N E W S

பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை 2026 – அனுமதி அட்டைகள் (Admission Cards) வெளியிடப்பட்டுள்ளன!



இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்படும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை - 2026 இற்கான அனுமதி அட்டைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் உடனடியாக தமது அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

​பரீட்சை விபரங்கள்

​பரீட்சை திகதி: 2026 மே 24 (ஞாயிற்றுக்கிழமை)

​பரீட்சை கால அட்டவணை

பகுதி 01: நுண்ணறிவு (Aptitude) 

🕘 மு.ப. 09.00 – மு.ப. 10.00

பகுதி 02: பொது அறிவு (General Knowledge) 

🕙 மு.ப. 11.00 – பி.ப. 12.00


விண்ணப்பதாரிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்

​பரீட்சார்த்திகள் பின்வரும் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

  • ​உங்களது அனுமதி அட்டையை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • ​அனுமதி அட்டையில் உள்ள உங்களது பெயர், தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் மற்றும் பரீட்சை நிலையம் ஆகியவற்றைச் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  • ​பரீட்சை மண்டபத்திற்குச் செல்லும்போது உங்களது அனுமதி அட்டை மற்றும் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையை (NIC) தவறாது எடுத்துச் செல்லவும்.
  • ​பாதுகாப்பு கருதி அனுமதி அட்டையின் மேலதிக பிரதிகளை (Printouts) கைவசம் வைத்திருக்கவும்.
  • ​அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து அறிவுறுத்தல்களையும் முறையாகப் பின்பற்றவும்.
  • ​பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னதாகவே பரீட்சை நிலையத்திற்குச் சமூகமளிக்கவும்.

குறிப்பு: மேலும் மேலதிக விபரங்களுக்கு உங்களது அனுமதி அட்டையினை (Admission Card) முழுமையாக வாசிக்கவும். பரீட்சை எழுதும் அனைத்து பட்டதாரிகளுக்கும் எமது வாழ்த்துக்கள்!


E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post