N E W S

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை - வெற்றிடங்கள் 2026

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை - வெற்றிடங்கள் 2026

(நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு)

23பதவிகள்
109மொத்த வெற்றிடங்கள்
63முகாமைத்துவ உதவியாளர்
விண்ணப்ப முடிவு திகதி: 2026.10.14
(ஒன்லைன் முறையில் மட்டும்)
இலங்கை பிரசைகளிடமிருந்து தகுதி பெற்ற தொழில்முறையாளர்களை இணைப்பதற்கு சபை எதிர்பார்க்கிறது. கீழுள்ள சம்பளம் 2027.01.01 முதல் அமுலாகும் சம்பள அளவுத்திட்டமாகும்.

அட்டவணை 1 - நேர்முகப் பரீட்சை மூலம் (11 வெற்றிடங்கள்)

#பதவிசம்பளக் குறியீடுசம்பள அளவு (ரூ.)வெற்றிடம்
1பொது முகாமையாளர்HM 2-1161,140 - 219,3401
2பிரதி பொது முகாமையாளர் (திட்டமிடல், ஆய்வு மற்றும் அபிவிருத்தி) **HM 1-3152,500 - 214,0001
3உதவிப் பொது முகாமையாளர் (உறுப்பினர் கணக்கு)HM 1-1140,640 - 202,1401
4உதவிப் பொது முகாமையாளர் (நிதி)HM 1-1140,640 - 202,1401
5உதவிப் பொது முகாமையாளர் (சட்டம்)HM 1-1140,640 - 202,1401
6உதவிப் பொது முகாமையாளர் (உள்ளகக் கணக்காய்வு)HM 1-1140,640 - 202,1401
7முகாமையாளர் (நிர்வாகம் மற்றும் மனித வளம்)MM 1-396,650 - 173,2002
8பிராந்திய முகாமையாளர் (கொழும்பு மாவட்ட அலுவலகம்)MM 1-396,650 - 173,2001
9சட்ட அதிகாரிMM 1-191,690 - 168,2402
** இந்தப் பதவிக்காக பணிமாற்ற அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும்.

அட்டவணை 2 - குறுகிய பட்டியல், போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை (98 வெற்றிடங்கள்)

#பதவிசம்பளக் குறியீடுசம்பள அளவு (ரூ.)வெற்றிடம்
10நிர்வாக அதிகாரி (நிர்வாகம் மற்றும் மனித வளம்) - தபால் பிரிவுJM 1-172,650 - 122,9701
11நிர்வாக அதிகாரி (உறுப்பினர் சேவை)JM 1-172,650 - 122,9701
12கணக்கு அதிகாரிJM 1-172,650 - 122,9707
13பிரசார அதிகாரிJM 1-172,650 - 122,9701
14உதவி நிர்வாக அதிகாரி (நிர்வாகம் மற்றும் மனித வளம்)MA 464,320 - 113,1702
15உதவி கட்டமைப்பு பகுப்பாய்வாளர் / நிகழ்ச்சி தயாரிப்பாளர்MA 464,320 - 113,1702
16உதவி கணக்கு அதிகாரிMA 464,320 - 113,1701
17உதவி உள்ளக கணக்காய்வு அதிகாரிMA 464,320 - 113,1704
18உதவி கட்டமைப்பு நிர்வாக அதிகாரிMA 464,320 - 113,1701
19உதவி முதலீட்டு அதிகாரிMA 464,320 - 113,1702
20கணக்குப் பதிவாளர் (Book Keeper)MA 2-250,540 - 90,2703
21முகாமைத்துவ உதவியாளர்MA 1-246,220 - 84,35063
22பிரத்தியேக உதவியாளர்MA 1-246,220 - 84,3502
23ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்PL 343,280 - 67,0408

வயது எல்லை

பதவிகள்வயது எல்லை
1 - 6 (HM)35 - 55 வயது
7 - 19 (MM / JM / MA 4)22 - 45 வயது
20 - 23 (MA 2-2 / MA 1-2 / PL 3)18 - 45 வயது
உள்வாரி விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது எல்லை பொருந்தாது.

பொதுவான தகைமைகள்

  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • பதவியின் கடமைகளை நன்கு நிறைவேற்றவும், தீவின் எப்பகுதியிலும் சேவையாற்றவும் உடல், உள ரீதியாக தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
  • சிறந்த ஒழுக்கமுடையவராக இருத்தல் வேண்டும்.
  • கல்வி, தொழில் தகைமைகள் மற்றும் அனுபவம் ஒவ்வொரு பதவிக்கும் வேறுபடும். முழு விபரங்களுக்கு கீழுள்ள அறிவித்தலைப் பார்க்கவும்.

பதவிக்குரிய ஏனைய கொடுப்பனவுகள்

பதவி 1 - 6 மட்டும்:
  • உத்தியோகபூர்வ வாகனம் அல்லது வாகன கொடுப்பனவு
  • மாதாந்த எரிபொருள் செலவுக் கொடுப்பனவு
பதவி 1 - 23 அனைத்திற்கும்:
  • சபையின் கடன் திட்டத்தின் கீழ் சலுகை வட்டிக்கு அமைய பல்வேறு கடன் வசதிகள்
  • வருடாந்த ஊக்கக் கொடுப்பனவு (அமைச்சு அங்கீகாரத்திற்கு அமைய)
  • மருத்துவச் செலவை மீள நிரப்பும் வசதி
  • மாதாந்த ஊக்கக் கொடுப்பனவு
  • சீருடை

விண்ணப்பிக்கும் முறை

  • சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.etfb.lk இற்கு சென்று, தகைமைகள் மற்றும் அறிவுறுத்தல் படிவத்தை நன்கு வாசித்த பின், ஒன்லைன் (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • தகுதியை பூர்த்தி செய்யும் வெளிவாரி விண்ணப்பதாரர்கள் மீளளிக்கப்படாத விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,000 ஐ 2026.10.14 அல்லது அதற்கு முன் ஒன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் விபரம்

கொமர்ஷல் வங்கி - நாராஹென்பிட்ட கிளை

கணக்கு இலக்கம்: 1220509201

வைப்பிட்ட பற்றுச்சீட்டின் பரிமாற்றக் குறிப்பீட்டு இலக்கத்தை (TRN) ஒன்லைன் விண்ணப்பத்தில் உள்ளடக்குதல் கட்டாயம்.

தலைவர் / தலைமை நிறைவேற்று அதிகாரி
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை
த.பெ. 807, 23ஆவது மாடி, "மெஹெவர பியச", நாராஹென்பிட்ட, கொழும்பு 05.

பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்

WhatsApp Channel இல் இணைய

Post a Comment

Previous Post Next Post