அறிவித்தல்
வரைவுள்ள திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
பதவி வெற்றிடம்
வரைவுள்ள திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கீழ்வரும் பதவிகளுக்கான தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
| தொ.இல | பதவியின் பெயர் | பதவி இலக்கமும் சம்பளக் குறியீடும் | தரம் | வெற்றிடங்கள் |
|---|---|---|---|---|
| 1 | கிளை முகாமையாளர் | 208/12 | II | 09 |
| 2 | கிளை முகாமையாளர் | 208/13 | III | 01 |
| 3 | கிளை முகாமையாளர் | 208/14 | IV | 02 |
| 4 | கிளை முகாமையாளர் | 208/15 | V | 03 |
கிளை முகாமையாளர் தரம் — II
சம்பளக் குறியீடு : 208 - 12
சம்பள அளவுத்திட்டம் : 33,414 – 182 X 15 – 193 X 15 – 39,039
தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள் :
- 2021.01.01 முதல் நடைமுறைக்கு வரும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 03/2021ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அல்லது கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 02/2016ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் குறைந்தது (06) ஆறு வருட கால திருப்திகரமான சேவை காலம்.
- கூட்டுறவு ஊழியர் உயர்தராதரப்பத்திரத்துடன் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / வணிக நிறுவனம் ஒன்றில் காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் ஆகக் குறைந்தது (04) நான்கு வருட கால திருப்திகரமான சேவை அனுபவம்.
- க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தியுடன் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / வணிக நிறுவனம் ஒன்றில் காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் (04) நான்கு வருட கால திருப்திகரமான சேவை அனுபவம்.
- கூட்டுறவுச் சங்கம் ஒன்றில் கிளை முகாமையாளர் தரம் III பதவியில் (02) இரண்டு வருட திருப்திகரமான சேவை காலம் அல்லது கிளை முகாமையாளர் தரம் IV பதவியில் (03) மூன்று வருட திருப்திகரமான சேவை காலம் அல்லது கிளை முகாமையாளர் தரம் V பதவியில் (04) நான்கு வருட திருப்திகரமான சேவை காலம்.
கிளை முகாமையாளர் தரம் — III
சம்பளக் குறியீடு : 208 - 13
சம்பள அளவுத்திட்டம் : 32,936 – 165 X 15 – 182 X 15 – 38,141
தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள் :
- 2021.01.01 முதல் நடைமுறைக்கு வரும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 03/2021ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அல்லது கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 02/2016ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் குறைந்தது (05) ஐந்து வருட கால திருப்திகரமான சேவை காலம்.
- கூட்டுறவு ஊழியர் உயர்தராதரப்பத்திரத்துடன் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / வணிக நிறுவனம் ஒன்றில் காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் ஆகக்குறைந்தது (03) மூன்று வருட கால திருப்திகரமான சேவை அனுபவம்.
- க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தியுடன் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / வணிக நிறுவனம் ஒன்றில் காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் (03) மூன்று வருட கால திருப்திகரமான சேவை அனுபவம்.
- கூட்டுறவுச் சங்கம் ஒன்றில் கிளை முகாமையாளர் தரம் IV பதவியில் (02) இரண்டு வருட கால அல்லது கிளை முகாமையாளர் தரம் V பதவியில் (03) மூன்று வருட கால திருப்திகரமான சேவைக் காலம்.
கிளை முகாமையாளர் தரம் — IV
சம்பளக் குறியீடு : 208 - 14
சம்பள அளவுத்திட்டம் : 32,471 – 160 X 15 – 176 X 15 – 37,511
தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள் :
- 2021.01.01 முதல் நடைமுறைக்கு வரும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 03/2021ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அல்லது கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 02/2016ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் குறைந்தது (04) நான்கு வருட கால திருப்திகரமான சேவை காலம்.
- கூட்டுறவு ஊழியர் உயர்தராதரப்பத்திரத்துடன் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / வணிக நிறுவனம் ஒன்றில் காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் ஆகக்குறைந்தது (02) இரண்டு வருட கால திருப்திகரமான சேவை அனுபவம்.
- க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தியுடன் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / வணிக நிறுவனம் ஒன்றில் காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் (02) இரண்டு வருட கால திருப்திகரமான சேவை அனுபவம்.
- கூட்டுறவுச் சங்கம் ஒன்றில் கிளை முகாமையாளர் தரம் V பதவியில் (02) இரண்டு வருட கால திருப்திகரமான சேவைக் காலம்.
கிளை முகாமையாளர் தரம் — V
சம்பளக் குறியீடு : 208 - 15
சம்பள அளவுத்திட்டம் : 31,993 – 154 X 15 – 165 X 15 – 36,778
தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள் :
- 2021.01.01 முதல் நடைமுறைக்கு வரும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 03/2021ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அல்லது கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 02/2016ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் குறைந்தது (03) மூன்று வருட கால திருப்திகரமான சேவை காலம்.
- கூட்டுறவு ஊழியர் உயர்தராதரப்பத்திரத்துடன் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / வணிக நிறுவனம் ஒன்றில் காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் ஆகக்குறைந்தது (01) ஒரு வருட கால திருப்திகரமான சேவை அனுபவம்.
- க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தியுடன் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / வணிக நிறுவனம் ஒன்றில் காசாளர் / விற்பனை உதவியாளர் பதவியில் (01) ஒரு வருட கால திருப்திகரமான சேவை அனுபவம்.
குறிப்பு :
- விண்ணப்பதாரிகள் அனைவரும் வரைவுள்ள திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் வழங்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களை மாத்திரமே பயன்படுத்துதல் வேண்டும்.
- மேற்படி விண்ணப்பப் படிவங்களைப் பெறவிரும்புகின்ற விண்ணப்பதாரிகள் இல.120, உத்துறைமுக வீதி, திருகோணமலை என்ற முகவரியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் 24.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ள முடியும்.
- பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி : 27.07.2026
- மேலதிக தகவல்களுக்கு அலுவலக தொலைபேசி இலக்கம் 026-2222353 உடன் வாரநாட்களில் தொடர்பு கொள்ளவும்.
கோ. அமிர்தலிங்கம்
தலைவர்,
வரைவுள்ள திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்.
தலைவர்,
வரைவுள்ள திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்.
Tags
Vacancy
