அகரம் Logo
N E W S

இலங்கை புகையிரத திணைக்களம் தங்குமிட பங்களா உதவியாளர் பதவி

🚨 அரசு வேலைவாய்ப்பு 2026

இலங்கை புகையிரத திணைக்களம்
தங்குமிட பங்களா உதவியாளர் பதவி

20 தங்குமிட பங்களா உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

🏢
நிறுவனம்
இலங்கை புகையிரத திணைக்களம்
👥
வெற்றிடங்கள்
20
💰
சம்பளம்
ரூ. 40,000 - 61,880
🎂
வயதெல்லை
18 - 45 வருடங்கள்

📋 01. அறிமுகம்

இலங்கை புகையிரத திணைக்களத்தில் அமைந்துள்ள தங்குமிட விடுதிகள் தொடர்பில் 20 தங்குமிட பங்களா உதவியாளர்கள் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஏற்புடைய தகைமைகளைக் கொண்ட இலங்கை பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

🎓 02. ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகைமைகள்

2.1 கல்விசார் தகைமைகள்

கல்விப் பொதுதர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு தடவைகளை விஞ்சாத வண்ணம் இரு (02) திறமை சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

2.2 தொழிற்சார் தகைமைகள்

துறைசார்ந்து பெற்றுள்ள தொழிற்சார் தகைமைகள் விசேட தகைமையாக கருதப்படும்.

2.3 அனுபவம்

துறைசார்ந்து பெற்றுள்ள அனுபவம் விசேட தகைமையாக கருதப்படும்.

2.4 உடல்சார் தகைமைகள்

அனைத்து விண்ணப்பதாரிகளும் இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் சேவை புரிவதற்கும் பதவியில் கடமை புரிவதற்கும் தேவையான உடல் மற்றும் உள ரீதியான பொருத்தப்பாட்டினை கொண்டிருத்தல் வேண்டும்.

2.5 வயதெல்லை

விண்ணப்பக் கோரல் அறிவித்தலிற்கமைய விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதித் திகதிக்கு 18 வயதின் விட குறையாமலும் 45 வயதின் விஞ்சாதும் இருத்தல் வேண்டும்.

2.6 வேறு தகைமைகள்

  • இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரிகள் சிறந்த நன்னடத்தையை கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும்.
  • பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு கருத்திற் கொள்ளப்படுகின்ற அனைத்து தகைமைகளையும் விண்ணப்பக் கோரல் அறிவித்தலின் இறுதி திகதிக்கு முன்னதாக அனைத்து வகையிலும் நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

💵 03. பதவிக்குரிய சம்பள அளவுத்திட்டம்

சம்பள குறியீட்டு இலக்கம்: பொது நிர்வாக சுற்றறிக்கை 10/2025 இல் காட்டப்பட்டுள்ளவாறு சம்பள குறியீட்டு இலக்கம் PL 1-2025

சம்பள அளவீடு:
ரூ. 40,000 - 10 x 450 - 10 x 490 - 10 x 540 - 12 x 590 - 61,880.00 (மாதாந்தம்)

அச்சம்பளம் 2027.01.01 ஆம் திகதி தொடக்கம் கிடைக்கப் பெறும். நியமனம் அமுலுக்கு வருகின்ற திகதி தொடக்கம் இச் சுற்றறிக்கையின் III ஆவது அட்டவணையின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளம் செலுத்தப்படும். மேற்கூறிய நியமன திகதியிலிருந்து 03 வருட காலம் செல்வதற்கு முன்னர் விளநத்திறன் தடைக்காண் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.

📌 04. சேவை நிபந்தனைகள்

  • இப்பதவி நிரந்தரமானதும் ஓய்வூதியத்துக்குரியதாகும்.
  • ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றவர்கள் நாட்டில் எப் பிரதேசத்திலும் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்திற்குரிய தங்குமிட பங்களாக்களில் சேவை புரிவதற்கு பொருந்தியிருக்க வேண்டும்.
  • இப்பதவிக்கு நியமிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்கள் நியமன திகதியிலிருந்து மூன்று (03) வருட கால தகுதிகூர் காண் காலத்திற்கு கீழ்படிய வேண்டும்.
  • பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் பின்னர், மூன்று (03) வருட காலத்திற்குள் பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 மற்றும் இடைநேரான சுற்றறிக்கைகளின் ஏற்பாடுகளுக்கமைய அரசகரும மொழி தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

🏆 05. ஆட்சேர்ப்பு செய்யப்படும் முறை (மொத்தம் 100 புள்ளிகள்)

தகைமைகளை மதிப்பிடும் நேர்முக பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு அதிக்கூடிய புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் முறைக்கமைய வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவர்.

புள்ளிகள் வழங்கப்படும் பிரதான தலைப்புக்கள்அதிகூடிய புள்ளிகள்
மேலதிக கல்வித் தகைமைகள்20
தொழிற்சார் தகைமைகள்25
பதவிக்கு ஏற்புடையவாறு பெற்றுள்ள அனுபவம்40
வெளிவாரி திறன் செயற்பாடுகள்10
நேர்முக பரீட்சையில் வெளிக்காட்டப்படும் திறமை05
மொத்தம்100

5.1 மேலதிக கல்வித் தகைமைகள் (மொத்த புள்ளிகள் 20)

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரு (02) திறமை சித்திகளை விடவும் திறமை சித்திகளைப் பெற்றுள்ள ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் 02 புள்ளிகள் வீதம் (அதிகூடியளவில் 05 பாடங்களுக்கு)10
க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள பாடமொன்று தொடர்பில் 01 புள்ளி வீதமும், திறமை சித்திகளைப் பெற்றுள்ள பாடமொன்றிற்காக 02 புள்ளிகள் வீதமும் (03 பாடங்களுக்காக, ஆங்கில பாடத்தினை தவிர்த்து)6
ஆங்கில பாடம் தொடர்பில் பெற்றுள்ள சான்றிதழ்கள்/டிப்ளோமா பாடநெறி தொடர்பில்2
வேறு மொழிகள் தொடர்பில் பெற்றுள்ள சான்றிதழ்கள்/டிப்ளோமா பாடநெறி தொடர்பில்2

தொழிற்சார் தகைமைகள் (மொத்த புள்ளிகள் 25)

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் உணவு தயாரித்தல் (Professional Cookery), ஹோட்டல்/வைத்தியசாலை/அலுவலகங்கள்/வீடுகள் போன்ற இடங்களில் துப்புரவு பணி மற்றும் பராமரிப்பு (Housekeeping Services), உணவு வழங்குதல் மற்றும் விருந்தினரை உபசரித்தல் (Food & Beverage Associate/Crew member) அல்லது பதவிக்கு ஏற்புடைய துறை சார்ந்து பெற்றுள்ள திறன் கருத்திற் கொள்ளப்படும். (பெற்றுள்ள உயர்ந்த தேர்வான ஒரு திறனுக்கு மாத்திரம் புள்ளிகள் வழங்கப்படும்)

மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட NVQ 04 அல்லது அதற்கு மேலான பாடநெறி தொடர்பில்25
NVQ 03 பாடநெறி தொடர்பில்20
வேறு பாடநெறிகள் தொடர்பில்10

பதவிக்கு ஏற்புடையவாறு பெற்றுள்ள அனுபவம் (மொத்த புள்ளிகள் 40)

நிறுவனம், ஹோட்டல், தங்குமிட பங்களாக்கள், வைத்தியசாலைகள், களஞ்சிய துறையில் துப்புரவு பணி, கூட்டுதல், வெக்குதல்/சமைத்தல், கழுவுதல், மொப் செய்தல், குளியலறைகளை துப்பரவு செய்தல், படுக்கையறைகளை துப்புரவு செய்தல் மற்றும் ஒழுங்காக வைத்தல், தளபாடங்கள் மற்றும் ஏனைய கருவிகளை துப்புரவு செய்தல் மற்றும் பராமரித்தல், பொருட்களை கட்டளையிடுதல் மற்றும் குறிப்பெழுதுதல், உணவு சமைத்தல், உபசரித்தல், கழிவுகளை உரிய முறையில் அகற்றல் அல்லது பதவிக்கு ஏற்புடைய துறை சார்ந்து பெற்றுள்ள சேவை அனுபவம் கருத்திற் கொள்ளப்படும். (சேவை அனுபவம் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற 02 சேவை சான்றிதழ்கள் மாத்திரம் கருத்திற் கொள்ளப்படும்)

சேவை அனுபவம் 04 வருடங்கள் அல்லது அதனை விடவும் அதிகம் எனில், ஒரு சேவை சான்றிதழுக்கு 20 புள்ளிகள் வீதம் (இரண்டு சான்றிதழ்களுக்கு)40
சேவை அனுபவம் 02 வருடங்கள் அல்லது அதன் மேல், 04 வருடங்களுக்கு குறைந்தது எனில், ஒரு சேவை சான்றிதழுக்கு 10 புள்ளிகள் வீதம்20
சேவை அனுபவம் 01 வருடம் அல்லது அதன் மேல், 02 வருடங்களுக்கு குறைந்தது எனில், ஒரு சேவை சான்றிதழுக்கு 05 புள்ளிகள் வீதம்10
சேவை அனுபவம் 06 மாதங்கள் அல்லது அதன் மேல், 01 வருடத்திற்கு குறைந்தது எனில், ஒரு சேவை சான்றிதழுக்கு 2.5 புள்ளிகள் வீதம்05

வெளிவாரி திறன் செயற்பாடுகள் (மொத்த புள்ளிகள் 10)

விளையாட்டு/மாணவ படைவீரர்கள் போன்ற திறமைகள் தொடர்பில் பெற்றுள்ள இரண்டு சான்றிதழ்களுக்கு 02 புள்ளிகள் வீதம்4
அழகியற் துறை சார் திறமைகளுக்காக பெற்றுள்ள அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழொன்றிற்காக2
சமூக சேவை நடவடிக்கைகள் தொடர்பிலான சான்றிதழ்கள்/சமய வகுப்பு போட்டிப் பரீட்சை சான்றிதழொன்றுக்காக2
மேலே புள்ளிகள் தொடர்பில் முன்வைக்கப்படாத வேறு திறமைகள் தொடர்பில் பெற்றுள்ள அங்கீகரிக்கப்படக் கூடிய சான்றிதழொன்றுக்காக2

நேர்முக பரீட்சையில் வெளிக்காட்டும் திறமை (மொத்த புள்ளிகள் 5)

தொலைதொடர்பாடல் – தெளிவாக, கண்ணியமாக, நம்பிக்கையுடன் கதைத்தல்2
செவிமடுத்தல் – நன்றாக செவிமடுத்தல் மற்றும் புரிந்துக்கொள்ளல்2
சிறந்த சித்தரிப்பு – பொருத்தமான உடை, அங்க அசைவு, பாவனை மொழி மற்றும் தன்மை1

⚠️ மேலே புள்ளி வழங்குவதற்கு கருத்திற்கொள்ளப்படுகின்ற அனைத்து தகைமைகளும் (நேர்முக பரீட்சையில் வெளிக்காட்டும் திறமையை தவிர்த்து) விண்ணப்பக் கோரலின் இறுதி திகதிக்கு நிறைவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

📝 06. விண்ணப்பிக்க வேண்டிய முறை

  • மாதிரி படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிடப்படும் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர், "புகையிரத பொதுமுகாமையாளர், புகையிரத தலைமையகம், த.பெ. இல. 355, ஓல்கோட் மாவத்தை, கொழும்பு 10" எனும் முகவரிக்கு கிடைக்கும் வண்ணம் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை இடும் உறையின் இடது பக்க மூலையின் மேல் "தங்குமிட பங்களா உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்தல் – 2026" என குறிப்பிடப்பட வேண்டும்.
  • முழுமையற்ற விண்ணப்பங்கள் மற்றும் குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றமை தொடர்பில் அறிவிக்கப்பட மாட்டாது.
  • விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரியின் கையொப்பமானது அரச பாடசாலையொன்றின் அதிபர், சமாதான நீதவான், சத்திய பிரமாணம் செய்த ஆணையாளர், சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிஸ், அரச உயர் உத்தியோகத்தர் அல்லது இதே தரத்திலான பொறுப்புடையவர் ஒருவரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
  • தற்போது அரச/அரச சார்பு மற்றும் மாகாண அரச சேவையில் சேவை புரிகின்ற, தகைமைகளை நிறைவு செய்துள்ள உத்தியோகத்தர்களும் இப்பதவி தொடர்பில் விண்ணப்பிக்க முடியும் — தமது பிரிவின் தலைவர் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.

📅 விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:

புகையிரத பொதுமுகாமையாளர்
புகையிரத தலைமையகம்,
த.பெ. இல. 355, ஓல்கோட் மாவத்தை,
கொழும்பு 10.

Post a Comment

Previous Post Next Post