N E W S

'ஆசிரியர்' இனி 'கல்வியியலாளர்' (Educator)! புதிய 6 நிலை ஆசிரியர் பதவி உயர்வு கட்டமைப்பு - NEC கல்விச் சீர்திருத்த முன்மொழிவு 2026

கல்வி சீர்திருத்தம் 2026

'ஆசிரியர்' பதவிக்குப் பதிலாக 'கல்வியியலாளர்' (Educator) என்ற புதிய தொழில்முறை வகைப்பாடு

தேசிய கல்வி ஆணைக்குழு (NEC) & கல்வி அமைச்சு – இலங்கை ஆசிரியர் கல்விச் சீர்திருத்த முன்மொழிவு

தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் கல்விச் சீர்திருத்த முன்மொழிவின்படி, 'ஆசிரியர்' என்ற குறுகிய பதவிச் சொல்லுக்குப் பதிலாக, விரிவான தொழில்முறைப் பொருளுடைய #கல்வியியலாளர் (Educator) என்ற பொதுப்பதத்தின் கீழ் அனைத்து ஆசிரியர்களும் புதிதாக வகைப்படுத்தப்படவுள்ளனர். இது கற்பித்தலை ஒரு உயர்மட்டக் கல்வியியல் தொழிலாக (Educational Profession) உயர்த்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ளது.

● முன்மொழிவின் முக்கிய நோக்கங்கள்

  • ஆசிரியர்களுக்கு வாண்மைத்துவ (Professional) உயர்வினை ஏற்படுத்துதல்
  • சேவைக்காலத்தில் தொடர்ச்சியான தொழில்சார் அபிவிருத்திப் பயிற்சிகள் (CPD) & ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்குதல்
  • கல்வித் தகுதி, ஆய்வுகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் நியாயமான பதவி உயர்வுகளை வழங்குதல்
➤ புதிய பதவி நிலைக் கட்டமைப்பு (6 நிலைகள்)
1

உதவிக் கல்வியியலாளர்

Assistant Educator
தகுதி: தேசிய கல்வியியற் கல்லூரிகளின் (NICE) கற்பித்தல் தேசிய டிப்ளோமா, அல்லது கல்விக் கூறுகளை உள்ளடக்கிய 3 வருட இளமாணிப் பட்டம் (Bachelor's Degree)
பங்கு: ஆரம்ப நிலை ஆசிரியர் பணிகளை மேற்கொள்ளல் & அடிப்படை கற்பித்தல் அனுபவம் பெறுதல்
2

துணைக் கல்வியியலாளர்

Associate Educator
தகுதி: 4 வருட கல்வியியல் இளமாணி (B.Ed.) பட்டம், அல்லது ஏதேனுமொரு இளமாணிப் பட்டத்துடன் கூடிய 1 வருட கற்பித்தல் பயிற்சி / CPD பயிற்சி
பங்கு: முழுமையான கற்பித்தல் பொறுப்புகளை ஏற்று வகுப்பறைகளைத் தனித்து நடாத்துதல்
3

கல்வியியலாளர் – திறமையான நிலை

Educator – Proficient
தகுதி: துணைக் கல்வியியலாளர் நிலையில் குறைந்தபட்சம் 3 வருட சேவை அனுபவம் + அங்கீகரிக்கப்பட்ட CPD பூர்த்தி
பங்கு: திறமையான முறையில் பாடக் கற்பித்தல் & பாடசாலை மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்காற்றுதல்
4

பட்டயக் கல்வியியலாளர் – திறமை வாய்ந்த நிலை

Chartered Educator
தகுதி: திறமையான நிலையில் 10 வருட சேவை அனுபவம் + ஆராய்ச்சிக் கூறுகளைக் கொண்ட 2 வருட முதுமானிப் பட்டம் (Master's Degree – 12 Credits)
பங்கு: கற்பித்தலில் நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்ளல், புதிய கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துதல்
5

பட்டய ஆலோசனைக் கல்வியியலாளர்

Chartered Lead Advisor
தகுதி: பட்டயக் கல்வியியலாளர் நிலையில் 5 வருட அனுபவம் + கட்டாய உயர் CPD பயிற்சிகள்
பங்கு: பிற ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் (Mentorship) & பாடசாலைக் கலைத்திட்ட அமைப்பில் ஆலோசனைகள் வழங்குதல்
6

சிரேஷ்ட பட்டய ஆலோசனைக் கல்வியியலாளர்

Senior Chartered Consultant Educator
தகுதி: ஆலோசனைக் கல்வியியலாளர் நிலையில் 5 வருட அனுபவம் + கல்வித்துறையில் விசேட புத்தாக்க வாண்மைத்துவ செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருத்தல்
பங்கு: தேசிய மட்டத்திலான கல்விச் சீர்திருத்தங்கள், கொள்கை வகுத்தல் & ஆராய்ச்சி வழிகாட்டல்களில் ஈடுபடுதல்
இவ்முன்மொழிவானது இலங்கையின் பாடசாலைக் கல்வியை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டதாகும்.

Post a Comment

Previous Post Next Post