N E W S

கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் — மண் பரிசோதகர் தரம் III - திறந்த போட்டிப் பரீட்சை 2026

அறிவிப்பு எண்: EX/REC/26/1004

கிழக்கு மாகாண பொதுசேவை — மண் பரிசோதகர் தரம் III பதவிக்கு திறந்த போட்டிப் பரீட்சை 2026

கிழக்கு மாகாண பொதுசேவையின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம்) சேவை வகுதிக்குள் அடங்கும் மண் பரிசோதகர் தரம் III பதவிக்கு காணப்படும் 02 வெற்றிடங்களுக்கு மாகாண திறமை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு, கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட தகுதியுடைய பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை: கிழக்கு மாகாண சபையின் www.ep.gov.lk Exams Online Application மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்கப்படும் காலம்: 2026.09.14 முற்பகல் 9.00 மணி முதல் 2026.10.05 பிற்பகல் 10.00 மணி வரை.

01. பதவி விபரம்

  • பதவி: மண் பரிசோதகர் தரம் III
  • சேவை வகுதி: மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம்)
  • வெற்றிடங்கள்: 02
  • தெரிவு முறை: மாகாண திறமை அடிப்படையில் எழுத்துப் பரீட்சை மூலம்

விண்ணப்பங்கள் ஏற்கப்படும் இறுதித் திகதிக்குப் பின்னர் விரைவில் கிழக்கு மாகாணத்தின் நான்கு நகரங்களில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் மூலம் எழுத்துப் பரீட்சை நடத்தப்படும்.

02. ஆட்சேர்ப்புக்கான நிபந்தனைகள்

  • இப்பதவி நிரந்தரமானதும், ஓய்வூதியம் உரித்துடையதுமாகும்.
  • இந்நியமனம் இடமாற்றத்திற்குட்பட்ட சேவையாகும்; நியமனம் பெறுபவர்கள் கிழக்கு மாகாணத்தின் எப்பகுதியிலும் சேவையாற்றத் தயாராக இருப்பதுடன் குறைந்தது 10 வருடங்கள் கட்டாயமாக சேவையாற்ற வேண்டும்.
  • இந்நியமனம் மூன்று வருட தகுதிகாண் காலத்திற்கு உட்பட்டதாகும். நியமிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் முதலாம் வினைத்திறன்காண் தடைப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
  • அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 18/2020-க்கு அமைய, நியமனத் திகதியிலிருந்து மூன்று வருடங்கள் முடிவதற்கு முன்னர் இரண்டாவது அரச கரும மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • கிழக்கு மாகாண பொதுசேவையில் ஏற்கனவே பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கும்போது திணைக்களத் தலைவர் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்; தெரிவு செய்யப்படும்போது விடுவிக்க இயலும் என தலைவர் உறுதிப்படுத்த வேண்டும்.

03. பொதுவான தகுதிகள்

  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • சிறந்த நல்லொழுக்கமும் உடல்/உள ஆரோக்கியமும் உடையவராக இருத்தல் வேண்டும்.
  • சட்டவிரோத அமைப்பு ஒன்றின் உறுப்பினராக உள்ள எவரும் இப்பதவிக்குத் தகுதியற்றவர்.
  • விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் குறைந்தது ஒரு வருடமாவது தொடர்ச்சியான நிரந்தர வதிவிடம் கொண்டிருத்தல் வேண்டும் அல்லது குறைந்தது மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக வதியும் ஒருவரை திருமணம் செய்து, திருமணத்திற்குப் பின் கிழக்கு மாகாணத்திற்கு குடிபெயர்ந்திருத்தல் வேண்டும் (இதனை நிரூபிக்கும் ஆவணங்களுடன்).

04. வயதெல்லை

விண்ணப்பங்கள் ஏற்கப்படும் இறுதித் திகதியில் 18 வயதிற்குக் குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

05. கல்வி மற்றும் தொழில் தகுதிகள்

(i) கல்வித் தகுதிகள்

  1. க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் மொழி (தமிழ்/சிங்களம்/ஆங்கிலம்), விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட மற்றுமொரு பாடத்துடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  2. மேலும், க.பொ.த (உயர் தரம்) பரீட்சையில் கணிதம்/தொழில்நுட்பத் துறையில் தூய கணிதம், பிரயோக கணிதம், இணைந்த கணிதம் அல்லது பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் 02 உள்ளிட்டதாக மூன்று பாடங்களில் (சாதாரண பொதுப் பரீட்சையும் பொது ஆங்கிலமும் தவிர்ந்து) ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

(ii) தொழில் தகுதிகள்

  1. அம்பாறை கார்டி தொழில்நுட்பக் கல்லூரி அல்லது மொறட்டுவ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா சான்றிதழ் (National Diploma in Technology) பெற்றிருத்தல்.
    அல்லது
  2. மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப தகுதிகளுக்கு எல்லா வகையிலும் சமமானது என மூன்றாம் நிலை, தொழில்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகுதிகளைப் பெற்றிருத்தல்.

06. சம்பள அளவுத்திட்டம்

2025.03.25 அன்றைய 10/2025 அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைய, சம்பளத் தொகுதி MN 03-2025-க்கு ஏற்ப குடியேற்ற உத்தியோகத்தர் சேவை தரம் III பதவிக்கான திரட்ட சம்பள அளவுத்திட்டம்:

ரூபா. 52,250 - 10×800 - 11×1,190 - 10×1,320 - 10×1,350 – 100,040/-
நியமனத்திற்காக தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரி ஒருவருக்கு இச்சம்பளம் 2027.01.01 முதல் உரித்தாகும்.

07. ஆட்சேர்ப்பு முறை

மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம்) சேவை வகுதிக்குள் அடங்கும் மண் பரிசோதகர் ஆட்சேர்ப்புத் திட்டம், அரச பொது நிர்வாக சுற்றறிக்கைகள், தேசிய மற்றும் மாகாண கொள்கைகள் மற்றும் எழுத்துப் பரீட்சை மூலம் திறமை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும். தகுதிபெறும் விண்ணப்பதாரிகளிடமிருந்து எழுத்துப் பரீட்சையில் பெறும் மொத்தப் புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்படுவர். நேர்முகப் பரீட்சைக்கு புள்ளிகள் எவையும் வழங்கப்படமாட்டாது. விசேட தேவையுடையோருக்கான (மாற்றுத்திறனாளிகள்) ஒதுக்கீடு, அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 27/88-க்கு அமைய கவனத்தில் கொள்ளப்படும்.

08. பரீட்சைக் கட்டணம்

பரீட்சைக் கட்டணம் ரூபா. 1,000/- ஆகும். இக்கட்டணத்தை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் இறுதித் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ, செயலாளர் — மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம் எனும் பெயருக்கு கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டை நிகழ்நிலையில் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும். பற்றுச்சீட்டின் மூலப்பிரதியை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பரீட்சைக் கட்டணங்கள் மீள செலுத்தப்படமாட்டாது; வேறு பரீட்சைகளுக்கு மாற்றவும் இடமளிக்கப்படமாட்டாது. காசுக்கட்டளை, முத்திரை ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

09. பரீட்சை நிபந்தனைகள்

  • பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை நிகழ்நிலையில் (online) ஆங்கில மொழி மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு முன் அறிவித்தலை முழுமையாக வாசித்து, அறிவுறுத்தல்களை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் அறிவிப்பின்றி நிராகரிக்கப்படும்.
  • இவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுடையவர்கள் மாத்திரம் விண்ணப்பித்துள்ளனர் எனும் முன் அனுமானத்துடன், தேவையான பரீட்சைக் கட்டணம் செலுத்தப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டைகள் நிகழ்நிலை மூலம் அனுப்பப்படும். அனுமதி அட்டை பெறுவது பதவிக்கான தகுதிகளை பெற்றுள்ளதாக ஏற்றுக்கொள்ளப்படாது.
  • அனுமதி அட்டை தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், 026-2228368 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்படும் தாமதத்தால் விளையும் விளைவுகளுக்கு விண்ணப்பதாரியே பொறுப்பேற்க வேண்டும்.

10. விண்ணப்பிக்கும் முறை

  • நிகழ்நிலையில் விண்ணப்பித்த பின், அதன் அச்சுப் பிரதியை (Printout) எடுத்து, கையொப்பமிட்டு, பற்றுச்சீட்டின் மூலப்பிரதியுடன் இணைத்து, கையொப்பத்தை உறுதிப்படுத்தி பின்வரும் முகவரிக்கு விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னரோ பின்னரோ ஒரு வார காலத்திற்குள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்:
    செயலாளர், மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம்,
    கன்னியா வீதி, வேரோதயநகர், திருகோணமலை.
  • கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் பரீட்சைக் குறியீட்டு இலக்கம் EX/REC/26/10 மற்றும் "கிழக்கு மாகாணப் பொதுச்சேவையின் மண் பரிசோதகர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2026" எனக் குறிப்பிட வேண்டும்.
கவனிக்க: பொய்யான தகவல்கள் வழங்கியதாக எக்காலத்திலும் தெரியவந்தால், அப்பரீட்சார்த்தியின் உரிமை இரத்துச் செய்யப்படலாம் அல்லது மாகாண சேவையிலிருந்து நீக்கப்படலாம்/சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.

12. கையொப்பத்தை உறுதிப்படுத்தல்

விண்ணப்பதாரி தனது கையொப்பத்தை அரசாங்க பாடசாலை அதிபர், சத்தியப்பிரமாண ஆணையாளர், நீதவான், சட்டத்தரணி, பிரசித்தி பெற்ற நோத்தாரிஸ், அல்லது மதிப்பிற்குரிய அரச/மாகாண சேவை நிரந்தர உத்தியோகத்தர் ஒருவரால் உறுதிப்படுத்த வேண்டும்.

13. பரீட்சார்த்திகளின் அடையாளம்

பரீட்சையின்போது தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். முகத்தை மறைக்காமலும் இருகாதுகளையும் மறைக்காமலும் பரீட்சை மண்டபத்திற்குள் நுழைய வேண்டும்.

15. பரீட்சைத் திட்டம்

எழுத்துப் பரீட்சை இரண்டு வினாத்தாள்களைக் கொண்டிருக்கும். இப்பரீட்சை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் மூலம் நடத்தப்படும். விண்ணப்பித்த மொழியைப் பின்னர் மாற்ற இடமளிக்கப்படமாட்டாது.

வினாத்தாள்மொத்தப் புள்ளிகள்நேரம்சித்தியடைவதற்கான புள்ளி
I. நுண்ணறிவுப் பரீட்சை10001 மணித்தியாலம்40%
II. பாடத்துறை சார்ந்த தொழில்நுட்ப பரீட்சை10002 மணித்தியாலம்40%
  • நுண்ணறிவுப் பரீட்சை: பரீட்சார்த்தியின் தர்க்கரீதியாகச் சிந்திக்கும் ஆற்றல், பகுப்பாய்வுத்திறன், நேர முகாமைத்துவம் மற்றும் தீர்மானிக்கும் திறன் ஆகியவற்றை அளவிடும் வினாக்களைக் கொண்டிருக்கும்.
  • தொழில்நுட்ப அறிவு: மண் (ஈர்ப்பு, பிண்டைய வளைவு வரம்புகள் மற்றும் குறியீடுகள், தூள் அளவுப் பகுப்பாய்வு, இறுக்கச் சோதனை) மற்றும் சீமெந்து/கொங்கிரீட் (சீமெந்து/கொங்கிரீட் சாந்து சோதனை, பரு மற்றும் நுண்ணிய கற்களின் சோதனை, பலவகையான கொங்கிரீட் கலவைகளின் வேலைத்திறன் மற்றும் அமுக்க வலிமை) தொடர்பான அறிவை பரீட்சிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடம் சார்ந்த வினாக்களைக் கொண்டிருக்கும்.

16. பரீட்சை நிலையங்கள்

நகர இலக்கம்நகரம்
01திருகோணமலை
02மட்டக்களப்பு
03அம்பாறை
04கல்முனை

ஒரு பரீட்சை நகரம் சார்பாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பின், அப்பரீட்சை அண்மையிலுள்ள பரீட்சை நகரத்திற்கு மாற்றப்படலாம்.

17–19. பிற முக்கிய நிபந்தனைகள்

  • நேர்முகப் பரீட்சைக்கு குறிப்பிட்ட நாளில் சமூகமளிக்கத் தவறும் விண்ணப்பதாரிகளுக்கு வேறு நாளில் சமூகமளிக்க இடமளிக்கப்படமாட்டாது.
  • தகுதிகளை சான்றுப்படுத்தும் அனைத்து ஆவணங்களும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்கும் நாளிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும்; அன்று சமர்ப்பிக்கப்படாத ஆவணங்கள் பின்னர் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.
  • இவ்வறிவித்தலில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படின், அது தொடர்பில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் தீர்மானமே இறுதியானதாகும். ஏதேனும் விசேட காரணத்தால் பரீட்சை நடத்த முடியாத நிலை ஏற்பட்டாலும், வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பிலும் இதுவே பொருந்தும்.

மேலதிக விபரங்களுக்கு:
முழு அறிவிப்பையும் இங்கு பார்வையிடலாம் — அசல் அறிவிப்பு PDF
ஜே. லியாகத் அலி
செயலாளர்,
மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு,
கிழக்கு மாகாணம், திருகோணமலை.
14.09.2026

Post a Comment

Previous Post Next Post