அரசகரும மொழிகள் ஆணைக்குழு - வேலைவாய்ப்பு 2026
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு
அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் பின்வரும் பதவிகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியுள்ள இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பதவி விபரங்கள்
| இல | பதவி | வெற்றிடங்கள் |
|---|---|---|
| 01 | உதவிப் பணிப்பாளர் | 01 |
| 02 | கணக்கு உத்தியோகத்தர் | 01 |
| 03 | மொழிபெயர்ப்பாளர் (சிங்களம்/தமிழ், தமிழ்/ஆங்கிலம், சிங்களம்/ஆங்கிலம்) | 03 |
| 04 | முகாமைத்துவ உதவியாளர் | 03 |
தகைமைகள் சுருக்கம்
- உதவிப் பணிப்பாளர்: மனித வள முகாமைத்துவம், வியாபார நிர்வாகம் அல்லது சட்டம் தொடர்பான பட்டத்துடன் ஒரு வருட அனுபவம்.
- கணக்கு உத்தியோகத்தர்: கணக்கீடு, நிதி அல்லது வணிகம் தொடர்பான பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.
- மொழிபெயர்ப்பாளர்: அந்தந்த மொழிகளில் மொழிபெயர்ப்பு குறித்த பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.
- முகாமைத்துவ உதவியாளர்: க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் (உயர் தரம்) சித்தியுடன் 6 மாத கால கணினி பாடநெறி பூர்த்தி செய்திருத்தல்.
வயதெல்லை (2026.04.02 ஆம் திகதியன்று)
- உதவிப் பணிப்பாளர், கணக்கு உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர்: 22 - 45 வயது.
- முகாமைத்துவ உதவியாளர்: 18 - 45 வயது.
- (உள்வாரி விண்ணப்பதாரிகளுக்கு உச்ச வயதெல்லை நிபந்தனை பொருந்தாது.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 ஏப்ரல் 02
விண்ணப்பிக்கும் முறை
மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை 2026.04.02 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பதிவுத் தபாலில் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் பதவியின் பெயரைக் குறிப்பிடவும்.
முகவரி:
தவிசாளர்,
அரசகரும மொழிகள் ஆணைக்குழு,
09 ஆம் மாடி, ஜனஜயசிட்டி கட்டடத் தொகுதி,
நாவல வீதி, இராஜகிரிய.
தவிசாளர்,
அரசகரும மொழிகள் ஆணைக்குழு,
09 ஆம் மாடி, ஜனஜயசிட்டி கட்டடத் தொகுதி,
நாவல வீதி, இராஜகிரிய.
அறிவித்தல் திகதி: 2026.03.19
Tags
Vacancy
