N E W S

கொழும்புப் பல்கலைக்கழகம் - அலுவலக உதவியாளர் - விண்ணப்பம் 2026

நேர்முகத் தேர்வு அறிவிப்பு 2026

கொழும்புப் பல்கலைக்கழகம் - அலுவலக உதவியாளர் வெற்றிடம்

University of Colombo | Vacancy - Office Assistant (Assignment Basis) | Walk-in Interview

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் முதுகலை மற்றும் தொழில்நடுப்பருவ அபிவிருத்திப் பிரிவில் (Postgraduate & Mid-Career Development Unit) பணி ஒப்படைப்பு (Assignment) அடிப்படையில் அலுவலக உதவியாளர் பதவிக்குத் தகுதியானவர்களிடமிருந்து நேரடி நேர்முகத் தேர்வுக்கான (Walk-in Interview) விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.
நேர்முகத் தேர்வு திகதி 2026.09.29
(செவ்வாய்க்கிழமை)
நேரம் காலை 10.00 மணி முதல்
பிற்பகல் 1.00 மணி வரை
இடம் "Old Conference Hall"
பீடாதிபதி அலுவலகம்

வெற்றிட சுருக்க விவரங்கள்

நிறுவனம்கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை
பதவிஅலுவலக உதவியாளர் (Office Assistant)
பிரிவுமுதுகலை மற்றும் தொழில்நடுப்பருவ அபிவிருத்திப் பிரிவு, முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடம்
நியமன முறைபணி ஒப்படைப்பு / ஒப்பந்த அடிப்படை (Assignment Basis)
வயதெல்லை18 - 45 வயது
வேலை நாட்கள்வாரத்தில் 5 நாட்கள் (சனி, ஞாயிறு உட்பட)
விளம்பரத் திகதி2026.09.10

விண்ணப்பதாரிகள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள்

1
க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அவற்றில் குறைந்தது இரண்டு (02) பாடங்களில் திறமைச் சித்தி (Credit) பெற்றிருத்தல் வேண்டும். இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் இச்சித்திகளைப் பெற்றிருக்க வேண்டும்.
2
இலங்கைப் பிரஜையாக இருத்தல்.
3
விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல்.
4
நல்லொழுக்கமும் திடகாத்திரமான உடல் ஆரோக்கியமும் உடையவராக இருத்தல்.
5
குறைந்தது ஆறு (06) மாத கால தொழில் அனுபவம் இருத்தல்.
6
பின்வரும் ஆற்றல்களைக் கொண்டிருத்தல்:
(அ)போட்டோ பிரதி இயந்திரம் (Photocopier), மல்டிமீடியா புரொஜெக்டர், ஒலி அமைப்பு (Sound System) ஆகியவற்றை இயக்குதல்; சிறப்புக் கல்வி நிகழ்வுகளுக்காக விரிவுரை மண்டபங்களை ஒழுங்கமைத்தல்.
(ஆ)துப்பரவுப் பணிகளைச் செய்தல் மற்றும் விரிவுரைகள் சுமுகமாக நடைபெற உதவுதல்.
(இ)நிகழ்வுகளில் தேநீர் தயாரித்து வழங்குதல்.
(ஈ)மேற்பார்வையின்றித் தனித்துச் செயற்படுதல்.
(உ)அடிப்படைக் கணினி அறிவு (Basic Computer Literacy).

கொடுப்பனவு

மொத்தக் கொடுப்பனவு ரூ. 835,935/- 12 சம மாதத் தவணைகளில், நிறைவு செய்த வேலையின் அடிப்படையில் வழங்கப்படும்.
(தோராயமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 69,661)

பொது நிபந்தனைகள்

அ
இந்நியமனம் ஒப்பந்த அடிப்படையிலானது; ஆரம்பத்தில் ஒரு (01) வருட காலத்திற்கு வழங்கப்படும். திருப்திகரமான செயற்றிறன் மற்றும் பல்கலைக்கழகத்தின் தேவைகளைப் பொறுத்து, ஒப்பந்தக் காலத்தில் சேவையை அதிகபட்சம் இரண்டு (02) வருடங்கள் வரை நீடிக்கப் பல்கலைக்கழகம் பரிசீலிக்கலாம்.
ஆ
வாரத்தில் ஐந்து (05) வேலை நாட்கள்; சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் இதில் அடங்கும்.

நேர்முகத் தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்

  • சுயவிவரக் கோவை (CV)
  • க.பொ.த (சா/த) பரீட்சையின் அசல் சான்றிதழ்கள்
  • தொழில் அனுபவச் சான்றிதழ்கள்
  • இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான சான்றிதழ்கள்
  • பிறப்புச் சான்றிதழ்
  • தேசிய அடையாள அட்டை
  • மேற்கூறிய ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட (Certified) புகைப்பட பிரதிகளின் தொகுதி
கவனிக்க: இது நேரடி நேர்முகத் தேர்வு (Walk-in Interview) ஆகும். 2026.09.29 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிக்குள் மேற்குறிப்பிட்ட இடத்திற்கு அனைத்து ஆவணங்களுடனும் சமுகமளிக்கவும்.

மாதிரி விண்ணப்பப் படிவம்

பதிவாளர் கொழும்புப் பல்கலைக்கழகம்,
94, குமாரதுங்க முனிதாஸ மாவத்தை,
கொழும்பு 03. திகதி: 2026.09.10

பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்

WhatsApp Channel இல் இணைய ➤

Post a Comment

Previous Post Next Post