இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கம்
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு
நிதியளிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை மேம்பாட்டுத் திட்டம்
கடன் ஒப்பந்த இல. SL-P118
1. சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் (HAMSIP) செலவுகளை நோக்கி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் (JICA) இருந்து இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கு கடன் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. உபகரணங்களின் வழங்கலுடன் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உயிர் மருத்துவ பொறியியல் சேவைகள் பிரிவை வலுவூட்டல் மற்றும் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT) பயிற்சிக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கு, 05 மூன்றாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளில் (தே.வை. கண்டி, போ.வை. அனுராதபுரம், போ.வை. குருநாகல், போ.வை. பதுளை மற்றும் ம.பொ.வை. திருகோணமலை) இரு நோய்களின் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக கட்டிட வசதிகள் மற்றும் பெறுகை உபகரணங்களை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உத்தேசித்துள்ளது.
2. இந்தத் திட்டம் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் நிறைவேற்றப்படுவதோடு கொழும்பில் உள்ள திட்ட முகாமைத்துவப் பிரிவின் (PMU) பின்வரும் வெற்றிடங்களுக்காக தகைமை மற்றும் அனுபவம் பெற்ற இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.
| இல. | பதவி நிலை | வெற்றிடங்கள் | 01/2026 ஆம் இலக்க MSD சுற்றறிக்கையின்படி சம்பளப் பிரிவு |
|---|---|---|---|
| 01 | திட்ட பணிப்பாளர் | 01 | A |
| 02 | பிரதித் திட்ட பணிப்பாளர் | 01 | B |
| 03 | பெறுகை நிபுணர் | 01 | C |
| 04 | திட்ட பொறியியலாளர் | 01 | D |
| 05 | திட்ட கணக்காளர் | 01 | D1 |
| 06 | திட்ட செயலாளர் | 01 | F |
| 07 | முகாமைத்துவ உதவியாளர் | 02 | உதவிப் பணியாளர் |
| 08 | ஓட்டுநர் | 02 | உதவிப் பணியாளர் |
| 09 | அலுவலக உதவியாளர் | 02 | உதவிப் பணியாளர் |
3. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- 2026 பெப்ரவரி 02 ஆம் திகதி 01/2026 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் திணைக்கள சுற்றறிக்கையிம், அவ்வப்போதைய திருத்தங்களுக்கு அமைவாக ஊதியம், விதிகள் மற்றும் நிபந்தனைகள் அமையும்.
- விண்ணப்ப இறுதித் திகதிக்கு விண்ணப்பதாரர்கள் அறுபத்து நான்கு (64) வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- நியமனம் ஓர் ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இருத்தல் வேண்டும். திருப்திகரமான செயற்றிறனின் கீழ் திட்ட கால அடிப்படையில் நீடிப்புக்கு உட்பட்டது.
- வெளிநாட்டு நிதியிடல் திட்டங்களில் முந்தைய அனுபவம் அனுகூலமாக அமையும்.
4. விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்
- ஒவ்வொரு பதவிநிலைக்கான விரிவான குறிப்பு விதிமுறைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை https://www.health.gov.lk/moh-pages/vacancies என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து தரவிறக்கம் பெற்ற விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
- அனைத்து விண்ணப்பதாரர்களும் இரு உறவினர் அல்லாத நடுவர்களின் விபரங்கள் மற்றும் அனைத்து தொடர்புடைய சான்றிதழ்களின் பிரதிகளுடன் சுயவிபரக் கோவையை இணைத்து பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பங்களை 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கீழ் தரப்பட்ட முகவரிக்கு பதிவுத் தபால் அல்லது addlseceng@health.gov.lk என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்புதல் வேண்டும்.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு
01வது மாடி, இல. 385, பத்தேகம விமலவங்ச தேரர் மாவத்தை,
கொழும்பு 10.
5. முக்கியமானது
- விண்ணப்பிக்கும் பதவியை கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் மற்றும் மின்னஞ்சலில் Subject பகுதியில் குறிப்பிடுதல் வேண்டும்.
- அரசு துறையின் விண்ணப்பதாரர்கள் குறித்த திணைக்களத் தலைவர் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
- இறுதித் திகதிக்கு தேவையான தகைமைகளை பெற்றிராத அபேட்சகர்களின் விண்ணப்பங்கள் கருத்திற் கொள்ளப்படமாட்டாது.
- முழுமை பெறாத விண்ணப்பங்கள் அல்லது இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- குறுகிய பட்டியலில் சேர்க்கப்பட்ட அபேட்சகர்கள் மாத்திரம் நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்க இன்னும் மீதமுள்ள நேரம்:
