இலங்கை துறைமுக அதிகாரசபை
Sri Lanka Ports Authority (SLPA)
பதவி வெற்றிடங்கள்
இலங்கை துறைமுக அதிகாரசபையில் கீழ் குறிப்பிடப்படும் பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தொழில் பயிற்சி பெற்ற பதவிகள் (SS) — 08 வகைகள்
- கடலக பொருத்துபவர் (Marine Fitter)
- டீசல் பொருத்துபவர் (Diesel Fitter)
- ஒட்டுபவர் (Welder)
- அலுமினியம் பெப்ரிகேட்டர் (Aluminium Febricator)
- கொல்ல வேலையாளர் (Blacksmith)
- வார்ப்பவர் (Moulder)
- குஷன் வேலையாளர் (Cushion Worker)
- வடிவமைப்பாளர் (Patten Maker)
- க.பொ.த. (சா/த) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத முறையில் மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
- அரசாங்கத்தால் அல்லது மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப அல்லது தொழிற் பயிற்சி நிறுவனமொன்றினால் வழங்கப்படும் தொழில் சார் சான்றிதழ் அல்லது தொழில் முன் சார்ந்த தேசிய தொழில் தகைமை சான்றிதழு (NVQ 3)
- அத்துடன் அரச அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவன மொன்றில் விண்ணப்பிக்கப்படும் பதவியில் முன்று (03) வருட அனுபவம்.
| சம்பள கிரேடு | 10:3 (SS3) — அடிப்படை ரூ.35,845/- + வருடாந்த ஏற்றம் ரூ.365/- (மொத்தம் மாதாந்தம் ~ரூ.111,000) |
| வயது எல்லை | 18 – 45 வயது (அரச சேவை விண்ணப்பதாரர்களுக்கு இவ்வயதெல்லை பொருந்தாது) |
9. தோல் செப்பனிடுபவர் (Cobbler) — SS
தகைமைகள்:
- க.பொ.த. (சா/த) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத முறையில் மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
- அரசாங்கத்தால் அல்லது மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்படும் தொடர்புடைய துறை சார்ந்த சான்றிதழ் அல்லது தேசிய தொழில் தகைமை சான்றிதழு (NVQ 3)
- அத்துடன் அரச அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனமொன்றில் தோல் செப்பனிடுபவராக முன்று (03) வருட அனுபவம்.
| சம்பள கிரேடு | 10:3 (SS3) — அடிப்படை ரூ.35,845/- + வருடாந்த ஏற்றம் ரூ.365/- (மொத்தம் மாதாந்தம் ~ரூ.111,000) |
| வயது எல்லை | 18 – 45 வயது (அரச சேவை விண்ணப்பதாரர்களுக்கு இவ்வயதெல்லை பொருந்தாது) |
ஏனையவை — சகல விண்ணப்பதாரர்களும்
- பதவி தொடர்பில் ஒப்படைக்கப்படும் பணிகளை சிறப்பாக நிறைவேற்றுதல் போலவே, நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கு அவசியமான உடல், உள தகுதியினையுடையவராக இருத்தல் வேண்டும்.
- சிறந்த நடத்தையுடையவராக இருத்தல் வேண்டும்.
- நேர்முகக்குழுவின் தீர்மானத்தின்படி அல்லது பதவிக்கு அவசியமான மருத்துவப் பரிசோதனையொன்றில் சித்தியடைதல் வேண்டும்.
- இப்பதவி நிரந்தரப் பதவியொன்றாகும் — ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு உரித்துடையதாகும்.
- அரச அல்லது அரச கூட்டுத்தாபனங்களில் சேவையிலுள்ள விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை தமது திணைக்கள/கூட்டுத்தாபன தலைவர்கள் ஊடாக சமர்ப்பித்தல் வேண்டும்.
கவனிக்க: 2016.12.01 ஆம் திகதி அரச நிருவாக அமைச்சினால் வெளியிடப்பட்ட 28/2016 சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் மேலே ஆட்சேர்க்கும் நடைமுறையிலுள்ள தொழிற் பிரிவினையின் பதவிகளுக்கு ஆட்சேர்க்கையில் தொழில் தகைமையாக NVQ 3 அல்லது NVQ 4 உடன் கல்வித் தகைமையாக க.பொ.த.(சா/த) அல்லது க.பொ.த.(உ/த) சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் NVQ 3 மற்றும் NVQ 4 தகைமைகள் பெற்றிருத்தல் முறையே க.பொ.த.(சா/த) மற்றும் க.பொ.த.(உ/த) பரீட்சையில் சித்தியடைதலுக்கு சமானதென குருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
பூரண சுயவிபரங்களை உள்ளங்கி பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், ஏனைய உரிய கல்வி மற்றும் தொழில் தகைமை சான்றிதழ்கள், சேவைச் சான்றிதழ்களுடன் உறவினரல்லாத இரு பரிந்துரையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளுடன் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் பதிவு தபாலில் 2026.07.23 ஆம் திகதிக்கு முன்னர் கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். தபாலில் காணாமல் போகும் அல்லது தாமதமாகும் விண்ணப்பங்களுக்கு துறைமுக அதிகாரசபை பொறுப்பேற்காது. குறித்த விண்ணப்பப்படிவங்களின் கடிதத்தில் குறிப்பிடப்படும் பதவி குறிப்பிடப்படுதல் வேண்டும். விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும் இறுதித் திகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
📄 விண்ணப்பப் படிவம் (Application Form)
📄 விண்ணப்பப் படிவம் (Application Form)
அனுப்ப வேண்டிய முகவரி
பிரதான முகாமையாளர் (மனிதவளம் மற்றும் நிருவாகம்),
மனிதவளம் மற்றும் நிருவாகப் பதவி,
இலங்கை துறைமுக அதிகாரசபை,
கொச்சிக்கடை, கொழும்பு - 13.
பிரதான முகாமையாளர் (மனிதவளம் மற்றும் நிருவாகம்),
மனிதவளம் மற்றும் நிருவாகப் பதவி,
இலங்கை துறைமுக அதிகாரசபை,
கொச்சிக்கடை, கொழும்பு - 13.
Tags
Vacancy
