நீர் வளங்கள் சபையில் (Water Resources Board) அரச வேலைவாய்ப்பு - 2026
நீர் வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் நீர் வளங்கள் சபையில் (Water Resources Board) நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் தகுதியுடைய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வெற்றிடங்கள் விவரம்
| பதவி | வெற்றிடங்கள் |
|---|---|
| முகாமையாளர் (கொள்முதல்) (Manager - Procurement) | 01 |
| போக்குவரத்து / தளவாட அலுவலர் (Transport/Logistics Officer) | 01 |
| விசாரணை அலுவலர் (Investigation Officer) | 01 |
| மின்சார பணியாளர் (Electrician) | 01 |
| அலுவலக உதவியாளர் (Office Aid) | 04 |
கல்வித் தகுதிகள்
- முகாமையாளர் (கொள்முதல்): விநியோகச் சங்கிலி முகாமைத்துவம், தளவாட முகாமைத்துவம், வணிக முகாமைத்துவம், கணக்கியல், வணிகம் அல்லது தொடர்புடைய துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன், பட்டம் பெற்ற பின் அந்தத் துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- போக்குவரத்து / தளவாட அலுவலர்: போக்குவரத்து மற்றும் தளவாட முகாமைத்துவத்தில் அல்லது தொடர்புடைய துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
- விசாரணை அலுவலர்: தொடர்புடைய துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
- மின்சார பணியாளர்: தொழிற்கல்வி மற்றும் பயிற்சி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தினால் வழங்கப்படும், NVQ நிலை 4 அல்லது அதற்கு மேற்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர்: க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டும்.
வயது எல்லை
- முகாமையாளர், போக்குவரத்து/தளவாட அலுவலர், விசாரணை அலுவலர்: 22 முதல் 45 வயது வரை.
- மின்சார பணியாளர், அலுவலக உதவியாளர்: 18 முதல் 45 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், சுயவிவரக் குறிப்பு (Bio-Data), சான்றிதழ்களின் பிரதயுடன் இரண்டு தொடர்பு இல்லாத நபர் குறிப்புகள் (Non-related references) ஆகியவற்றை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
- உறைக்கு இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
- அரச துறை ஊழியர்கள் தமது விண்ணப்பங்களை அந்தந்த நிறுவனத்தின் தலைவரின் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்,
நீர் வளங்கள் சபை,
488/A, நாவல வீதி,
கொஸ்வத்தை,
இராஜகிரிய.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 2026 மே 08.
Tags
Vacancy
