தற்போது அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத் தகுதியுடன், தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளதனால் கல்வியியற் கல்லூரிக்காக காத்திருக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
* ஒரு பட்டப்படிப்பை முடித்து வெளியே வர குறைந்தது 4 முதல் 5 வருடங்கள் ஆகலாம். அதன் பின்னரும் போட்டிப் பரீட்சைகள் மூலம் வேலை தேட வேண்டும். ஆனால், கல்வியியற் கல்லூரியில் 3 வருடங்களிலேயே (2 வருடக் கல்வி + 1 வருடப் பயிற்சி) டிப்ளோமா முடிந்து, நான்காவது ஆண்டின் தொடக்கத்தில் நிரந்தர அரச நியமனம் கிடைத்துவிடுகிறது.
* உயர் Z-Score புள்ளி பெற்ற மாணவர்கள் கல்வியியற் கல்லூரிக்குள் நுழையும்போதுசாதாரண தரவரிசை மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.
* ஆசிரியர் தொழிலை மட்டுமே இலக்காகக் கொண்டு தங்களை அதற்கென தயார்படுத்திய நடுத்தர Z-Score மாணவர்கள், மிகச் சிறிய புள்ளி வித்தியாசத்தில் வாய்ப்புகளை இழக்கின்றனர்.
* ஒவ்வொரு வருடமும் கல்வியியற் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு நிகராக உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் கல்வியியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுவது என்பது பெரும் போட்டியாகவே உள்ளது.
