N E W S

இலங்கை முதலீட்டுச் சபை (BOI) - முகாமைத்துவ உதவியாளர் (MA 1-2 – தரம் III) வெற்றிடங்கள் 2026

இலங்கை முதலீட்டுச் சபை (BOI)

முகாமைத்துவ உதவியாளர் (MA 1-2 – தரம் III) வெற்றிடங்கள் 2026

Board of Investment of Sri Lanka – Management Assistant Vacancies

விண்ணப்ப முடிவுத் திகதி

2026.10.04

இலங்கை முதலீட்டுச் சபை (BOI) என்பது நாட்டின் முன்னுரிமைத் துறைகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவித்து, அவற்றுக்கு வசதிகளை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் உச்ச நிறுவனமாகும். இலங்கைப் பொருளாதாரத்தை உலகளாவிய போட்டித்தன்மை மிக்க உற்பத்தி மற்றும் சேவை ஏற்றுமதி மையமாக மாற்றுவதில் BOI முக்கிய பங்கு வகிக்கிறது.

உயர் நேர்மையும் கடின உழைப்பிற்கான உறுதியும் கொண்ட ஆற்றல்மிக்கவர்களை இணைத்துத் தனது பிரிவுகளை வலுப்படுத்த BOI விரும்புகிறது. அதன்படி, BOI இல் நிலவும் முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தகுதியுடைய இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவி

முகாமைத்துவ உதவியாளர்
MA 1-2 – தரம் III

வயது எல்லை

18 – 45 வயது

விண்ணப்பிக்கும் முறை

இணையவழி (Online) மட்டும்

கல்வித் தகைமைகள்
1

க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில்திறமைச் சித்தி (Credit)

பெற்றிருத்தல்.
சிங்களம் / தமிழ்ஆங்கில மொழிகணிதம்
2

க.பொ.த (உ/த) பரீட்சையில் பொதுப் பத்திரம் (General Paper) தவிர்ந்த மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.

ஏனைய தகைமைகள்
3

மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட, குறைந்தபட்சம் ஆறு (06) மாதங்கள் கொண்ட கணினிப் பிரயோகங்கள் (Computer Applications) பாடநெறி.

ஆட்சேர்ப்பு முறை

முகாமைத்துவ உதவியாளர் (MA 1-2, தரம் III) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு, எழுத்து மூலமான போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

வெற்றிடங்களின் எண்ணிக்கையைப் போன்று மூன்று மடங்கு வரையிலான விண்ணப்பதாரிகள், எழுத்துப் போட்டிப் பரீட்சையில் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் தகுதி வரிசைப்படி மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

சம்பளக் scale

MA 1-2 – 2025

ரூ. 46,220 – 10 x 540, 7 x 630, 12 x 1,080, 12 x 1,280 – 84,350 (மாதாந்தம்)

DMS சுற்றறிக்கை இல. 01/2025 இன் படி, 2026 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப சம்பளப் படி ரூ. 43,312 ஆகும். மேலும், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
வயது எல்லை

விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18 வயதிற்குக் குறையாமலும் 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

பொது நிபந்தனைகள்

ஒவ்வொரு விண்ணப்பதாரியும்,

  • இலங்கைக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • பதவியின் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றவும், நாட்டின் எப்பகுதியிலும் சேவையாற்றவும் தேவையான உடல் மற்றும் உளத் தகுதி உடையவராக இருத்தல் வேண்டும்.
  • சிறந்த ஒழுக்கமும் நன்னடத்தையும் உடையவராக இருத்தல் வேண்டும்.
மேலதிக சலுகைகள் (Fringe Benefits)
  • ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவப் பயன் திட்டம்
  • மானிய அடிப்படையிலான வாகனக் கடன் மற்றும் வீட்டுக் கடன் வசதிகள்
  • விரிவான ஆயுட் காப்புறுதித் திட்டம்
விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்ட தகைமைகள் அனைத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளவர்கள், வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு இணங்க, 2026 ஒக்டோபர் 04 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். BOI இணையதளமான www.investsrilanka.com இல் "Careers" பகுதியைத் தெரிவு செய்து, தொடர்புடைய இணைப்பின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது, குறித்த இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இறுக்கமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மின்னஞ்சல், தபால் அல்லது வேறு எந்த முறையிலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.

விண்ணப்ப முடிவுத் திகதியன்று தேவையான தகைமைகளைக் கொண்டிராதவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்; தகைமைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.

நேர்முகத் தேர்வின்போது, தொடர்புடைய ஆவணங்கள் / சான்றிதழ்களின் மூலப் பிரதிகளை சமர்ப்பிக்கத் தவறுபவர்கள் எக்காரணம் கொண்டும் நியமனத்திற்குக் கருத்திற் கொள்ளப்பட மாட்டார்கள்.

எவ்வகையிலும் சிபாரிசு தேடுதல் (Canvassing) தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்கும்.

நிரப்பப்படவுள்ள பதவிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதற்கும், ஆட்சேர்ப்பு நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கும் BOI க்கு உரிமை உண்டு.


தொடர்பு முகவரி

பணிப்பாளர் நாயகம், இலங்கை முதலீட்டுச் சபை (Board of Investment of Sri Lanka), 24 ஆம் மாடி, மேற்குக் கோபுரம் (West Tower), உலக வர்த்தக மையம் (World Trade Centre), எச்செலன் சதுக்கம் (Echelon Square),

கொழும்பு 01.

மூலம்: இலங்கை முதலீட்டுச் சபை (BOI) – வெற்றிட அறிவித்தல்

பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்

WhatsApp Channel இல் இணைய ➤

Post a Comment

Previous Post Next Post