தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் - விளையாட்டு டிப்ளோமா பாடநெறி 2026/2027 (NVQ 5) விண்ணப்பம்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு | தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் (NISS)
விளையாட்டு டிப்ளோமா பாடநெறி 2026/2027
NVQ 5 மட்ட விளையாட்டு டிப்ளோமா - விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
வயது 18 - 35காலம் 12 மாதங்கள்சிங்களம் / ஆங்கில மொழிமூலம்
விண்ணப்ப முடிவுத் திகதி : 2026.12.01
(பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் - இத்திகதிக்கு முன்னர் கிடைக்க வேண்டும்)
(பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் - இத்திகதிக்கு முன்னர் கிடைக்க வேண்டும்)
18 - 35வயதெல்லை
(அரச ஊழியர் 45)
(அரச ஊழியர் 45)
12 மாதங்கள்பாடநெறிக் காலம்
NVQ 5தொழிற்தகைமை மட்டம்
ரூ. 60,000பாடநெறிக் கட்டணம்
முக்கிய குறிப்பு : இப்பாடநெறி சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலம் நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்கும் முன் இதனைக் கவனத்தில் கொள்ளவும்.
1. கல்வி மற்றும் ஏனைய தகைமைகள்
I
க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம் / தமிழ் மொழி மற்றும் கணிதம் / எண்கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக, இரு தடவைகளுக்கு மேற்படாமல் 06 பாடங்களில் 03 திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மேலும், கீழுள்ள (அ) முதல் (எ) வரையானவற்றில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும் :
அஏற்றுக்கொள்ளப்பட்ட விளையாட்டு அல்லது உடற்கல்வி தொடர்பான கல்லூரி ஒன்றில் ஆகக் குறைந்தது 06 மாதப் பாடநெறி ஒன்றை வெற்றிகரமாகப் பூரணப்படுத்தியிருத்தல்.
அல்லது
ஆமுப்படைகள், பொலிஸ் அல்லது சிவில் பாதுகாப்புப் பிரிவின் பயிற்சி வழங்கும் நிறுவனத்தில் / கல்லூரியில் விளையாட்டு அல்லது உடற்கல்வி தொடர்பான பாடநெறி ஒன்றை வெற்றிகரமாகப் பூரணப்படுத்தியிருத்தல்.
அல்லது
இபாடசாலை விளையாட்டு ஆசிரியராக அல்லது உள்ளூராட்சி நிறுவனம் ஒன்றில் விளையாட்டுத் தள ஆலோசகராக ஆகக் குறைந்தது 05 வருட அனுபவத்துடன் விளையாட்டுத் துறையில் விசேட ஆற்றல்களை வெளிக்காட்டியிருத்தல்.
அல்லது
ஈயாதேனும் விளையாட்டு தொடர்பாக தேசிய விளையாட்டுக் குழு ஒன்றின் அங்கத்தவராக இருந்து, யாதேனும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருத்தல்.
அல்லது
எவிளையாட்டு அமைச்சினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் மாவட்ட மட்டப் போட்டியில் முதலாம் அல்லது இரண்டாம் இடம் பெற்றிருத்தல். அவ்வாறில்லாவிடின், தேசிய விளையாட்டுச் சங்கம் ஒன்றினால் நடத்தப்படும் தேசிய மட்டப் போட்டியில் முதலாம், இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்றிருத்தல்.
மாதிரி விண்ணப்பப் படிவத்துடன் பொருந்தாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
2. விண்ணப்பிக்கும் முறை
1வர்த்தமானி அறிவித்தலின் இறுதியில் தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின் பிரகாரம், 8" x 13½" அளவுடைய கடதாசியில் விண்ணப்பத்தைத் தயாரிக்கவும்.
2விண்ணப்பத்தை உங்கள் சொந்தக் கையெழுத்தினால் பூர்த்தி செய்து, கடவுச்சீட்டு அளவிலான புகைப்படத்தை இணைக்கவும்.
3கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் "விளையாட்டு டிப்ளோமாப் பாடநெறி - 2026/2027 தொடர்பான விண்ணப்பப் படிவம்" எனக் குறிப்பிடவும்.
42026.12.01 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
பணிப்பாளர்,
தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்,
இல. 100/7, சுதந்திர மாவத்தை,
கொழும்பு 07.
தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்,
இல. 100/7, சுதந்திர மாவத்தை,
கொழும்பு 07.
அரச / மாகாண அரச சேவை / கூட்டுத்தாபன ஊழியர்கள் : விண்ணப்பங்களை உங்கள் திணைக்களம் / நிறுவனத் தலைவர் ஊடாக அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். படிவத்தின் இறுதியில் உள்ள உறுதிப்படுத்தும் பகுதியில் அதிகாரியின் கையொப்பம் மற்றும் பதவி முத்திரை அவசியம்.
படிவத்தில் குறிப்பிடப்படாத தரவுகள் பின்னர் முன்வைக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தற்போதுள்ள உயர் தகைமை மற்றும் கோரப்பட்ட தகைமைகளை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடவும்.
3. தெரிவு செய்யும் முறை
படி 1எழுத்துமூலப் பரீட்சை
(தகைமை பூர்த்தி செய்த அனைவரும்)
(தகைமை பூர்த்தி செய்த அனைவரும்)
படி 2நேர்முகப் பரீட்சை
மற்றும்
உடற்தகைமை செயன்முறைப் பரீட்சை
மற்றும்
உடற்தகைமை செயன்முறைப் பரீட்சை
படி 3பாடநெறிக்குத் தெரிவு
ஆட்சேர்ப்புக் குழுவினால் தீர்மானிக்கப்படும் புள்ளிகளைப் பெற்றவர்கள் மாத்திரமே இரண்டாம் கட்டத்துக்கு அழைக்கப்படுவர்.
4. பாடத்திட்ட விபரங்கள் (05 பிரிவுகள்)
(அ) பயிற்றுவித்தலின் பொதுக் கோட்பாடுகள்
உடற்றகைமைகள் மற்றும் இயலுமைகள், நுட்பமுறைகள், உபாய வழிகள், பயிற்றுவித்தல் முறைகள், திட்டமிடல் முறைகள், பயிற்சிச்சுமை மற்றும் பரீட்சித்தல் தொடர்பான கோட்பாடுகள், வாய்மொழிமூலப் பரீட்சை.
(ஆ) குறைந்தது 10 விளையாட்டுக்கள்
ஆகக்குறைந்தது 10 விளையாட்டுக்கள் தொடர்பான கோட்பாட்டு மற்றும் செயன்முறை அறிவு.
(இ) சுவட்டு மற்றும் மைதான மெய்வல்லுநர் விளையாட்டுக்கள்
சுவட்டு மற்றும் மைதான மெய்வல்லுநர் விளையாட்டுக்கள் பற்றிய நிபுணத்துவம்.
(ஈ) தெரிவு செய்யும் ஒரு விளையாட்டு
மெய்வல்லுநர் விளையாட்டுக்களுக்கு மேலதிகமாக, பாடநெறிக் காலத்தின் போது பெண்கள் அல்லது ஆண்களின் பொருட்டு, சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான விதத்தில் தெரிவு செய்து கொள்ளும் ஒரு விளையாட்டு தொடர்பான நிபுணத்துவம்.
(உ) பொது விடயங்கள்
விளையாட்டு உடற்கூற்றியல், சமூகவியல், நிர்வாகம், புள்ளிவிபரவியல், விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் முறைகள், விளையாட்டு மருத்துவவியல், உயிர் இரசாயனவியல், போசணை மற்றும் உளவியல் போன்றவை.
5. கட்டண விபரங்கள்
| கட்டணம் | தொகை | விபரம் |
|---|---|---|
| பாடநெறிக் கட்டணம் | ரூ. 60,000.00 | தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரம்; பாடநெறி ஆரம்பிக்க முன்னர் செலுத்த வேண்டும் |
| விடுதிக் கட்டணம் | ரூ. 18,000.00 | விடுதி வசதி தேவைப்படுவோர் (ஒரு வருடத்துக்கு); பதிவு செய்யும் தினத்தில் செலுத்த வேண்டும் |
வங்கிப் பணம் வைப்பிடும் முறை (பாடநெறிக் கட்டணம்)
வங்கி : இலங்கை வங்கி - டொரிங்டன் கிளை
கணக்கு இலக்கம் : 7040742
கணக்குரிமையாளர் பெயர் : "செயலாளர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு"
வைப்பின் தேவைப்பாடு (Reference) : "NISS DIP 26/27"
காசுச் சிட்டையின் புகைப்படத்தை diploma@niss.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
வங்கி : இலங்கை வங்கி - டொரிங்டன் கிளை
கணக்கு இலக்கம் : 7040742
கணக்குரிமையாளர் பெயர் : "செயலாளர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு"
வைப்பின் தேவைப்பாடு (Reference) : "NISS DIP 26/27"
காசுச் சிட்டையின் புகைப்படத்தை diploma@niss.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
கவனிக்க :
- கட்டணம் செலுத்தி நிறைவு செய்தவர்கள் மாத்திரமே பாடநெறியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
- காசுச் சிட்டையின் புகைப்படத்தை அனுப்பாதவர்களின் பணம் தொடர்பாக நிறுவனம் பொறுப்பு கூறாது.
- காசோலையாகச் செலுத்தினால் பெறுநராக "செயலாளர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு" எனக் குறிப்பிட வேண்டும்.
- செலுத்திய பணம் எக்காரணம் கொண்டும் மீள அளிக்கப்பட மாட்டாது.
- கட்டணம் செலுத்தி நிறைவு செய்தவர்கள் மாத்திரமே பாடநெறியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
- காசுச் சிட்டையின் புகைப்படத்தை அனுப்பாதவர்களின் பணம் தொடர்பாக நிறுவனம் பொறுப்பு கூறாது.
- காசோலையாகச் செலுத்தினால் பெறுநராக "செயலாளர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு" எனக் குறிப்பிட வேண்டும்.
- செலுத்திய பணம் எக்காரணம் கொண்டும் மீள அளிக்கப்பட மாட்டாது.
6. சான்றிதழ் மற்றும் ஏனைய நிபந்தனைகள்
1பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு "விளையாட்டு டிப்ளோமா" சான்றிதழ் வழங்கப்படும். NVQ 5 வாய்மொழிமூலப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் NVQ 5 சான்றிதழைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
2தெரிவு செய்யப்படுவோர் தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் சட்டதிட்டங்களையும் பிரமாணங்களையும் கடைப்பிடிக்கக் கட்டுப்பட வேண்டும்.
3பாடநெறியின் முடிவில் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சு பணிக்கப்படவில்லை.
4இங்கு குறிப்பிடப்படாத வேறு விடயங்கள் தொடர்பாக, நிறுவனப் பணிப்பாளரின் அபிப்பிராயத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இப்பாடநெறியை தமிழ் மொழியில் கற்க முடியுமா?
வர்த்தமானி அறிவித்தலின்படி, பாடநெறி சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலம் நடத்தப்படுகிறது. தமிழ் மொழிமூலம் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பத்தை நேரில் கையளிக்கலாமா?
இல்லை. விண்ணப்பம் பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான வயதெல்லை என்ன?
பொது வயதெல்லை 18 - 35. அரசாங்க சேவையில் பணியாற்றுவோருக்கு 45 வயதுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
பாடநெறிக் கட்டணத்தை எப்போது செலுத்த வேண்டும்?
தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரம், பாடநெறி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ரூ. 60,000 செலுத்தி, காசுச் சிட்டையின் புகைப்படத்தை diploma@niss.gov.lk க்கு அனுப்ப வேண்டும்.
பாடநெறி முடிந்ததும் வேலை கிடைக்குமா?
இல்லை. தொழில் ஒன்றைப் பெற்றுக் கொடுக்க அமைச்சு பணிக்கப்படவில்லை என அறிவித்தலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவத்தை எங்கே பெறுவது?
2026.11.06 திகதிய வர்த்தமானிப் பத்திரிகையின் இறுதிப் பக்கங்களில் மாதிரி விண்ணப்பப் படிவம் உள்ளது. கீழுள்ள பொத்தானில் வர்த்தமானியைப் பார்வையிடலாம்.
பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்
WhatsApp Channel இல் இணையமூலம் : இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - 2026.11.06 (அறிவித்தல் திகதி 2026.10.28) | தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்


Comments
Post a Comment