அகரம் Logo
N E W S

க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சை 2026 — விண்ணப்பம் மற்றும் வழிகாட்டல்

இலங்கை பரீட்சைத் திணைக்களம்
தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சை — 2026
Online விண்ணப்ப வழிகாட்டி

தனிப்பட்ட முறையில் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விரும்பும் அனைவரும் கீழே தரப்பட்டுள்ள காலக்கெடு, கட்டணம் மற்றும் வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றி, முழுமையாக நிகழ்நிலையில் (online) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் மூடும் திகதி
23 ஜூலை 2026
இப்போது விண்ணப்பிக்க →
1

முக்கிய திகதிகள்

03 ஜூலை 2026
தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான online விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கும்
23 ஜூலை 2026, இரவு 12.00
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் இறுதி நேரம் — இதற்குப் பின் போர்ட்டல் மூடப்படும்
தொடர்ச்சியாக
அனுமதி அட்டை கிடைத்தவுடன் பெயர், பாடம், மொழிமூலம் திருத்தங்களுக்கான வசதி (online)
2

விண்ணப்பிக்கும் முறை — படிப்படியாக

  1. doenets.lk தளத்தில் "எமது சேவைகள்" → "Exam Information Centre" எனும் இணைப்பினூடாக அல்லது நேரடியாக onlineexams.gov.lk/eic இற்குள் நுழையவும்.
  2. உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை எண், தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்யவும்.
  3. பதிவு செய்த தொலைபேசிக்கு வரும் OTP குறியீட்டை பயன்படுத்தி முறைமைக்குள் நுழையவும்.
  4. பொதுவான வழிகாட்டல்கள், அறிவுறுத்தல் காணொளி ஆகியவற்றை முழுமையாகப் பார்வையிட்ட பின்னரே "Next" எனும் பொத்தானை அழுத்தி விண்ணப்பப் படிவத்தை நிரப்பத் தொடங்கவும்.
  5. பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறு முழுப்பெயரை இரண்டு தடவை சரிபார்த்து உள்ளீடு செய்யவும்; சிறு வேறுபாடு இருந்தாலும் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே இரு தடவையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
  6. தோற்றுவதற்கு விரும்பும் நகரத்தையும் பாடங்களையும் கவனமாகத் தெரிவு செய்யவும் — இது பின்னர் மாற்ற முடியாதது.
  7. தபால் அலுவலகம் மூலமாகவோ, அல்லது கடன்/பற்று அட்டை மூலமாகவோ பரீட்சைக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை PDF ஆகத் தரவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
3

பரீட்சைக் கட்டணம் (பாடங்களின் எண்ணிக்கை அடிப்படையில்)

பாடங்களின் எண்ணிக்கை123456–9
கட்டணம் (ரூபா)100/-150/-200/-250/-300/-350/-

கட்டணம் ஒருமுறை செலுத்தப்பட்டால், முழுமையாகவோ பகுதியாகவோ திரும்பப் பெறவோ, வேறு பரீட்சைக்கான கட்டணமாக மாற்றவோ முடியாது.

4

கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஒரு விண்ணப்பம் மட்டும்: ஒரு விண்ணப்பதாரி ஒரு விண்ணப்பப் படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
சமர்ப்பித்த பின் மாற்றம் இல்லை: விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்த பின்னர் எக்காரணத்திற்காகவும் அதில் மாற்றம் செய்யப்படமாட்டாது. எனவே நிரப்பும்போதே சரிபார்த்துக் கொள்ளவும்.
அரசு பாடசாலை மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது: அரசு பாடசாலையில் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மாணவர் தனிப்பட்ட விண்ணப்பதாரியாக விண்ணப்பிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டால் பெறுபேறு இரத்துச் செய்யப்படுவதுடன், எதிர்காலப் பரீட்சைகளுக்கும் தடை விதிக்கப்படும்.
விசேட தேவையுடைய விண்ணப்பதாரிகள்: "Are you a special needs candidate?" எனும் கேள்விக்கு 'Yes' எனத் தெரிவு செய்தால், அதற்குரிய கீழுள்ள தகவல்களை பூர்த்தி செய்வது கட்டாயம்.
அடையாளச் சான்று: பரீட்சை மண்டபத்தில் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றுள் ஒன்றைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும் — இது அனைத்து வினாப்பத்திரங்களுக்கும் பொருந்தும்.
5

இரண்டாம் பாடத்தொகுதி — செய்முறைப் பரீட்சை தேவைப்படும் பாடங்கள்

கீழ்க்குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் செய்முறைப் பரீட்சைக்கும் கட்டாயம் தோற்ற வேண்டும். இதைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கு எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றியிருப்பினும் பெறுபேறு வழங்கப்படாது.

சங்கீதம் (கீழைத்தேயம்)40
சங்கீதம் (மேலைத்தேயம்)41
சங்கீதம் (கர்நாடகம்)42
நடனம் (சுதேச)44
நடனம் (பரதம்)45
நாடகமும் அரங்கியலும் (சிங்களம்)50
நாடகமும் அரங்கியலும் (தமிழ்)51
நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்)52
6

உதவிக்கான தொடர்பு விபரங்கள்

மின்னஞ்சல்
gceolexamsl@gmail.com
தொலைபேசி எண்கள்
011-2784208 · 0112784537 · 0112785922
நிகழ்நிலை அலகு
011-3661122 · 011-3671568

Post a Comment

Previous Post Next Post