தேசிய உப்பு நிறுவனம் - ஆட்சேர்ப்பு 2026
National Salt Limited
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு
வெற்றிடங்களின் சுருக்கம்
| பதவி | வெற்றிடம் | அடிப்படைச் சம்பளம் |
|---|---|---|
| Plant Operator (ஆலை இயக்குநர்) | 01 | ரூ. 46,960 |
| Senior Mechanic (சிரேஷ்ட மெக்கானிக்) | 01 | ரூ. 46,960 |
| Assistant Plant Operator (உதவி ஆலை இயக்குநர்) | 02 | ரூ. 40,834 |
| Welder (வெல்டர்) | 01 | ரூ. 40,834 |
| Driver (சாரதி) | 01 | ரூ. 40,834 |
அனைத்துப் பதவிகளுக்கும் வாழ்க்கைச் செலவுப் படி ரூ. 17,800 மற்றும் அரசாங்கம் அங்கீகரித்த ஏனைய படிகளும் வழங்கப்படும்.
பதவிகளும் தகைமைகளும்
கல்வித் தகைமை: மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட, இயந்திரவியல் / வாகனவியல் / இயந்திர இயக்கம் (Mechanical / Automobile / Machinery Operation) தொடர்பான துறையில் தேசிய தொழிற்தகைமை (NVQ) நிலை 5 அல்லது அதற்குச் சமமான சான்றிதழ்.
சம்பளம்: ரூ. 46,960 + வாழ்க்கைச் செலவுப் படி ரூ. 17,800
வயது: 18 - 45 | தெரிவு முறை: கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு
கல்வித் தகைமை: TVEC அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப / தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட, இயந்திரவியல் / வாகனவியல் (Mechanical / Automobile) அல்லது தொடர்புடைய துறையில் NVQ நிலை 5 தொழிற்தகைமைச் சான்றிதழ்.
சம்பளம்: ரூ. 46,960 + வாழ்க்கைச் செலவுப் படி ரூ. 17,800
வயது: 18 - 45 | தெரிவு முறை: கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு
கல்வித் தகைமை: TVEC அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப / தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட, இயந்திரவியல் / வாகனவியல் அல்லது தொடர்புடைய துறையில் (பதவியின் பணிகளுக்குப் பொருத்தமான) NVQ நிலை 4 தொழிற்தகைமைச் சான்றிதழ்.
சம்பளம்: ரூ. 40,834 + வாழ்க்கைச் செலவுப் படி ரூ. 17,800
வயது: 18 - 45 | தெரிவு முறை: கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு
கல்வித் தகைமை: TVEC அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப / தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட, வெல்டிங் (Welding) அல்லது தொடர்புடைய துறையில் (பதவியின் பணிகளுக்குப் பொருத்தமான) NVQ நிலை 4 தொழிற்தகைமைச் சான்றிதழ்.
சம்பளம்: ரூ. 40,834 + வாழ்க்கைச் செலவுப் படி ரூ. 17,800
வயது: 18 - 45 | தெரிவு முறை: கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு
கல்வித் தகைமை (இரண்டும் அவசியம்):
- க.பொ.த (சா/த) பரீட்சையில் அதிகபட்சம் இரண்டு தடவைகளில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்; அவற்றில் குறைந்தபட்சம் இரண்டு (02) திறமைச் சித்திகள் இருத்தல்.
- மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் அனுமதிப்பத்திரம் பெற்ற பின்னர் குறைந்தபட்சம் மூன்று (03) வருட வாகனம் செலுத்தும் அனுபவம்.
சம்பளம்: ரூ. 40,834 + வாழ்க்கைச் செலவுப் படி ரூ. 17,800
வயது: 18 - 45 | தெரிவு முறை: கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு
பொதுவான நிபந்தனைகள்
- அனைத்து ஒப்பந்தப் பதவிகளும், ஊழியரின் செயற்பாடு மற்றும் நிறுவனத்தின் தேவையின் அடிப்படையில் நீடிக்கப்படலாம்.
- ஒவ்வொரு விண்ணப்பதாரியும் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- பதவியின் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றவும், தீவின் எப்பகுதியிலும் சேவையாற்றவும் உடல், உளரீதியாகத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
- சிறந்த ஒழுக்கமுடையவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
உங்கள் சுயவிவரக் கோவையை (CV) சான்றிதழ்களின் பிரதிகளுடன் பதிவுத் தபால் மூலம் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். கடித உறையின் மேல் இடது மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிடுதல் வேண்டும்.
National Salt Ltd,
No. 561/3, Elvitigala Mawatha,
Colombo - 05.
இறுதித் திகதி: 2026.10.19
தொலைபேசி: 011-2368974
பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்
WhatsApp Channel இல் இணைய
