N E W S

இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்- வேலைவாய்ப்பு - 2026

அரசாங்க வேலைவாய்ப்பு அறிவிப்பு

இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்
வெற்றிடங்கள்

இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்து மற்றும் சத்திரசிகிச்சைப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஒரே அரச நிறுவனமாகும். தனியார் துறைக்காகவும் மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் முதன்மையான நிறுவனமுமாகும். கீழ்க்குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதி பெற்ற இலங்கைப் பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. முகாமைத்துவ உதவியாளர் (தரக் கட்டுப்பாட்டு உதவியாளர்) — MA 2.1 (III ஆம் தரம்)

தகைமைகள்:

(a) இரசாயன விஞ்ஞானத்திற்காக திறமைச் சித்தியுடன் க.பொ.த. (உ/தர) பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் சித்தி பெற்றிருத்தல்

அத்துடன் — பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இரசாயன விஞ்ஞானத்தை பிரதான பாடமாகக் கொண்ட பல்கலைக்கழகப் பட்டம் ஒன்று

அல்லது

(b) இரசாயன விஞ்ஞானத்திற்காக திறமைச் சித்தியுடன் க.பொ.த. (உ/தர) பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் சித்தி பெற்றிருத்தல்.

அத்துடன் — Institute of Chemistry Ceylon இல் இரசாயன விஞ்ஞான பட்ட நிகழ்ச்சியை பூர்த்தி செய்திருத்தல்.

சம்பள அளவு ரூபா 37,890/- 375/- x 10, 440/- x 7, 620/- x 4, 825/- x 20 - 63,700/-
(தோராயமாக மாதச் சம்பளம் ரூபா 115,914/- அளவாகும்)
வயது வரம்பு 18 - 45 வயது (உயர் வயது வரம்பு உள்ளக விண்ணப்பதாரர்களுக்குப் பொருந்தாது)

2. முகாமைத்துவ உதவியாளர் (உற்பத்தி உதவியாளர்) — MA 1.1 (III ஆம் தரம்)

தகைமைகள்:

(a) (i) க.பொ.த. (சா/தர) பரீட்சையில் இரு முறைகளுக்கும் மேற்படாத தவணைகளில், சிங்களம்/ தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் மேலும் ஒரு பாடம் உட்பட நான்கு திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.

மற்றும்

(ii) க.பொ.த. (உ/தர) (புதிய பாடத் திட்டம்) பரீட்சையில் (பொது பரீட்சை தவிர்த்து) இரசாயன விஞ்ஞான பாடம் உட்பட குறைந்தது 02 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.

அல்லது

(b) (i) க.பொ.த. (உ/தர) (பழைய பாடத் திட்டம்) பரீட்சையில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.

மற்றும்

(ii) கணினி அறிவு

மற்றும்

(iii) அரசு/ அரசு கூட்டுத்தாபனம்/ சபை/ சட்டரீதியான நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் பணிகள் தொடர்பில் 03 ஆண்டுகள் தகைமைக்குப் பின்னரான சேவை அனுபவம்.

சம்பள அளவு ரூபா 34,890/- 375/- x 10, 440/- x 7, 620/- x 4, 825/- x 20 - 60,700/-
(தோராயமாக மாதச் சம்பளம் ரூபா 110,458/- அளவாகும்)
வயது வரம்பு 18 - 45 வயது (உயர் வயது வரம்பு உள்ளக விண்ணப்பதாரர்களுக்குப் பொருந்தாது)

விண்ணப்பதாரர்களுக்கான பொதுத் தகுதிகள்

  1. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  2. பவியின் கடமையை முறையாக மேற்கொள்வதற்குத் தேவையான உடல் மற்றும் உளத் தகைமை இருத்தல் வேண்டும்.
  3. சிறந்த பண்புடையவராக இருத்தல் வேண்டும்.

சலுகைகள்

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதாந்த வருகை கொடுப்பனவு, பெறப்பட்ட விடுப்புகள் பணமாக்கல், வருடாந்த பெறுகை கொடுப்பனவு, நலன்புரி நன்மைகள், மருத்துவ நன்மைகள் மற்றும் ஊழியருக்கும் குடும்பத்திருக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மருத்துவ காப்புறுதி உட்பட பல்வேறு நன்மைகள் உரித்தாகும்.

📋 முக்கிய நிபந்தனைகள்

  • விண்ணப்பத்தில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து விபரங்களும் சரியானது என்பதை விண்ணப்பதாரரால் உறுதி செய்தல் வேண்டும்.
  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சிறந்த பணியிடையமை அல்லது ஒழுக்காறு நடவடிக்கையில் குற்றவாளியாகாதவராக இருத்தல் வேண்டும்.
  • அனைத்து விண்ணப்பங்களும் 2026.07.06 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

பதில் பிரதி பொது முகாமையாளர் (மனித வளம் மற்றும் நிர்வாகம்)
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்,
"மெஹெறவ பியஸ", 16ஆவது மாடி, இல. 41,
கிருலா வீதி, நாராஹேன்பிட்ட,
கொழும்பு 05.

☎ தொலைபேசி இலக்கம்: 0112 320 356/9

மேலதிக தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவித்தலைப் பார்வையிடவும்.

📄 விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய

விண்ணப்ப கடைசி திகதி: 2026.07.06

📌 e-akaram.edu.lk | கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள்

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post