N E W S

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் - தமிழ் மற்றும் தமிழ்மொழி கற்பித்தலில் சிறப்புக் கலைமாணி - விண்ணப்பம் -2026

🎓 இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

தமிழ் மற்றும் தமிழ்மொழி
கற்பித்தலில் சிறப்புக் கலைமாணி

Bachelor of Arts Special Degree in Tamil & Tamil Language Teaching

🗓️ 2026 / 2027 கல்வியாண்டு
🎯 கற்கைநெறியின் நோக்கங்கள்
  • தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் பிறதுறை சார் விடயங்களில் நிபுணத்துவமுடையவர்களை உருவாக்குதல்
  • ஆரம்பநிலை முதல் உயர்நிலை வகுப்புகள் வரை தமிழ் கற்பிப்பதற்கான கோட்பாடு மற்றும் செயன்முறை அறிவை வழங்குதல்
  • கல்வியியல் மற்றும் வகுப்பறைச் செயன்முறைகளில் அறிவும் திறன்களும் பெறுதல்
  • நவீன தகவல் தொழில்நுட்பத்தை கற்றல் – கற்பித்தலில் பயன்படுத்துதல்
  • தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதற்கான கோட்பாடு மற்றும் செயன்முறை அறிவை வழங்குதல்
  • சிங்கள மொழி, இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றின் கற்றல்–கற்பித்தல் மூலம் சமூக இணைவை மேம்படுத்துதல்
  • மொழிபெயர்ப்புத் திறனை வளர்த்தல்
  • படைப்பாற்றல், புத்தாக்கம், ஊக்கமூட்டல், பயனுள்ள தகவல் தொடர்பு ஆகியவற்றை வளர்த்தல்
  • தமிழ் கற்பித்தலில் ஆராய்ச்சி மேற்கொண்டு கண்டுபிடிப்புகளை வெளியிடுதல்
  • தொழில்சார் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவோர்
👥 யாருக்கானது?
  • தமிழை முதன்மொழி / தாய்மொழி / இரண்டாம் மொழியாகக் கற்பிக்க விரும்புவோர்
  • தற்போது அரசு/தனியார் பாடசாலைகளில் ஆரம்பம், இடைநிலை, உயர்நிலைப் பிரிவுகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள்
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்தலில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற விரும்புவோர்
📋 அனுமதித் தகுதிகள்

அனைத்து விண்ணப்பதாரிகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் கீழ்வரும் ஏதேனும் ஒரு நிபந்தனை பூர்த்தியாக வேண்டும்:

அ)
க.பொ.த உயர்தரத்தில் தமிழ் (பாட எண் 72) உள்ளடங்கலாக மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்
ஆ)
க.பொ.த சாதாரண தரத்தில் தமிழ் & தமிழ் இலக்கியத்தில் (பாட எண் 22) குறைந்தது 'B' தரத்துடன் — மேலும் உயர்தரத்தில் தமிழ்மொழி மூலத்தில் குறைந்தது மூன்று பாடங்களில் சித்தி
இ)
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்பித்தல் (தமிழ்மொழி) தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல்
ஈ)
இலங்கை திறந்த பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சம்மான உயர் தகுதிகளை பெற்றிருத்தல்
📚 கற்கை நெறி விவரங்கள்
கால எல்லை நான்கு வருடங்கள் (குறைந்தபட்சம்)
மட்டம் மட்டம் 03 (பருவம் I & II)
மதிப்பீட்டு முறை தொடர் மதிப்பீடு 40% + இறுதிப் பரீட்சை 60%

⚠️ இறுதிப் பரீட்சையில் 35%க்கு குறைவான புள்ளி பெற்றால் தொடர் மதிப்பீட்டிலிருந்து 40% சேர்க்கப்படமாட்டாது.

💰 பாடநெறிக்கான கட்டணங்கள் — மட்டம் 03
பதிவுக் கட்டணம்ரூ. 500.00
வசதிக் கட்டணம்ரூ. 2,500.00
நூலக வசதிக் கட்டணம்ரூ. 100.00
ஆங்கிலக் கற்கை (ஆரம்ப மட்டம்)ரூ. 3,000.00
தகவல் தொழில்நுட்பக் கற்கைரூ. 5,500.00
30 திறமை மட்டங்கள் (ஒரு மட்டம் ரூ.2,080)ரூ. 62,400.00
மொத்தம்ரூ. 74,000.00

⚠️ மட்டம் 3 இலிருந்து மட்டம் 4, 5, 6 செல்லும்போது தவணைக் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

🏢 பிராந்திய நிலையங்கள்
WP10கொழும்பு
CP20கண்டி
SP30மாத்தறை
NC50அனுராதபுரம்
UP80பதுளை
NW70குருநாகல்
SG90இரத்தினபுரி
NP40யாழ்ப்பாணம்
EP60மட்டக்களப்பு
⭐ தெரிவு செய்யப்பட்ட கற்கை நிலையங்கள்
NP44மன்னார் கற்கை நிலையம்
NP41வவுனியா கற்கை நிலையம்
NP42கிளிநொச்சி கற்கை நிலையம்
EP62திருகோணமலை கற்கை நிலையம்
NW71புத்தளம் கற்கை நிலையம்
CP21ஹட்டன் கற்கை நிலையம்

⚠️ குறித்த கற்கை நிலையத்தில் 15 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருப்பின் மட்டுமே அந்நிலையத்தில் கற்கை ஆரம்பிக்கப்படும். இல்லாவிட்டால் அருகிலுள்ள பிராந்திய நிலையத்தில் தொடரலாம்.

📖 பாட உள்ளடக்கம்
C கட்டாயப் பாடம் (Compulsory) E தேர்வுப் பாடம் (Elective)
மட்டம் 03 — பருவம் I & II
  • தமிழ்மொழி வரலாறு – அறிமுகம் LEU3301C
  • தமிழ் இலக்கிய அறிமுகம் – I LEU3302C
  • தமிழ் இலக்கிய அறிமுகம் – II LEU3303C
  • தமிழ் கல்வெட்டியல் LEU3304C
  • தமிழ்மொழியில் படைப்பாக்க நுட்பங்கள் LEU3305E
  • அறிவியல் தமிழ் – அறிமுகம் LEU3306E
  • இலங்கைசார் கற்கைகள் LEU3307E
  • மொழியும் தொடர்பாடலும் LEU3308C
  • தமிழ் ஓலைச்சுவடியல் – அறிமுகம் LEU3309C
  • சிங்களமொழி – அறிமுகம் LEU3310C
  • தமிழ்மொழியில் நடைமுறை இலக்கணம் LEU3311C
  • உலக இலக்கியம் – அறிமுகம் LEU3312E
  • தமிழ் அகராதியியல் LEU3313E
  • இலங்கையில் மொழிக்கொள்கை LEU3314E
மட்டம் 04 — பருவம் I & II
  • இடைக்காலத் தமிழ் இலக்கியம் LEU4315C
  • சிங்கள இலக்கியம் – அறிமுகம் LEU4316C
  • தமிழ்மொழி வரலாறு LEU4317C
  • நவீன தமிழ் கவிதைகள் LEU4318C
  • தமிழ் நாடகமும் அரங்கியலும் LEU4319E
  • இலங்கையின் கலாசாரப் பாரம்பரியங்கள் LEU4320E
  • மனித உரிமைகளும் மொழியும் LEU4321E
  • தமிழ்மொழியில் நவீனமயமாக்கல் LEU4322C
  • இலக்கிய நயமும் திறனாய்வும் LEU4323C
  • தமிழில் சிறுகதைகள் LEU4324C
  • செவ்வியல் இலக்கியம் LEU4325C
  • நவீன இலக்கியக் கோட்பாடுகள் LEU4326E
  • பிறநாடுகளில் தமிழ்மொழிக் கற்கைகள் LEU4327E
  • இலங்கைச் சமுதாயம் – அறிமுகம் DSU4357E
மட்டம் 05 — பருவம் I & II
  • நவீன மொழியியல் LEU5328C
  • ஈழத்து இலக்கிய வரலாறு – I ILEU5329C
  • தமிழ் நாட்டாரியல் LEU5330C
  • தமிழில் நாவல்கள் LEU5331C
  • இரண்டாம் மொழிப் பெறுகை – கோட்பாடுகள் LEU5332E
  • உள் மொழியியலும் சமூக மொழியியலும் LEU5333E
  • மொழி தொடர்பான கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டுக் கோட்பாடு LEU5334C
  • மொழி வகுப்பறை முகாமைத்துவம் LEU5335C
  • மொழிக் கற்பித்தல் – கற்றலுக்கான தொழில்நுட்பம் LEU5336C
  • தமிழ்மொழியில் பிழை ஆய்வு LEU5337C
  • இலங்கையில் இரண்டாம் மொழியாக தமிழ் கற்பித்தல் – சிக்கல்களும் தீர்வுகளும் LEU5338E
  • ஊடகவியலில் தமிழ்மொழி LEU5339E
  • மனித நடத்தையின் சமூக உளவியல் DSU5351E
மட்டம் 06 — பருவம் I & II
  • கல்வியின் அடிப்படைகள் STU6301C
  • கற்றல் உளவியல் STU6501C
  • கற்பித்தற் பயிற்சி (மட்டம் I & II) LEU6740C
  • ஈழத்து இலக்கிய வரலாறு – II IILEU6341C
  • தமிழ்மொழியில் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளும் நடைமுறைகளும் LEU6342C
  • ஆய்வேடு LEU6943C
⚠️ முக்கிய குறிப்பு: மாணவர்கள் தாங்கள் சித்தியடையத் தவறிய பாடங்களுக்குத் தங்களை மீள்பதிவு செய்துகொள்வதோடு, அப்பாட நெறிக்குரிய கட்டணங்களை மீண்டும் செலுத்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்க.
Application

📞 தொடர்புகளுக்கு

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
நாவல, நுகேகொடை.
✉️ batl@ousl.lk
மொழிக் கற்கைகள் துறை | மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடம்

Post a Comment

Previous Post Next Post