இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் (Sri Lanka Customs) நிலவும் சுங்க அதிகாரி பதவிகளுக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தகுதியான இலங்கை குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்கான அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு தொடர்பான முழுமையான விபரங்கள், தகைமைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது.
📌 முக்கிய திகதிகள் (Important Dates):
- விண்ணப்பங்கள் ஆரம்பமாகும் திகதி: 2026 மே 11 மு.ப. 09.00 மணி முதல்
- விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி: 2026 யூன் 08 பி.ப. 09.00 மணி வரை
🛑 விண்ணப்பதாரர்களுக்கான அடிப்படைத் தகைமைகள்:
1. வயது எல்லை (Age Limit):
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருத்தல் வேண்டும் (விபரங்களை உத்தியோகபூர்வ அறிவித்தலில் சரிபார்க்கவும்).
2. உடற்தகைமை (Physical Requirements):
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பின்வரும் உடற்தகைமைகளைக் கொண்டிருப்பது கட்டாயமாகும்:
ஆண் விண்ணப்பதாரர்கள்: ஆகக்குறைந்தது 5 அடி 5 அங்குலம் உயரமும், விரிவடைந்த நிலையில் 33 அங்குலம் மார்புச் சுற்றளவும் கொண்டிருக்க வேண்டும்.
பெண் விண்ணப்பதாரர்கள்: ஆகக்குறைந்தது 5 அடி 3 அங்குலம் உயரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
3. இதர தகைமைகள்:
சமயப் பிரிவொன்றில் மதகுரு அந்தஸ்திலுள்ள நபர்கள் இப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஆங்கில மொழிக்கான சாதாரண சித்தி (S) அல்லது அதற்கு மேற்பட்ட தகைமையைக் கொண்டிருத்தல் அவசியமாகும் (தேசிய/சர்வதேச விளையாட்டுத் துறை சான்றிதழ்கள் இருப்பின் நேர்முகத் தேர்வின் போது மேலதிக சாதகமாக அமையும்).
📝 பரீட்சை நடைபெறும் முறை (Examination Procedure):
இப்பரீட்சையானது பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களில் நடத்தப்படும்.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அமைவாக பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமது முதலாவுது மற்றும் இரண்டாவது மாவட்ட விருப்பத் தெரிவுகளை விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிட வேண்டும். பின்னர் மாவட்டங்களை மாற்ற முடியாது.
💻 விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பங்கள் இணையத்தளம் (Online) ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் போதே நேர்முகத் தேர்வுக்குத் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களைச் சரியாகத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரசு ஊழியர்கள்: ஏற்கனவே அரச அல்லது மாகாண அரச சேவையில் பணியாற்றுபவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதன் பிரதியொன்றைத் தமது நிறுவனத் தலைவரிடம் கையளிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் போது நிறுவனத் தலைவரால் சான்றுப்படுத்தப்பட்ட விண்ணப்பப் பிரதி மற்றும் சேவை உறுதிப்படுத்தல் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
🔍 தெரிவு முறை (Selection Method):
எழுத்து மூலப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, நேர்முகப் பரீட்சையில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள், அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுங்கத் திணைக்களப் பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படுவர்.
💡 பயனுள்ள அறிவுறுத்தல்: இறுதித் திகதி வரை காத்திராமல் முன்கூட்டியே விண்ணப்பிப்பதன் மூலம் இணையத்தளத் தாமதங்கள் மற்றும் தொழில்நுட்பப் பாதிப்புகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
