அகரம் Logo
N E W S

புனர்வாழ்வு பணியக வேலைவாய்ப்பு - 2026 (101 வெற்றிடங்கள்)

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வு பணியகம்

வெற்றிடங்கள் 2026
புனர்வாழ்வு பணியகத்தினதும் அதன் கீழ் நிறுவப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களினதும் கீழ் குறிப்பிடப்பட்ட தொழில்கள் தொடர்பில் இருக்கும் வெற்றிடங்களுக்கு தகுதி பெற்ற இலங்கை பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1முதலாம் பிரிவு – பதவிகள்
பதவிவெற்றிட எண்ணிக்கை
நிர்வாகி மற்றும் செயலாளர் – (JM 1-1)01
தகவல் தொழில்நுட்ப அதிகாரி – (JM 1-1)01
ஆலோசனை அதிகாரி (புனர்வாழ்வு) – (MA 4)18
ஆலோசனை உதவியாளர் (புனர்வாழ்வு) – (MA 2-2)38
உடற்பயிற்சி ஆலோசகர் – (MA 2-2)10
சுகாதார உதவியாளர் – (MA 2-2)06
தகவல் தொழில்நுட்ப உதவியாளர் – (MA 2-1)01
2இரண்டாம் பிரிவு – பதவிகள்
பதவிவெற்றிட எண்ணிக்கை
ஓட்டுநர் – (PL 3)12
தகவல் தொழில்நுட்ப அதிகாரி – (PL 3)03
குழாய் பொருத்துநர் / நீர் மோட்டார் இயக்குநர் – (PL 3)03
மின்வினைஞர் / மின் பிறப்பாக்கி இயக்குநர் – (PL 2)05
சமையல்காரர் – (PL 2)01
அலுவலக உதவியாளர் – (PL 1)02
விண்ணப்பம் ஆரம்பம்
2026.08.03
இறுதித் திகதி
2026.08.17
3முக்கிய குறிப்புகள்
  • விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியது ஒன்லைன் (Online) முறையில் மாத்திரமாகும்.
  • ஒவ்வொரு பதவிக்கும் தொடர்புடையதாக எழுத்துமூல போட்டி பரீட்சை மற்றும்/அல்லது கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடத்தப்படும்.
  • ஒன்லைன் முறையில் பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, தொடர்புடைய கல்விச் சான்றிதழ்களின் உறுதி செய்யப்பட்ட பிரதிகளுடன் இறுதித் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்புதல் அவசியம்.
  • கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிடல் வேண்டும். முழுமை பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் புனர்வாழ்வு அலுவலகம்,
இலக்கம் 462/2, கடுவளை வீதி,
கனஹேன, பத்தரமுல்லை.

Post a Comment

Previous Post Next Post