N E W S

தொல்பொருளியல் திணைக்களம் வேலைவாய்ப்பு - 2026

தொல்பொருளியல் திணைக்களம் - வெற்றிட நிரப்புதல்
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும்
தொல்பொருளியல் திணைக்களம்

ஆரம்ப மட்டத்திலான (தொழில்நுட்பம் சாராத) PL–I
தொல்பொருளியல் உதவியாளர் தரம் III / காவலாளி தரம் III

⚡ வெற்றிட நிரப்புதல் — திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு
⚠️ விண்ணப்பங்கள் ஏற்கும் இறுதி நாள்: 2026.07.06 — தாமதமாகக் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தொல்பொருளியல் திணைக்களத்திற்கு உரியான நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தொல்பொருளியல் இடங்களில் தற்போது வெற்றிடங்களாக உள்ள ஆரம்ப மட்டத்திலான (தொழில்நுட்பம் சாராத) PL–I தொல்பொருளியல் உதவியாளர் தரம் III / காவலாளி தரம் III ஆகிய பதவிகளுக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

01. வெற்றிட விவரங்கள்
பதவி திறந்த அடிப்படையில் உருவாகியுள்ள வெற்றிடங்கள்
தொல்பொருளியல் உதவியாளர் தரம் III 191
காவலாளி தரம் III 324
02. சம்பள அளவுத் திட்டம்
💰 ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது நிர்வாக சம்பளநிரல் (2025.03.25) — இலக்கம் 10/2025
PL–I: ரூபா 40,000 – 10 x 450 – 10 x 490 – 10 x 540 – 12 x 590 – 61,880/-
03. தகைமைகள்
🎓 கல்வித் தகைமைகள்
  • கல்விப் பொதுத் தராதரப் பத்திரம் (சாதாரண தரம்) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாது ஆகக் குறைந்தது இரண்டு திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
  • க.பொ.த. (சா.த.) பரீட்சையில் தொழில்நுட்பம் பாடத்திற்கான எழுது மூலப் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பின் (குறித்த பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பினும்) முழுமையாக்கப்படாத பாடமாகக் கருதி சித்தி எய்தவில்லை என்பதாகத் தீர்மானிக்கப்படும்.
  • விரும்புகுரிய சிங்களம், விரும்புகுரிய தமிழ், விரும்புகுரிய ஆங்கிலம் போன்ற பாடங்கள் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் உள்ளடக்கப்படாத பாடங்கள் என்பதனால் அப்பாடங்களில் பெற்றுள்ள சித்திகள் கணக்கிலெடுக்கப்பட மாட்டாது.
⚒️ தொழில் தகைமைகள்

உரிய துறையில் தொழில் தகைமைகளைக் கொண்டிருத்தல் விசேட தகைமையாகக் கருதப்படும்.

📋 அனுபவங்கள்

உரிய துறையில் அனுபவங்களைக் கொண்டிருத்தல் விசேட தகைமையாகக் கருதப்படும்.

💪 உடற் தகைமைகள்

அனைத்து விண்ணப்பதாரிகளும் இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் சேவையாற்றவதற்கும் மற்றும் உரிய பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கும் போதுமானளவு உடல் மற்றும் உள ரீதியான தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு
குறைந்தபட்ச வயது
18 வயது
அதிகபட்ச வயது
45 வயது
04. நேர்முகப் பரீட்சை — புள்ளி வழங்கல்
விடயம்புள்ளிகள்
கல்வித் தகைமைகள்20
விளையாட்டுத் தகைமைகள்10
பதவிக்குரிய துறையில் பெற்றுள்ள அனுபவங்கள்45
தொல்லியல் சங்கங்கள் உட்பட தன்னார்வ சங்கங்களில் அங்கத்துவம்05
ஏனைய தொழில் தகைமைச் சான்றிதழ்கள்15
தேகாரோக்கியம்05

✅ குறித்த நேர்முகப் பரீட்சையில் 40% வீதத்திற்கும் அதிகமான புள்ளிகள் பெற வேண்டும். வெற்றிடங்களின் எண்ணிக்கையின்படி அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவார்கள்.

06. இணைக்க வேண்டிய ஆவணங்கள்
  • பிறப்புச் சாட்சிப் பத்திரம்
  • நல்லொழுக்கம் தொடர்பாக அன்மையில் பெற்றுக் கொண்ட நற்சான்றிதழ் (உறவினரல்லாத ஒருவரிடமிருந்து)
  • கல்வித் தகைமைகளை உறுதிப்படுத்துகின்ற சான்றிதழ்கள்
  • வதிவினை உறுதிப்படுத்துகின்ற கிராம அலுவலரின் சான்றிதழ்
  • விளையாட்டுகளில் அதிகூடிய தகைமைகளைப் பெற்றதற்கான சான்றிதழ்கள்
  • ஏனைய தொழில் தகைமைகளுக்கான சான்றிதழ்கள்
  • தொழில் அனுபவங்கள் தொடர்பான சான்றிதழ்கள்
  • தேசிய அடையாள அட்டையின் சாயல் பிரதி
⚠️ முக்கிய குறிப்பு: விண்ணப்பங்கள் அனுப்புகின்ற தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் தாம் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிட வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் அல்லது குறைபாடுகளுடன் கூடிய விண்ணப்பங்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்குப் பொருத்தமில்லாத விண்ணப்பங்கள் எந்த அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்
📅 விண்ணப்பங்கள் ஏற்கும் இறுதி தேதி
2026 ஜூலை 06
இந்த நாளுக்கு முன்னர் அல்லது இந்த நாளில் தபால் கோடு 07 க்கு அனுப்பி வைக்கவும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
📮 தபால் முகவரி
தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம்
தொல்பொருளியல் திணைக்களம்
த.பே. இலக்கம் 532
சேர் மார்க்கஸ் பிரனாந்து மாவத்தை
கொழும்பு 07
05. பொது நிபந்தனைகள்
  • ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்கும் இறுதி நாளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகைமைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரிகள் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • மிகச் சிறந்த நல்லொழுக்கம் உடையவராகவும், சிறந்த தேகாரோக்கியத்தைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
  • ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டவர்கள் நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்றுவதற்குக் கட்டுப்பட்டவராவர்.
  • கடந்த ஐந்து வருடத்தினுள் குறித்த பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும் (அதனை அப்பிரதேச கிராம அலுவலர் அத்தாட்சிப்படுத்துதல் வேண்டும்).

க. ஜ. சௌரத் விக்கிரமசிங்கர

தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் (பதிற் கடமை)

2026, ஜூன் மாதம் 03 ஆம் திகதி

கொழும்பு 07

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post