அகரம் Logo
N E W S

தேசிய அளவிலான பாடசாலை மாணவர்களுக்கான சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டி

📑 2026 உலக வாழ்விட நாள்

தேசிய அளவிலான பாடசாலை மாணவர்களுக்கான சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டி

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA) நடாத்தும் போட்டி – 2026 ஒக்டோபர் 05

நாட்டின் சகல பாடசாலை மாணவர்களுக்குமான ஒரு அரும்பெரும் வாய்ப்பு! மகிழ்ச்சி, சமாதானம், சுதந்திரம் நிறைந்த அழகான வாழ்க்கைக்காக வருமானத்திற்குப் பொருத்தமான வகையில் மக்கு பொருத்தமான அழகான சிறிய வீடொன்றிற்கான உங்கள் கருத்துக்களை ஆக்கத்தில் உள்ளக்க வேண்டும்.
📝 போட்டியின் தலைப்பு: “எனது அழகான சிறிய வீடு”

● கலந்துகொள்ளக் கூடியவர்கள்

அரசாங்கப் பாடசாலைகள் அல்லது தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். (தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இதற்கு தகுதியற்றவர்கள்.)

🎨 பாடசாலை சித்திரப் போட்டி

வகுப்புப் பிரிவுகள்:
முதலாம் வகை03, 04, 05 ஆம் தரம்
இரண்டாவது வகை06, 07, 08 ஆம் தரம்
மூன்றாவது வகை09, 10 ஆம் தரம்
நான்காவது வகை11, 12, 13 ஆம் தரம்
📏 அளவு: 17x22 அங்குலம் 🎨 பென்சில் / நீர்வண்ணம் / பென்டல்

✏ பாடசாலை கட்டுரைப் போட்டி

மொழிமூலம்: தமிழ் அல்லது சிங்களம்
முதலாம் வகை (06, 07, 08)300 வசனங்களுக்குள்
இரண்டாம் வகை (09, 10)500 வசனங்களுக்குள்
மூன்றாம் வகை (11, 12, 13)500 வசனங்களுக்குள்

🏆 பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

இடம்பரிசுத் தொகை
🥇 முதலாம் இடம்15,000.00 ரூபா + விருது + சான்றிதழ்
🥈 இரண்டாம் இடம்12,500.00 ரூபா + விருது + சான்றிதழ்
🥉 மூன்றாம் இடம்10,000.00 ரூபா + விருது + சான்றிதழ்
ஆறுதல் பரிசுகள் (10)ஒவ்வொன்றுக்கும் 3,000.00 ரூபா + சான்றிதழ்

📑 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவங்களை பின்வரும் முகவரிகளில் பெற்றுக்கொள்ளலாம்:
🌐 www.nhda.gov.lk 🏢 மாவட்ட அலுவலகங்கள்  📱 அதிகாரப்பூர்வ Facebook பக்கம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரின் பரிந்துரையுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

⏰ சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி
2026 செப்டம்பர் 15
சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரின் பரிந்துரையுடன் அனுப்பி வைக்க வேண்டும்
☎ தொடர்பு: உதவி பொது முகாமையாளர் (தகவல் மற்றும் பிரசாரம்)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, 07ஆம் மாடி, சேர் சிற்றம்பலம் ஏ. கார்ட்னர் மாவத்தை, கொழும்பு 02.
தொலைபேசி: 011‑2447038 / 011‑2389513 / 011‑2447207

Post a Comment

Previous Post Next Post