அகரம் Logo
N E W S

இலங்கை முதலீட்டு சபை (BOI) - வேலைவாய்ப்புகள் 2026

இலங்கை முதலீட்டு சபை (BOI) — வேலை வாய்ப்புகள் 2026

Board of Investment of Sri Lanka (BOI) – Vacancies

10 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
இலங்கை முதலீட்டு சபை (BOI) நாட்டின் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீடுகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முதன்மை நிறுவனமாகும். இலங்கையின் பொருளாதாரத்தை உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை வாய்ந்த உற்பத்தி மற்றும் சேவை ஏற்றுமதி மையமாக மாற்றுவதில் BOI முக்கிய பங்காற்றுகிறது. திறமையான மற்றும் நேர்மையான தமிழ் / சிங்கள இலங்கையர்களிடமிருந்து கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வெற்றிடங்கள் & தகைமைகள்

1பணிப்பாளர் நாயகம் (Deputy Director General)HM 2-3

வணிக முகாமைத்துவம் / வணிக நிர்வாகம் / பொது நிர்வாகம் / பொருளியல் / பொறியியல் ஆகியவற்றில் பட்டம் + முதுநிலைப் பட்டம் / தொழில்சார் நிறுவன உறுப்பினர் தகைமை + 20 ஆண்டுகள் முகாமைத்துவ அனுபவம் (இதில் 5 ஆண்டுகள் மூத்த முகாமைத்துவ மட்டத்தில்). அல்லது தொடர்புடைய துறையில் PhD பட்டம் + 5 ஆண்டுகள் மூத்த முகாமைத்துவ அனுபவம்.

2நிறைவேற்று பணிப்பாளர் (வலயங்கள்)HM 2-1

தொடர்புடைய பட்டம் + முதுநிலைப்பட்டம் / தொழில்சார் நிறுவன உறுப்பினர் தகைமை + 17 ஆண்டுகள் முகாமைத்துவ அனுபவம் (4 ஆண்டுகள் மூத்த முகாமைத்துவ மட்டத்தில்). அல்லது PhD பட்டம் + 4 ஆண்டுகள் மூத்த முகாமைத்துவ அனுபவம்.

3நிறைவேற்று பணிப்பாளர் (முதலீட்டாளர் சேவைகள்)HM 2-1

பதவி 2ல் குறிப்பிட்ட அதே தகைமைகள் பொருந்தும்.

4நிறைவேற்று பணிப்பாளர் (சட்டம்)HM 2-1

சட்டத்தரணி (Attorney-at-Law) தகைமை + முதுநிலைப்பட்டம் + 17 ஆண்டுகள் முகாமைத்துவ அனுபவம் (4 ஆண்டுகள் மூத்த மட்டத்தில்). அல்லது சட்டத்தரணி + PhD + 4 ஆண்டுகள் மூத்த முகாமைத்துவ அனுபவம்.

5நிறைவேற்று பணிப்பாளர் (நிதி)HM 2-1

நிதி / கணக்கியல் / வர்த்தகம் / வணிக நிர்வாகத்தில் பட்டம் + முதுநிலைப்பட்டம் + 17 ஆண்டுகள் முகாமைத்துவ அனுபவம். அல்லது தொழில்சார் நிறுவனத்தின் Fellow உறுப்பினர் தகைமை + 13 ஆண்டுகள் அனுபவம். அல்லது PhD + 4 ஆண்டுகள் மூத்த அனுபவம்.

6நிறைவேற்று பணிப்பாளர் (தொழில்நுட்ப சேவைகள்)HM 2-1

சிவில் பொறியியலில் பட்டம் (IESL / ECSL பதிவு) + Corporate உறுப்பினர் தகைமை + 17 ஆண்டுகள் முகாமைத்துவ அனுபவம். அல்லது PhD + 3 ஆண்டுகள் மூத்த அனுபவம்.

7மூத்த பிரதி பணிப்பாளர் (பொறியியல் அனுமதிகள் & சிறப்பு திட்டங்கள்) – தலைமை அலுவலகம்HM 1-1

பொறியியலில் பட்டம் (IESL/ECSL) அல்லது தொடர்புடைய பட்டம் + முதுநிலைப்பட்டம் + 17 ஆண்டுகள் அனுபவம் (4 ஆண்டுகள் மூத்த மட்டத்தில்). அல்லது PhD + 4 ஆண்டுகள் மூத்த அனுபவம்.

8உதவிப் பணிப்பாளர் (முதலீட்டாளர் சேவைகள்) – பியாகம ஏற்றுமதி முறை வலயம்HM 1-1

தொடர்புடைய துறையில் பட்டம் + பட்டத்திற்குப் பின் குறைந்தது 1 ஆண்டு அனுபவம்.

9முதலீட்டு மேம்பாட்டு அலுவலர் – தலைமை அலுவலகம்JM 1-1, தரம் II

வணிக முகாமைத்துவம் / நிர்வாகம் / பொருளியல் / பொறியியல் ஆகியவற்றில் பட்டம் (UGC அங்கீகாரம்).

10தொழில்நுட்ப அலுவலர் – களுத்துறை ஏஅம வலயம் / கொக்கலை ஏஅம வலயம் / கண்டி முதலீட்டு பூங்காJM 1-1, தரம் II

பொறியியல் பட்டம் அல்லது NVQ தரம் 7 (1 ஆண்டு அனுபவத்துடன்) அல்லது NVQ தரம் 6 + 5 ஆண்டுகள் அனுபவம் அல்லது NVQ தரம் 5 + 10 ஆண்டுகள் அனுபவம்.

 சம்பள மட்டங்கள் (Salary Scales)

தரம்சம்பள மட்டம் (Rs.)2026 ஆரம்ப படி (DMS 01/2025)
HM 2-3173,000 – 231,200150,325
HM 2-1161,140 – 219,340140,317
HM 1-1140,640 – 202,140123,019
MM 1-1, தரம் II91,690 – 131,37081,710
JM 1-1, தரம் II72,650 – 93,05065,633

* மேலதிகமாக அரசாங்கம் அங்கீகரித்த கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

வயது வரம்பு

  • HM தரப்பிரிவு: 35 – 55 வயதிற்கு உட்பட்டோர் (விண்ணப்ப முடிவு திகதியில்)
  • MM & JM தரப்பிரிவு: 22 – 45 வயதிற்கு உட்பட்டோர்
⚠ அரச துறை ஊழியர்களுக்கு மேல் வயது வரம்பு பொருந்தாது.

✅ பொதுவான நிபந்தனைகள்

  • இலங்கை குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்
  • தேசம் முழுவதும் எந்த பகுதியிலும் பணியாற்ற உடல் & மனரீதியாக தகுதியானவராக இருத்தல் வேண்டும்
  • சிறந்த ஒழுக்க நடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்

சலுகைகள் (Fringe Benefits)

  • ஊழியர் & குடும்பத்தினருக்கான மருத்துவ சலுகைத் திட்டம்
  • வாகனம் & வீட்டுக் கடன் சலுகைகள்
  • விரிவான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
  • உயர் பதவிகளுக்கு போக்குவரத்து / எரிபொருள் கொடுப்பனவு

தகைமையுடையவர்கள் BOI அதிகாரப்பூர்வ இணையதளம் ஊடாக “careers” பகுதியில் இணைப்பைப் பயன்படுத்தி Online முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் / தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

Online Application - இங்கே கிளிக் செய்யவும்

⌛ விண்ணப்ப முடிவு திகதி: 2026 ஆகஸ்ட் 16

தகுதி இல்லாதோர் விண்ணப்பிக்க முடியாது. நேர்முகத்தேர்வின் போது மூலப் பிரதிகளை சமர்ப்பிக்காதவர்கள் பணிக்கு தெரிவு செய்யப்பட மாட்டார்கள். எந்தவொரு வற்புறுத்தல் (canvassing) செய்தாலும் தகுதி நீக்கம் செய்யப்படும்.

Post a Comment

Previous Post Next Post