N E W S

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் - வேலைவாய்ப்பு 2026

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் - வேலைவாய்ப்பு 2026

Office For National Unity And Reconciliation (ONUR)

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகமானது 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காணப்படும் பின்வரும் பதவிகளுக்காகத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
42மொத்த வெற்றிடங்கள்
11பதவிகள்
2026.10.12முடிவுத் திகதி

வெற்றிடங்களின் விவரம்

பதவியின் பெயர்வெற்றிடங்கள்சேவை / சம்பளக் குறியீடு
பணிப்பாளர் நாயகம்01HM 1-3
பணிப்பாளர்03HM 1-1
பணிப்பாளர் சபைச் செயலாளர்01MM 1-1
பிரதி / உதவிப் பணிப்பாளர்02MM 1-1
உள்ளக கணக்காய்வாளர்01JM 1-1
நிர்வாக உத்தியோகத்தர்01JM 1-1
நிதி உத்தியோகத்தர்01JM 1-1
அபிவிருத்தி உத்தியோகத்தர்16MA 3
முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் சாராத)10MA 1-1
சாரதி03PL 3
அலுவலக உதவியாளர்03PL 1
மொத்தம்42 
விண்ணப்பங்கள் 2026 ஒக்டோபர் 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்

  1. மேற்கூறிய வெற்றிடங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்கள், விண்ணப்பப் படிவங்கள் மற்றும் பொதுவான அறிவுறுத்தல்களுக்கு தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.onur.gov.lk ஐப் பார்வையிடவும்.
  2. விண்ணப்பப் படிவம் மற்றும் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகளைச் சரியாகப் பூர்த்தி செய்து, 2026 ஒக்டோபர் 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்.
  3. விண்ணப்பப் படிவத்தைப் பதிவுத் தபாலில் அனுப்பும்போது, கடித உறையின் மேல் இடது மூலையில் விண்ணப்பிக்கும் பதவி மற்றும் அதற்குரிய குறிப்பு இலக்கத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
  4. சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, உரிய சான்றிதழ்களின் பிரதிகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடித உறையின் மேல் இடது மூலையில்: விண்ணப்பிக்கும் பதவி + குறிப்பு இலக்கம்
தவிசாளர்,
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம்,
இல. 40, 'R' தளம், புத்தகமுவ வீதி,
இராஜகிரிய.
தவிசாளர் - தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம்

Post a Comment

Previous Post Next Post