N E W S

க.பொ.த (உயர் தரம்) பரீட்சை 2026: விடைத்தாள் மதிப்பீட்டாளர் விண்ணப்பம்

இலங்கை பரீட்சைத் திணைக்களம்

க.பொ.த (உ/தர) பரீட்சை – 2026
விடைத்தாள் மதிப்பீட்டு பரீட்சகர்கள்
தேர்வுக்கான விண்ணப்பப்படிவம்

All Marking Examiners / சகல மதிப்பீட்டுப் பரீட்சகர்களுக்கான அறிவுறுத்தல்கள்
⏰ விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தேதி:2026.06.22
⚠️

மிக முக்கியம்: கோரப்பட்ட சகல தகவல்களும் சரியாகப் பூரணப்படுத்தப்படல் வேண்டும். பூரணப்படுத்தப்படாத, தவறான தகவல்கள் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் எந்தவித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.

01

விண்ணப்பப்படிவத்தைப் பூரணப்படுத்தல்

1.1

பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்த தற்போது கல்வி அமைச்சின் / மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் பாடசாலைகளில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள் மற்றும் க.பொ.த (உ/தர) விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்ட அனுபவமிக்க ஆசிரிய ஆலோசகர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்:

(அ) விண்ணப்பிக்கும் பாடத்திற்குரிய பட்டத்தினையோ டிப்ளோமா பயிற்சியையோ பெற்றிருப்பதோடு குறித்த பாடத்திற்குரிய பொருத்தமான நியமனம் பெற்ற ஆசிரியராயிருத்தல்.
(ஆ) க.பொ.த (உ/தர) (12, 13 ஆம் தரங்களுக்கு) ஆசிரியராகக் கற்பித்தலில் ஈடுபடல் அல்லது க.பொ.த (உ/தர) குறித்த பாடத்துடன் தொடர்புடைய அதிகாரியாகக் கடமையில் ஈடுபடல்.
🌐 ஆங்கில மொழி (73) பாடம்: ஆங்கில மொழிப் பாட தகுதிகளைக் கொண்ட தேசிய பாடத்திட்டத்தினைக் கற்பிக்கின்ற, தனியார் அல்லது சர்வதேச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் விண்ணப்பிக்க முடியும்.
1.2

Step – 3 இன் கீழ் விண்ணப்பிக்கும் பாடத்திற்குரிய கல்வி மற்றும் தொழிற்தகமைத் தகுதிகளை உள்ளீட்டல் கட்டாயமாகும். அவ்வாறு பூரணப்படுத்தப்படாத விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும்.

1.3

Step – 5 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பூரணப்படுத்துவது கட்டாயமாவதோடு அவ்வாறு பூரணப்படுத்தப்படாத விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும்.

🚫
தற்போது உங்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் நடைபெறுமாயின் அல்லது தாங்கள் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பின் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க முடியாது.
1.4

தாங்கள் அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் பரீட்சைக்கு தோற்றுவாராயின் தங்களால் விண்ணப்பிக்க முடியாது.

👨‍👩‍👧‍👦 குடும்ப உறுப்பினர் என்பவர்: தங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், தங்களினதும் வாழ்க்கைத்துணையினது பெற்றோர் சகோதர சகோதரிகளும், அவர்களது பிள்ளைகளும், தங்கள் அல்லது துணைவரின்/துணைவியின் பெற்றோர் அல்லது சகோதரர்கள் அல்லது அவர்களது பிள்ளைகள் அல்லது தங்கள் வசிப்பிடத்தில் தங்கியிருப்போரும் ஆவர்.
1.5

இரண்டு பாடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே தரப்பட்டுள்ள பாடத் தொகுதிகளுக்கிடையில் மட்டும் விண்ணப்பிக்க முடியும்:

(65) பொறியியல் தொழிநுட்பவியல்
(14) குடிசார் தொழிநுட்பவியல்
(15) பொறிமுறை தொழிநுட்பவியல்
(16) மின், இலத்திரன், தகவல் தொழிநுட்பவியல்
(10) இணைந்த கணிதம்
(11) உயர் கணிதம்
(07) கணிதம்
(02) இரசாயனவியல்
(67) தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம்
(08) விவசாய விஞ்ஞானம்
(18) விவசாய தொழிநுட்பம்
(66) உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல்
1.6

விண்ணப்பப்படிவங்களை நிகழ்நிலையில் (Online) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அரச பாடசாலை ஆசிரியர்களின் விண்ணப்பப்படிவங்கள் நிகழ்நிலையில் அதிபரின் சான்றுபடுத்தலுடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்புவதோடு சான்றுப்படுத்திய விண்ணப்பப்படிவங்கள் தொடர்பில் சாரம்சம் பாடசாலையில் / அலுவலகத்தில் கோவைப்படுத்தி வைக்கவேண்டும்.

1.7

இப்பரீட்சையின் மதிப்பீட்டு நிலையங்கள் பின்வரும் இடங்களில் நிறுவப்படவுள்ளது (மதிப்பீட்டுக் காலம் சுமார் 14 நாட்களாக அமையும்):

01
கொழும்பு
02
மகரகம
08
ஹொரண
10
களுத்துறை
12
நீர்கொழும்பு
13
கம்பஹா
15
இரத்தினபுரி
20
படுளை
25
காலி
27
மாத்தறை
30
குருநாகல்
32
குளியாபிட்டி
35
அனுராதபுரம்
38
கேகாலை
41
கண்டி
50
மட்டக்களப்பு
51
வவுனியா
53
யாழ்ப்பாணம்
📝
போதியளவு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத நகரங்களில் மதிப்பீட்டு நிலையங்கள் நிறுவப்படமாட்டாது. எனவே இரண்டாவது தெரிவையும் குறிப்பிட வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டுக் காலத்தின் போது பரீட்சைத் திணைக்களத்தினால் தங்குமிட வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் முற்கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.

02

விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்தல்

2.1

சகல அரச பாடசாலைகளிலுமுள்ள ஆசிரியர்கள் அதிபரின் சான்றுபடுத்தலின் பின்னர் தமது விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரதியை வைத்திருத்தல் கட்டாயமாகும்.

2.2

புதிய விண்ணப்பதாரிகள் மட்டும் பதிவிறக்கம் செய்த விண்ணப்பப்படிவத்தை Step – 3 இன் கீழ் குறிப்பிட்ட தகுதிகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ் பிரதிகளுடனும் ஆசிரிய நியமனக் கடிதத்தின் பிரதியுடனும் அதிபர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இணைப்பாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதோடு அதன் இணைப்புடன் கூடிய பிரதியொன்றை கோவைப்படுத்தி வைப்பதற்காக பாடசாலைக்கு வழங்கவேண்டும்.


03

விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்தல்

ஆசிரியர்களின் விண்ணப்பப் படிவங்கள் பாடசாலை அதிபராலும்; வலயத்திற்கு இணைக்கப்பட்டுள்ள ஆசிரிய ஆலோசகர்களின் / தவறாளர்களின் விண்ணப்பப்படிவங்கள் வலயக் கல்விப் பணிப்பாளராலும்; கோட்டத்திற்கு இணைக்கப்பட்டுள்ள ஆசிரிய ஆலோசகர்களின் விண்ணப்பப்படிவங்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளராலும்; தனியார் மற்றும் சர்வதேச பாடசாலை ஆசிரியர்களின் விண்ணப்பப்படிவங்கள் நிறுவனத் தலைவர் மூலமாகவும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.


04

விண்ணப்பப்படிவத்தை உறுதிப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் (அதிபர் / நிறுவனத் தலைவர்)

4.1

விண்ணப்பதாரி நிகழ்நிலையில் (Online) குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் யாவும் சரியானவையா என்பதைப் பரிசீலிக்கவும்.

4.2

விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்ட தகவல் சரியானது என்பதை சான்றுப்படுத்தும் சந்தர்ப்பத்தில் தனித்தனியே உறுதிப்படுத்த வேண்டும்.

4.3

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு நிகழ்நிலையில் விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் Verification status இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் கீழ் விண்ணப்பதாரி அரச பாடசாலை ஆசிரியர் அல்லாதுவிடின் அவர் பற்றி தங்களது கணிப்பை பின்வரும் ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிட்டுக் காட்டுதல் வேண்டும்:

மதிப்பீடு ஆங்கில எழுத்து அர்த்தம்
A A சிறப்பானது (Excellent)
B B நன்று (Good)
C C சாதாரணம் (Average)
W W பலவீனம் (Weak)
4.4

இது அந்தரங்க அறிக்கையாகும். சகல அரச பாடசாலை ஆசிரியர்களின் விண்ணப்பப்படிவங்களும் தங்களால் நிகழ்நிலை (Online) முறையில் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

📁 அவ்வாறு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்டு (Download) கோவைப்படுத்தப்பட்டு (புதிய விண்ணப்பதாரிகளெனின் உரிய இணைப்புகளுடன்) உங்கள் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மூலம்: இலங்கை பரீட்சைத் திணைக்களம் | e-akaram.edu.lk

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post