2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சை
பரீட்சைக் காலம் மாற்றப்படவில்லை எனத் தெளிவுபடுத்தல்
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக, கல்வி அமைச்சு பின்வரும் விளக்கங்களை வெளியிட்டுள்ளது.
🔑 முக்கிய காரணங்கள்
📘 பாடத்திட்ட நாட்கள்:
தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் அறிவுரைப் வழிகாட்டியின்படி, உயர் தரப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை
300 நாட்கள்
🏫 கற்பித்தல் நாட்கள்:
2026 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை
343 நாட்கள்
📅 இடைவெளி காலம் (2வது/3வது தடவை மாணவர்கள்):
கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இப்பரீட்சை நடத்தப்படும் நாள் வரையிலான இடைவெளி
4 மாதங்கள் 10 நாட்கள்
✅ அதற்கமைய, 2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதிய காலம் கிடைத்து உள்ளமையினால், குறித்த பரீட்சை நடத்தப்படும் காலப் பகுதியைத் திருத்தியமைக்க வேண்டிய தேவை இல்லை என அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
📋 சுருக்கமான தகவல்கள்
| விபரம் | தகவல் |
|---|---|
| பரீட்சை ஆரம்பம் | 2026 ஆகஸ்ட் 10 |
| பாடத்திட்ட நாட்கள் தேவை | 300 நாட்கள் |
| கற்பித்தல் நாட்கள் (07.08.2026 வரை) | 343 நாட்கள் |
| இடைவெளி (மீள் தோற்றுநர்) | 4 மாதம் 10 நாள் |
| பரீட்சைத் திகதி மாற்றம் | இல்லை |
செயலாளர்,
கல்வி, உயர்கல்வி மற்றும்
தொழிற்கல்வி அமைச்சு

