அகரம் Logo
N E W S

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 'தொழில்நுட்ப அதிகாரி' பதவிக்கான விண்ணப்பங்கள் - 2026

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்
'தொழில்நுட்ப அதிகாரி' பதவிக்கான
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

சம்பள வகுதி:
MA 2-3 (முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம்)
வெற்றிட எண்ணிக்கை - 17
கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள்
  • க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சையில் 04 திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் க.பொ.த. (உயர்தர) பரீட்சையில் விஞ்ஞான பாடப்பரப்பில் சகல பாடங்களிலும் சித்தியடைந்து மூன்றாம் நிலை கல்வி பாடநெறியை பயில்வதற்கு தேவையான தகுதி மட்டத்தைப் பெற்றிருத்தல்.
  • பதவியின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு தேசிய தொழில்சார் தகைமை (NVQ) ஐந்து (5) மட்டத்தில் பாடநெறி அல்லது இலத்திரனியல்/தொலைத் தொடர்பு/ மின் பொறியியல் தொடர்பான தேசிய டிப்ளோமா (NDT/HNDE/NDES/OUSL) அல்லது C&G Advanced Diploma சித்தியடைந்திருத்தல்.
வயது:
18 - 35 வயதிற்குள் (உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு அதிக வயதெல்லை பொருந்தாது)
சம்பள அளவு:
MA 2-3, 2025 - ரூ. 52,700 - 800×10 - 1190×11 - 1320×10 - 1350×10 - 100,490/-
ஏனைய கொடுப்பனவுகள்:
வாழ்க்கை செலவுக் கொடுப்பனவு ரூ. 17,800/- மற்றும் அதிகாரி & குடும்ப அங்கத்தவர்களுக்கான மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட கொடுப்பனவுகள்.
பொது தகவல்கள்
  • ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி உரிமையுடன் நிரந்தர பதவி.
  • தெரிவு: நேர்முகத் தேர்வு மூலம் தொழில்நுட்ப உதவியாளராக தெரிவு செய்யப்படுவர்.
  • பயிற்சிக் காலம் 06 மாதம்; பயிற்சிக் காலத்தில் செயற்பாடுகளின் அடிப்படையில் தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படுவர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் பயிற்சிக்குப் பின்னர் 05 வருடகாலம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சேவை செய்வதாக உறுதிமொழி வழங்க வேண்டும்.
  • அரச திணைக்களம் அல்லது கூட்டுத்தாப சேவையில் ஈடுபட்டுள்ள விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தை நிறுவன தலைமையூடாக சமர்ப்பித்தல் வேண்டும்.
கவனிக்கவும்: நேர்முகத் தேர்வு கட்டமைக்கப்பட்ட பரீட்சை ஆவதுடன் அங்கு பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் திறமை அடிப்படையில் குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி திகதி: 2026.08.17

Post a Comment

Previous Post Next Post