BIT பதிவு மீண்டும் திறக்கப்பட்டது!
கொழும்பு பல்கலைக்கழக கணிப்பொறியியல் பீடம் (UCSC) — 26வது Intake
இரண்டாம் சுற்று பதிவிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி
19 ஜூலை 202625 ஜூலை 2026 அன்று நடைபெறும் இரண்டாம் பதிவு தொகுதியில் சேர்க்கப்பட
பதிவு திறந்திருக்கும் காலம்
செப்டம்பர் 2026 நடுப்பகுதி வரை
முதலாம் செமஸ்டர் தொடக்கம்
5 அக்டோபர் 2026
இந்த வாய்ப்பு யாருக்கு?
க.பொ.த (உயர் தர) பரீட்சையை சற்று முன்பே முடித்தவர்கள், காலம் தாழ்த்தாமல் இப்போதே BIT பட்டப்படிப்பிற்கு பதிவு செய்யலாம். பதிவு செய்தவுடன், கல்வியாண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பே Foundation Programme-ல் இணையும் வாய்ப்பு கிடைக்கும்.
தகுதிகள் (Entry Requirements)
- உள்ளூர் க.பொ.த (உ/த) புதிய பாடத்திட்டத்தில் ஒரே இருப்பில் 3 பாடங்களில் சித்தி (பழைய பாடத்திட்டமெனில் 4 பாடங்கள்)
- அல்லது Cambridge/Edexcel A-Level-ல் ஒரே இருப்பில் குறைந்தது 3 "C" தரங்கள்
- அல்லது UCSC நடத்தும் FIT நிகழ்ச்சித்திட்டத்தின் அனைத்து Theory பகுதிகளையும் தேர்ச்சி பெற்றிருத்தல்
- அல்லது SLIATE வழங்கும் HNDIT சான்றிதழ்
- அல்லது TVEC ஏற்புடைய NVQ Level 5 அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி
- மேலும், க.பொ.த (சாதாரண தர)-ல் கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்பட 3 Credits உட்பட 6 பாடங்களில் சித்தி அவசியம்
அரசு பல்கலைக்கழகங்களில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களும், தகுதிகளை பூர்த்தி செய்தால் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
⚠ கட்டணம் திருப்பிச் செலுத்தப்படாது (Non-refundable)
பதிவு செய்வது எப்படி?
- சரியான Email முகவரி மூலம் Online Application-ல் Account உருவாக்கவும்
- படிவத்தை ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்யவும்
- பிறப்புச் சான்றிதழில் உள்ளபடி முழுப் பெயரை குறிப்பிடவும்
- GovPay / Online Card Payment மூலம் கட்டணம் செலுத்தலாம்
- கட்டண உறுதிச் சீட்டை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை Download செய்து பிரிண்ட் எடுத்து வைத்திருக்கவும் (Interview-க்கு தேவை)
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
Assistant Registrar, External Degrees Centre
University of Colombo School of Computing, No.35, Reid Avenue, Colombo 00700
📞 Tel: 011-2581245 | Hotline: 0716393805 / 0716393806
Notice Published On: 24th June, 2026 — UCSC அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில்

