அகரம் Logo
N E W S

அரசாங்க உத்தியோகத்தர்கள் விதவைகள்/அனாதைகள் ஓய்வூதிய பதிவு காலம் 2026.10.30 வரை நீட்டிப்பு

 NEWS

அரசாங்க உத்தியோகத்தர்கள் விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய முறைமையில் பதிவு

அரசாங்க உத்தியோகத்தர்கள் விதவைகள் / தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய முறைமையில் பதிவு செய்தல் மற்றும் அவர்களின் பயனாளிகளின் தகவல்களை உறுதிப்படுத்தலை புதிய நிகழ்நிலை தகவல் முறைமையினூடாக செயற்படுத்தலுக்கான காலஎல்லை 2026.10.30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை இலக்கம்03/2025 (II)
குறிப்பு இலக்கம்Pns/P4/W&OP/F11
திகதி2026.07.21
அமைச்சுபொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

2025.01.20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 03/2025 மற்றும் 2025.11.17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 03/2025 (I) ஆகியவற்றின் தொடர்ச்சியாக, புதிய நிகழ்நிலை தகவல் முறைமையின் ஊடாகப் பதிவு செய்தல், தகவல்களை இற்றைப்படுத்துதல் மற்றும் பயனாளிகளின் தகவல்களை உறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கான காலஎல்லை 2026.02.28 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தமையினால், வசதியானது மூடப்பட்டிருந்தது.

எனினும், அக்காலப்பகுதிக்குள் நடவடிக்கைகளை நிறைவு செய்ய இயலாத அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளையும், ஓய்வூதியத் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இணைந்த ஓய்வூதிய முகாமைத்துவ முறைமையின் (iPMS) மூலம் எதிர்காலத்தில் வழங்கப்படும் சேவைகளுக்கு அடிப்படையாக அமையும் தரவு முறைமையின் முக்கியத்துவத்தையும் கருத்திற்கொண்டு, மேற்படி நிகழ்நிலை தகவல் முறைமை 2026.10.30 ஆம் திகதி வரை மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, தகவல் முறைமையில் பதிவு செய்தல், தகவல்களை இற்றைப்படுத்துதல் மற்றும் பயனாளிகளின் தகவல்களை உறுதிப்படுத்துதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் 2026.10.30 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படல் வேண்டும் என அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தகவல் முறைமையில் குறைபாடுள்ள தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளமையினால், அது தொடர்பான பணியாட்தொகுதியினரை முறையாக அறிவுறுத்துவதற்கும், உள்ளீடு செய்யப்படும் தரவுகளின் செம்மைத் தன்மையினைப் பின்னர் கண்காணிப்பதற்கும் இயன்ற முறையில் பொருத்தமான கண்காணிப்பு வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ். ஆலோகபண்டார

செயலாளர்

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

மூலம்: அரசாங்க தகவல் திணைக்களம் (Department of Government Information)

Post a Comment

Previous Post Next Post