E-Akaram
E-AKARAM
TOP NEWS
Fetching updates...

புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவியாளர் (இயந்திர) III ஆம் தரம் – பயிற்சிக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு 2026

இலங்கை புகையிரத திணைக்களம் | வர்த்தமானி 2026.11.06

புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவியாளர் (இயந்திர) III ஆம் தரம் – பயிற்சிக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு 2026

முகாமைத்துவ உதவி தொழிநுட்பத் தொகுதி 02 (MT-02) சேவைப் பிரிவு – திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 80 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி2026.12.07பதிவுத் தபால் மூலம் மட்டும் அனுப்பப்பட வேண்டும்
80வெற்றிடங்கள்
18 - 45வயது எல்லை
ரூ.1,200பரீட்சைக் கட்டணம்
01 வருடம்பயிற்சிக் காலம்

பதவி மற்றும் வெற்றிட விபரம்

விபரம்தகவல்
நிறுவனம்இலங்கை புகையிரத திணைக்களம்
பதவிபுகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவியாளர் (இயந்திர)
சேவைப் பிரிவுமுகாமைத்துவ உதவி தொழிநுட்பத் தொகுதி 02 (MT-02)
தரம்III ஆம் தரம் (பயிற்சிக் காலத்தின் பின்)
வெற்றிடங்கள்80
ஆட்சேர்ப்பு முறைதிறந்த போட்டிப் பரீட்சை
பதவி நிலைநிரந்தரமானது, ஓய்வூதிய உரித்துடையது

ஆட்சேர்ப்பு செய்யப்படும் துறைகள்

விண்ணப்பதாரி கற்ற பாடநெறிக்கு ஏற்ப பின்வரும் துறைகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும்:

சாதாரண பொருத்துநர்டீசல் பொருத்துநர்இயந்திரவியல் பொருத்துநர்மெசின்காரர்உருக்குகாய்ச்சுபவர்கேஸ் வெட்டுநர்தகடு வைப்பவர்பொய்லேறு செய்பவர் / பொய்லேறு பொருத்துநர்மோட்டார் தொழிநுட்பவியலாளர்

தகைமைகள்

1. கல்வித் தகைமைகள்

அசிங்களம் / தமிழ் / ஆங்கிலம், கணிதம் மற்றும் வேறு ஏதேனும் இரு பாடங்களில் திறமை சித்திகளுடன், ஒரே தடவையில் 06 பாடங்களில் க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.
ஆக.பொ.த (உயர்தர) பரீட்சையில் பௌதீகவியல் / தொழிநுட்பவியல் பாடத் துறையின் கீழ் அனைத்துப் பாடங்களிலும் (சாதாரண பொதுப் பரீட்சையைத் தவிர்த்து) சித்தி பெற்றிருத்தல்.
குறிப்பு 2: 2017.06.15 ஆந் திகதிக்கு இலங்கை ஜேர்மன் புகையிரத தொழிநுட்பப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப் பாடநெறிகளுக்காக உள்ளெடுக்கப்பட்டுள்ள பயிலுநர்கள், பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்து பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருந்தால், மேற்கூறிய கல்வித் தகைமைகளைக் கருத்திற் கொள்ளாது விண்ணப்பிக்கலாம்.

2. தொழிற் தகைமைகள் (பயிற்சிக் காலம்: 01 வருடம்)

1இலங்கை ஜேர்மன் புகையிரத தொழிநுட்பப் பயிற்சி நிறுவனத்தில், பதவிக்கு ஏற்புடைய துறையொன்றில் (மேற்குறிப்பிட்ட துறைகள்) இரண்டரை (2 1/2) வருடங்களுக்குக் குறையாத முழுநேர தொழிநுட்பப் பாடநெறியைக் கற்று சான்றிதழ் பெற்றிருத்தல்.
2அல்லது மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில், துறைக்கு ஏற்புடைய இரண்டரை (2 1/2) வருடங்களுக்குக் குறையாத பாடநெறியைக் கற்று சான்றிதழ் பெற்றிருத்தல்.
குறிப்பு 3 (முன்னுரிமை): ஆட்சேர்ப்பில் இலங்கை ஜேர்மன் புகையிரதப் பயிற்சி நிலையத்தின் பயிலுநர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்களை இணைத்த பின்னர் எஞ்சிய வெற்றிடங்களுக்கு ஏனைய நிறுவனங்களில் தொழிநுட்பப் பாடநெறிகளைக் கற்றவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர்.

3. வயதெல்லை

விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும் இறுதித் திகதிக்கு 18 வயதுக்குக் குறையாமலும் 45 வயதை விஞ்சாமலும் இருத்தல் வேண்டும்.

4. உடற்சார் தகைமைகள் மற்றும் ஏனையவை

  • இலங்கையில் எப்பிரதேசத்திலும் கடமையாற்றப் போதிய உடல், உளச் சார் பொருத்தப்பாடு இருத்தல் வேண்டும்.
  • புகையிரத நிபந்தனைக் கோவையில் காட்டப்பட்டுள்ள கண்பார்வை அளவைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
  • தேவையான அனைத்துத் தகைமைகளும் விண்ணப்ப இறுதித் திகதிக்குள் நிறைவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
  • பதவிக்கு ஏற்புடைய அனுபவம் இருப்பின் அது விசேட தகைமையாகக் கருதப்படும்.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்

பயிற்சிக் காலக் கொடுப்பனவு

  • 2026.01.01 முதல் 2026.12.31 வரை: மாதம் ரூ.41,209/-
  • 2027.01.01 முதல்: மாதம் ரூ.42,780/-

III ஆம் தரத்திற்கான சம்பள அளவுத்திட்டம்

MT-02-2025 : ரூ.50,630 - 10x630 - 11x670 - 10x1010 - 10x1190 - 86,300

பொது நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025 இன் உப அட்டவணை 01 இற்கமைய. அரசாங்கம் காலத்திற்குக் காலம் வழங்கும் ஏனைய கொடுப்பனவுகளுக்கும் உரித்துடையவராவர்.

தெரிவு முறை

1தகைமைகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரிகள் எழுத்துமூலப் பரீட்சை மற்றும் தகைமைகளை மதிப்பிடும் நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்படுவர்.
2எழுத்துமூலப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில், நிலவும் வெற்றிடங்களின் இரு மடங்கு எண்ணிக்கையினர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
3எழுத்து மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் பெற்ற மொத்தப் புள்ளிகளின் திறமை முறைப்படி, முதலில் ஒரு வருடப் பயிற்சிக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவர். சமபுள்ளிகள் காரணமாக வெற்றிடங்களை விட அதிக எண்ணிக்கை காணப்பட்டால், நடைமுறை விதிக் கோவையின் 92 ஆவது பந்தியின்படி அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளைக்கமைய தீர்மானிக்கப்படும்.
4பயிற்சி இறுதியில் நடைபெறும் எழுத்து மற்றும் பிரயோகப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்கள் III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படுவர். முதல் தடவை சித்தியடையாதவர்களுக்கு மேலும் 02 சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்; அதிலும் சித்தியடையாதவர்களின் சேவை முடிவுறுத்தப்படும்.

எழுத்துமூலப் பரீட்சை (ஆட்சேர்ப்புக்காக)

பாடம்காலம்அதிகூடிய புள்ளிசித்தியடையும் புள்ளி
பொது அறிவு மற்றும் நுண்ணறிவுப் பரீட்சை1 மணித்தியாலம்10040%
தொழிநுட்பப் பாடம்2 மணித்தியாலங்கள்10040%
  • பொது அறிவு மற்றும் நுண்ணறிவு: இலங்கையின் சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார அறிவு; தேசிய, சர்வதேச முக்கிய நிகழ்வுகள்; விஞ்ஞான, பௌதீக அறிவு; தர்க்க ரீதியான சிந்தனைத் திறன்.
  • தொழிநுட்பப் பாடம்: பதவிக்கு ஏற்ப அறிந்திருக்க வேண்டிய அடிப்படைத் தொழிநுட்பக் கோட்பாட்டு அறிவை மதிப்பிடும் வினாத்தாள்.
  • பரீட்சை கொழும்பில் மட்டும், சிங்களம் அல்லது தமிழ் மொழிமூலம் நடாத்தப்படும். அனைத்து வினாத்தாள்களுக்கும் ஒரே மொழியில் விடையளிக்க வேண்டும்; பின்னர் மொழியை மாற்ற முடியாது.
  • பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
தகைமைகளை மதிப்பிடும் நேர்முகப் பரீட்சை – 100 புள்ளிகள் பகிர்வு
பிரிவுஉப பிரிவு / புள்ளிகள்அதிகூடிய
01. மேலதிக கல்விசார் தகைமைகள் உயர்தரத்தில் ஆங்கிலம்: சாதாரண சித்திக்கு 02, திறமை சித்தி அல்லது அதற்கு மேல் 05
ஆங்கிலப் பாடச் சான்றிதழ் / டிப்ளோமா: 05
கணனியறிவுச் சான்றிதழ் / டிப்ளோமா: (06 மாதத்திற்குக் குறைவாயின் 02; அதற்கு மேல் 05) உச்சம் 05
வேறொரு மொழிச் சான்றிதழ் / டிப்ளோமா: 04
20
02. துறைசார் நிபுணத்துவம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 06 மாத பாடநெறி: 10
01 வருட டிப்ளோமா பாடநெறி: 20
01 வருடத்தை விஞ்சிய பாடநெறி: 30
(அடிப்படைத் தொழிற்சார் தகைமைகளுக்குப் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது)
30
03. தொழிலில் பெற்ற அனுபவம்
(துறை சார்ந்தது)
03 வருடம் அல்லது அதற்கு மேல்: 30
02 வருடம் (03 இனை விடக் குறைவு): 20
01 வருடம் (02 இனை விடக் குறைவு): 10
06 மாதம் (01 இனை விடக் குறைவு): 05
ஒரு சேவைச் சான்றிதழுக்கு அரைப் பங்கு வீதம், 02 சேவைச் சான்றிதழ்களுக்கு
30
04. விசேட / வெளிவாரித் திறமைகள் விளையாட்டு / மாணவ இராணுவம் போன்றன: சான்றிதழ் ஒன்றுக்கு 03 (உச்சம் 03 சான்றிதழ் = 09)
அழகியல் திறமை: சான்றிதழ் ஒன்றுக்கு 01 (உச்சம் 02)
சமூக சேவை / அறநெறிப் பரீட்சைச் சான்றிதழ்: ஒன்றுக்கு 01 (உச்சம் 02)
ஏனைய வெளிவாரித் திறமைகள்: ஒன்றுக்கு 01 (உச்சம் 02)
15
05. நேர்முகப் பரீட்சையில் வெளிப்படும் எண்ணக்கருக்கள், ஆளுமைதலைமைத்துவம் 02 | ஆளுமை 02 | தொலைத்தொடர்பு 0105
மொத்தம்100
பயிற்சிக் காலத்தின் பின் III ஆம் தரத்திற்கான பரீட்சைகள்
பரீட்சைகாலம்புள்ளிசித்தி
எழுத்துமூலப் பரீட்சை – தொழிநுட்பப் பாடம்2 மணித்தியாலங்கள்10040%
பிரயோகப் பரீட்சை – தொழிநுட்பவியல் பாடம்-10040%

பரீட்சைக் கட்டணம்

விபரம்தகவல்
கட்டணம்ரூ.1,200/-
வங்கிமக்கள் வங்கி – நகர மத்திய கிளை
கணக்கு இல.176-1001-090-27313 (புகையிரத பொதுமுகாமையாளர்)
செலுத்தும் முறைநாட்டிலுள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும், விண்ணப்பதாரியின் பெயரில் பணம் வைப்பிட்டு, பற்றுச்சீட்டைப் பெறுதல்
கவனிக்க: கட்டணம் எக்காரணத்தைக் கொண்டும் மீளளிக்கப்படமாட்டாது. காசுக் கட்டளைகள் மற்றும் முத்திரைகள் ஏற்கப்படமாட்டா. பற்றுச்சீட்டை விண்ணப்பத்தில் குறித்த கூட்டினுள் கழறாத வண்ணம் ஒட்ட வேண்டும்; அதன் நகலை உங்களிடம் வைத்திருங்கள்.

விண்ணப்பிக்கும் முறை

1வர்த்தமானியுடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கமைய A4 தாளின் இரு புறங்களையும் பயன்படுத்தி விண்ணப்பத்தைத் தயாரியுங்கள். கணினி / தட்டச்சில் தயாரிக்கலாம்; ஆனால் சொந்தக் கைப்பட கையொப்பமிட வேண்டும். இலக்கம் 01 முதல் 2.11 வரையான தலைப்புகள் முதல் பக்கத்தில் அடங்க வேண்டும்.
2விண்ணப்பத் தலைப்பில் பரீட்சையின் பெயரைத் தமிழுடன் ஆங்கிலத்திலும் குறிப்பிடுவது அத்தியாவசியம்.
3கட்டணப் பற்றுச்சீட்டை ஒட்டி, விண்ணப்பதாரியின் கையொப்பத்தை அரச பாடசாலை அதிபர், ஓய்வு பெற்ற உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமாதான நீதவான், சத்தியப்பிரமாண ஆணையாளர், சட்டத்தரணி, நொத்தாரிஸ், முப்படை அதிகாரி, அரச சேவையின் நிரந்தர பதவிநிலை உத்தியோகத்தர், மதத் தலைவர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஒருவரைக் கொண்டு உறுதிப்படுத்துங்கள்.
4உறையின் இடது மேல் மூலையில் பின்வருமாறு குறிப்பிடுங்கள்:
"இலங்கை புகையிரத திணைக்களத்தின் முகாமைத்துவ உதவி தொழிநுட்பத் தொகுதி -02 சேவை பிரிவு தொடர்பிலான புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவியாளர் (இயந்திர) III ஆம் தர பதவிகளுக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான பயிற்சி காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026"
52026.12.07 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன் கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புங்கள்.
புகையிரத பொதுமுகாமையாளர்,
புகையிரத பொதுமுகாமையாளர் அலுவலகம்,
த.பெ.355, ஓல்கொட் மாவத்தை,
கொழும்பு 10.
முக்கியம்: விண்ணப்பத்தை புகையிரத பொதுமுகாமையாளர் அல்லது வேறு உத்தியோகத்தரின் தனிப்பட்ட பெயருக்கு அனுப்பக்கூடாது. மாதிரிக்கு ஒவ்வாத, முழுமையற்ற விண்ணப்பங்கள் அறிவித்தலின்றி நிராகரிக்கப்படும். இறுதித் திகதிக்குப் பின் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா.
அரச / உள்ளூராட்சி சேவையில் உள்ளவர்கள்: தாம் சேவை புரியும் திணைக்களத் தலைவரினூடாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் (படிவத்தில் உள்ள திணைக்களத் தலைவரின் பரிந்துரையுடன்).

பரீட்சை அனுமதி மற்றும் அடையாள உறுதிப்படுத்தல்

  • அனைத்துத் தகைமைகளையும் கொண்டவர்களுக்கு மட்டுமே பரீட்சை நுழைவுச்சீட்டு வழங்கப்படும். நுழைவுச்சீட்டு வழங்கப்படுவது தகைமையை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படமாட்டாது.
  • பரீட்சை மண்டபத்தில் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினால் மட்டுமே அடையாளம் உறுதிப்படுத்தப்படும்.
  • முகம் மற்றும் காதுகளை மூடாமல் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.
  • பரீட்சையை நடாத்தும் நிறுவனம் விதிக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.

சேவை நிபந்தனைகள்

110 வருடக் கட்டாய சேவை: III ஆம் தரத்திற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து 10 வருடங்கள் புகையிரத திணைக்களத்தில் சேவை புரிய வேண்டும். அதற்கு முன் விலகினால் புகையிரத பொதுமுகாமையாளர் பரிந்துரைக்கும் தொகையைச் செலுத்த இணங்குவதாக, அரச ஊழியர் ஒருவரைப் பிணையாக முன்வைத்து பொறுப்பொன்றிற்கு இணைய வேண்டும்.
2III ஆம் தரத்திற்கு நியமிக்கப்பட்டு 03 ஆண்டுகள் கழியும் முன் முதலாவது வினைத்திறன் தடைகாண் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
3அரசகரும மொழிக்கு வெளியே சேவையில் இணைந்தவர்கள் உரிய அரசகரும மொழியில் தகுதிகூர்காண் காலத்திற்குள் தேர்ச்சி பெற வேண்டும்; ஏனைய அரசகரும மொழியில் பொது நிர்வாகச் சுற்றறிக்கை 18/2020 இன்படி தேர்ச்சி பெற வேண்டும்.
4தெரிவு செய்யப்பட்டவர்கள் மருத்துவப் பரீட்சையில் சித்தியடைவதுடன், புகையிரதத் திணைக்கள அறிவுறுத்தற் கோவைக்கமைய விசேட கண்பார்வைப் பரிசோதனையிலும் சித்தியடைய வேண்டும்.
தவறான தகவல்களை வழங்கியமை பின்னர் தெரிய வந்தால், பரீட்சை எதிர்பார்க்கை இரத்து செய்யப்படுவதுடன், வழங்கப்பட்ட நியமனம் இரத்து செய்யப்படலாம் அல்லது அரசாங்க சேவையிலிருந்து நீக்கப்படலாம்.
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தலில் முரண்பாடு காணப்பட்டால் சிங்கள மொழி மூல அறிவித்தலே சரியானதாகக் கொள்ளப்படும். வெற்றிட எண்ணிக்கையை நிரப்பாதிருக்கவும், அறிவித்தலில் குறிப்பிடப்படாத விடயங்களில் இறுதித் தீர்மானம் எடுக்கவும் புகையிரத பொதுமுகாமையாளருக்கு அதிகாரம் உண்டு.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. விண்ணப்ப முடிவுத் திகதி எப்போது? எத்தனை வெற்றிடங்கள்?
விண்ணப்ப முடிவுத் திகதி 2026.12.07. மொத்தம் 80 வெற்றிடங்கள் உள்ளன. அன்றைய தினத்திற்கு முன் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
2. கல்வித் தகைமைகள் என்ன?
க.பொ.த (சா/தர) இல் மொழி, கணிதம் உட்பட 06 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி (இரு பாடங்களில் திறமை சித்தி), மற்றும் உயர்தரத்தில் பௌதீகவியல் / தொழிநுட்பவியல் துறையில் அனைத்துப் பாடங்களிலும் சித்தி. இலங்கை ஜேர்மன் புகையிரத தொழிநுட்பப் பயிற்சி நிறுவன பயிலுநர்களுக்கு (2017.06.15 இற்கு உள்ளெடுக்கப்பட்டோர்) இக்கல்வித் தகைமை தேவையில்லை.
3. தொழிற் தகைமை என்ன?
ஜேர்மன் புகையிரத தொழிநுட்பப் பயிற்சி நிறுவனத்தில் அல்லது TVEC அங்கீகாரமுள்ள நிறுவனத்தில், ஏற்புடைய துறையில் 2 1/2 வருடங்களுக்குக் குறையாத முழுநேரப் பாடநெறியைக் கற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. வயது எல்லை என்ன?
விண்ணப்ப இறுதித் திகதியன்று 18 வயதுக்குக் குறையாமலும் 45 வயதை விஞ்சாமலும் இருக்க வேண்டும்.
5. பரீட்சைக் கட்டணம் எப்படிச் செலுத்துவது?
ரூ.1,200 ஐ மக்கள் வங்கியின் எந்தக் கிளையிலும், புகையிரத பொதுமுகாமையாளரின் நகர மத்திய கிளைக் கணக்கு இல. 176-1001-090-27313 இற்கு, உங்கள் பெயரில் வைப்பிடுங்கள். பற்றுச்சீட்டை விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும்.
6. பயிற்சிக் காலத்தில் எவ்வளவு கொடுப்பனவு கிடைக்கும்?
2026.01.01 - 2026.12.31 வரை மாதம் ரூ.41,209; 2027.01.01 முதல் ரூ.42,780. பயிற்சியின் பின் III ஆம் தரத்தில் MT-02-2025 சம்பள அளவுத்திட்டம் (ரூ.50,630 - 86,300) பொருந்தும்.
7. பரீட்சை எப்போது, எங்கே நடைபெறும்?
பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும். பரீட்சை கொழும்பில் மட்டுமே நடைபெறும். சிங்களம் அல்லது தமிழ் மொழிமூலம் எழுதலாம்.

பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்

WhatsApp Channel இல் இணைக

மூலம்: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை, பகுதி I : தொகுதி (IIஅ) – 2026.11.06 (பக். 3926 - 3937). விண்ணப்பிக்கும் முன் உத்தியோகபூர்வ வர்த்தமானியை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு தகவல் பகிர்வுப் பதிவு மட்டுமே.

« புதிய பதிவு பழைய பதிவு »
E- AKARAM | S DILEKSHAN

Posted by

S. DILEKSHAN [ NDT ]

Comments

E-AKARAM ×