அகரம் Logo
N E W S

இலங்கை தாதியர் சபையில் முகாமைத்துவ உதவியாளர் பதவி விண்ணப்பங்கள் - 2026

இலங்கை தாதியர் சபை

Sri Lanka Nursing Council

முகாமைத்துவ உதவியாளர் வேலை வாய்ப்பு

இலங்கை தாதியர் சபையில் காணப்படுகின்ற முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) பதவிக்கு தகைமையுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன.

தகைமைகள்
  1. க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சையில் ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டுமென்பதுடன், மொழி (சிங்களம்/தமிழ்), ஆங்கிலம், கணிதம் மற்றும் மேலும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  2. க.பொ.த. (உயர் தரம்) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  3. கணனி பாவனை தொடர்பாக செயன்முறை அறிவு மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமொன்றில் 6 மாதத்திற்கு குறையாத சான்றிதழொன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  4. ஆவண விடயங்கள் மற்றும் அலுவலக வேலைகளை மேற்கொள்ளும் ஆற்றல் இருக்க வேண்டும்.
  5. சிறந்த தொடர்பாடல் மற்றும் நபர்களுக்கிடையிலான திறமைகள் இருக்க வேண்டும்.
வயது எல்லை
விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதிக்கு வயது 20 – 40 இற்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் விதம்
மேற்படி தகைமைகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களுடன் கல்வி சான்றிதழ்களின் மற்றும் ஏனைய தொடர்புடைய சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளையும், சுய விபரக்கோவையையும் (CV) கீழுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் 2026.07.10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் 'முகாமைத்துவ உதவியாளர்' என்று பதவியைக் குறிப்பிடல் வேண்டும்.

📄 விண்ணப்பப் படிவம் (Application Form)
அனுப்ப வேண்டிய முகவரி

பதிவாளர்,
இலங்கை தாதியர் சபை,
முதலாம் மாடி, தாதியர் உயர் கல்வி கல்லூரி,
கொழும்பு - 10.

Post a Comment

Previous Post Next Post