படும் ஏனைய தகைமைகள்

📝 குறிப்பு

  • கற்கைநெறி தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் நடைபெறும்.
  • தெரிவு செய்யப்படும் முறை – நேர்முகப்பரீட்சை மற்றும்/அல்லது தேர்வுப்பரீட்சை.
  • செலுத்தப்பட்ட கட்டணங்கள் எக்காரணம் கொண்டும் மீளளிக்கப்படமாட்டாது.
விண்ணப்ப முடிவுத் திகதி 28.08.2026

விண்ணப்பிக்க இன்னும் மீதமுள்ள நேரம்:

கணக்கிடப்படுகிறது...
விண்ணப்பக் கட்டணம் LKR 1,500 பாடநெறிக் கட்டணம் LKR 150,000

📝 விண்ணப்பிக்கும் முறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்ய உரிய தகைமைச்சான்றிதழ்களை ஆன்லைன் (Online) மூலம் சமர்ப்பித்து விண்ணப்பிக்க முடியும். மேலதிக விபரங்களை SEUSL இணையதளமான கீழுள்ள இணைப்பில் அறிந்துகொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post