இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் நிரல் நிலை உதவி உப பொலிஸ் பரிசோதகர் (Apprentice Sub-Inspector - General / STF) பதவிகளுக்காக தகுதியுள்ள இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
முக்கிய தகவல்கள் (Key Details)
■ பதவி: உதவி உப பொலிஸ் பரிசோதகர் (SI)
■ விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் மட்டுமே (www.police.lk)
■ விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: ஜூன் 05, 2026
விண்ணப்பிக்க இன்னும் மீதமுள்ள நேரம்:
தகுதிகள் (Eligibility Criteria)
1. கல்வித் தகுதிகள்
● G.C.E. (O/L): ஒரே அமர்வில் கணிதம், விஞ்ஞானம் , சிங்களம்/தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட 06 பாடங்களில் சித்தி (Credit passes - C) பெற்றிருத்தல் வேண்டும்.
● G.C.E. (A/L): ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும் (பொதுச் சாதாரண பரீட்சை தவிர்ந்த).
2. உடல் தகுதிகள்
● வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். (பொலிஸ் சேவையில் இருப்பவர்களுக்கு அதிகபட்ச வயது 28).
● உயரம்: குறைந்தபட்சம் 5 அடி 6 அங்குலம் (167.64 cm).
● மார்பளவு: குறைந்தபட்சம் 32 அங்குலம் (சாதாரண நிலையில்).
● பார்வை : கண்ணாடி அணியாமல் 6/12 பார்வை த் திறன் இருக்கவேண்டும்.
3. ஏனைய தேவைகள்
● திருமண நிலை : திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும் (விவாகரத்து பெற்றவர்கள் அல்லது பிள்ளைகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது).
● நன்னடத்தை : விண்ணப்பதாரர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மீது எவ்வித குற்றவியல் தண்டனைகளும் இருக்கக்கூடாது.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் (Salary & Benefits)
- ஆரம்ப அடிப்படைச் சம்பளம் - ரூபா 55,410 ஆகும்.
- வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு - ரூபா 17,800.00
- சீருடை பராமரிப்பு - ரூபா 250.00
- ஒருங்கிணைந்த கொடுப்பனவு - ரூபா 13,440.20
- உணவு மற்றும் தங்குமிடம் - ரூபா 31,800.00
- கஷ்டப் பிரதேச கொடுப்பனவு - ரூபா 2,000.00
தெரிவு முறை (Selection Process)
1. ஆரம்ப நேர்முகத் தேர்வு: தகுதிகள் மற்றும் உடல் அளவீடுகள் சரிபார்க்கப்படும்.
2. உடல் தகுதித் தேர்வு: 1000m ஓட்டம், புஷ்-அப்ஸ், சிட்-அப்ஸ் போன்றவை .
3. எழுத்துப் பரீட்சை : நுண்ணறிவு மற்றும் பொது அறிவு வினாத்தாள்கள்.
4. தெரிவு நேர்முகத் தேர்வு: மேலதிக தகுதிகள் மதிப்பீடு .
5. மருத்துவ மற்றும் பின்னணி சோதனை .
